Home
Gadgets

காளான் வடிவ LED விளக்குடன் கூடிய 5 போர்ட் டாக்கிங் ஹப்பை அறிமுகப்படுதும் ஜீப்ரானிக்ஸ்.!  

இந்த டாக்கிங் ஹப், சுத்தமான மற்றும் சிறிய வடிவமைப்பின் காரணமாக உங்களது அலுவலக மேஜைக்கும் மிகவும் ஏற்றது. 

By Gizbot Bureau

தகவல் தொழில்நுட்ப பாகங்கள், சவுண்ட் சிஸ்டம்ஸ், மொபைல்/ லைஃப் ஸ்டைல் பாகங்கள் மற்றும் சர்வைலன்ஸ் தயாரிப்புகள் உள்ளிட்டவற்றில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜீப்ரானிக்ஸ் இந்தியா லிமிடெட், "ZEB-5CSLU3" என்று பெயரிடப்பட்டிருக்கும் அதன் சமீபத்திய 5 போர்ட் டாக்கிங் ஹப்பை அறிமுகப்படுத்துகிறது. இது துரிதமான சார்ஜ் மற்றும் காளான் வடிவ LED விளக்கு வசதியுடன் வருகிறது.

5 போர்ட் டாக்கிங் ஹப்பை  அறிமுகப்படுதும் ஜீப்ரானிக்ஸ்.!

'டிஜிட்டல் போதை' என்ற வார்த்தை பெரும்பாலும் இரவு நேரங்களில் தங்கள் சமூக வலைதளங்களை ஸ்க்ரோலிங் செய்து கொண்டே இருக்கும் பல மக்களைக் குறித்து கூறப்படுவதைக் கேட்கலாம். திரையில் பார்வையைச் செலுத்தும் நேரத்தைக் குறைக்க வேண்டியது ஆழ்ந்த தூக்கத்திற்கு அவசியம். அதற்கு உங்களது அனைத்து சாதனங்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து துரிதமாக சார்ஜ் செய்வதை விட சிறந்த வழி என்ன இருக்கிறது. அப்போது தான் நீங்கள் ஜென் நிலையில் தூங்கி எழுந்து புத்துணர்வுடன் அன்றைய நாளுக்கு ஏற்றவாறு செயல்பட முடியும்.

'ZEB-5CSLU3'உடன், எங்கள் 5 போர்ட் டாக்கிங் ஸ்டேஷனில், ஒரே நேரத்தில் 5 சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும். இதன் சிறப்பு என்னவெனில், உங்களது சுவர்களில் பல்வேறு வயர்கள் தொங்கிக் கொண்டு ஒழுங்கில்லாமல் இருப்பதைத் தவிர்த்து உங்களது சாதனங்களை அழகாக ஒழுங்குபடுத்தும் வகையில் இருக்க உதவுகிறது. காளான் வடிவ LED விளக்கு உங்களது படுக்கை அறை விளக்கு போல எளிதாகத் தோற்றமளிக்கும்.

உங்களது போன் அல்லது டேப்லெட்டில் பேட்டரி தீர்ந்துவிட்டால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களது சாதனத்தை இந்த 5 போர்ட் டாக்கிங் ஹப்பில் வைத்துவிட்டு உங்களது வேலையைப் பார்க்க சென்று விடலாம், இதன் துரிதமாக சார்ஜ் ஏற்றும் அம்சம் சார்ஜ் ஏற்றத் துவங்கும். துரிதமாக சார்ஜ் ஏற்றும் அம்சம் குறிப்பாக மிகவும் அதிகமாக பல் செயல்பாடுகள் மேற்கொள்ளும் மற்றும் அதிக பேட்டரி நுகரும் சாதனங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த டாக்கிங் ஹப், சுத்தமான மற்றும் சிறிய வடிவமைப்பின் காரணமாக உங்களது அலுவலக மேஜைக்கும் மிகவும் ஏற்றது.

5 போர்ட் டாக்கிங் ஹப்பை  அறிமுகப்படுதும் ஜீப்ரானிக்ஸ்.!

5 USB போர்ட்டுகளுடன் வரும் இந்த சார்ஜிங் டாக் துரிதமான சார்ஜிங்கிற்காக ஸ்மார்டர் IC உடன் வருகிறது. இதில் இருக்கும் பிரித்து எடுக்கக் கூடிய காளான் வடிய LED விளக்கை அதில் இருக்கும் ஆன்/ ஆஃப் சுவிட்சுகளைப் பயன்படுத்தி பயன்படுத்த முடியும். மேலும் இதில் உங்களது அனைத்து மொபைல் மற்றும் டேப்லெட்டுகளை வைப்பதற்கான ஹோல்டரும் இருக்கிறது. இதில் சார்ஜ் ஏற்ற 5 USB போர்ட்டுகள் உள்ளன, அவற்றில் 1-4 வரை 5v ஆதரவும் போர்ட் 5 துரித சார்ஜுக்கான 12v/9v/5v ஆதரவும் கொண்டது. இந்த டாக்கிங் ஸ்டேஷனின்
அதிகபட்ச வெளியீடு 6A ஆகும்.
5 போர்ட் டாக்கிங் ஹப்பை  அறிமுகப்படுதும் ஜீப்ரானிக்ஸ்.!

ஜீப்ரானிக்ஸ் நிறுவன இயக்குனர் திரு. பிரதீப் தோஷி இந்த அறிமுகம் குறித்து, "அதிக வசதிகள் கொண்ட மற்றும் சிறப்பாக செயல்படும்
சாதனங்களுக்கான தேவை மீது கவனம் செலுத்தி இந்த 5 போர்ட் சார்ஜிங் டாக் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது சிறிய வடிவமைப்பில் மிகச்சிறந்த
செயல்திறன் கொண்டது" என்று குறிப்பிட்டார்.

இந்த சார்ஜிங் டாக் வரம்பில் பிரித்து எடுக்கக் கூடிய தடுப்புடன் கூடிய LED விளக்குகள் அமைப்புடன் 4 போர்ட்டுகள் கொண்ட மாடலும் வருகிறது. இந்த தயாரிப்பு இந்தியா முழுவதும் உள்ள முன்னணி கடைகளில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Zebronics ZEB 5CSLU3 a 5 port charging station launched for Rs 3495: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X