Home
Gadgets

ஜீப்ரானிக்ஸ் ZEB-FIT920CH ஸ்மார்ட் பிட்னெஸ் பேண்ட் மலிவு விலையில் அறிமுகம்.!

ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் புதிய பிட்னெஸ் பேண்ட் மாடலான ஜீப்ரானிக்ஸ் ZEB-FIT920CH மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அமேசானில் எதிர்பார்த்திடாத மலிவு விலையில் வாங்குவதற்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிட்னஸ் டிராக்கர் ZEB-FIT920CH ஸ்மார்ட்வாட்ச் சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய 2 ஸ்டைலான ஸ்ட்ராப்களுடன் வருகிறது.

ஜீப்ரானிக்ஸ் ZEB-FIT920CH ஸ்மார்ட் பிட்னெஸ் பேண்ட் மலிவு விலையில்

ZEB-FIT920CH ஸ்மார்ட் பேண்ட் இதய துடிப்பு சென்சார், ஸ்லீப் மானிட்டர், பெடோமீட்டர், கஸ்டமைஸ் வாட்ச் ஃபேசஸ் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புதிய ஜீப்ரானிக்ஸ் ZEB-FIT920CH ஃபிட்னெஸ் டிராக்கர் சதுர வடிவமைப்பு டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, ஸ்மார்ட் பேண்டின் டிஸ்பிளே கர்வுடு வடிவமைப்புடன் உறுதியான ஸ்ட்ராப்புடன் வசதியான பொருத்தத்தை வழங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

உங்கள் வசதிக்கு ஏற்ப வழக்கமான அடிப்படையில் மாற்றக்கூடிய வாட்ச் கஸ்டமைஸ் பேஸ்களை ஸ்மார்ட் பேண்ட் ஆதரிக்கிறது, ஸ்டெப் கவுண்ட் கால்குலேட்டர், கலோரி கவுண்ட், உங்கள் முன்னேற்றத்தைத் தீவிரமாகக் கண்காணிக்கும் அம்சங்களையும் இந்த புதிய ஜீப்ரானிக்ஸ் ZEB-FIT920CH கொண்டுள்ளது. சாதாரண பயன்பாட்டுடன் பேட்டரி ஆயுள் 7 மணிநேர பயன்பாட்டை வழங்குகிறது. அதேபோல், ஸ்டான் பை மோடில் பேட்டரி ஆயுள் 30 நாட்களுக்கு மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜீப்ரானிக்ஸ் ZEB-FIT920CH ஸ்மார்ட் பேண்டில் பெடோமீட்டர், இதய துடிப்பு கண்காணிப்பு, சேடெண்டரி ரீமைண்டர் அலாரம், கால் ரிஜெக்ட், ஸ்டாப்வாட்ச், பைண்ட் போன், ரிமோட் கேமரா ஷட்டர் போன்ற பல செயல்பாடுகள் இதில் உள்ளது. புதிய ZEB-FIT920CH ஸ்மார்ட் பேண்ட் இப்பொழுது இந்தியாவில் வெறும் ரூ.1699 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Zebronics ZEB-FIT920CH smart fitness band launched for Rs 1699 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X