பிளிப்கார்ட் சரவெடி ஆஃபர்.. 200 இன்ச்.. கூகுள் டிவி ஓஎஸ்.. நம்ப முடியாத விலையில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை தற்போது நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் 4கே சப்போர்ட் கொண்ட ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 77ஜி ப்ரொஜெக்டர் மாடலுக்கு 71 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,980 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த சாதனத்தை ரூ.14480 விலையில் வாங்கிவிட முடியும்.

ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Zebronics ZEB PixaPlay 77G Projector Specifications): ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் ஃபுல் எச்டி (FHD) 1080p நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K ரெசல்யூஷன் கொண்டுள்ளது.
அதேபோல் 7500 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதி ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளது. குறிப்பாக இது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். அதேபோல் 270 டிகிரி டில்ட் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் இந்த ப்ரொஜெக்டர் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மூலம் 200 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இந்த 100-இன்ச், 150-இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தரமான குவாட் கோர் பிராஸசர் (Quad core processor) உடன் ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இயங்குகிறது இந்த ப்ரொஜெக்டர். எனவே இந்த சாதனத்தில் நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாஸ்டார் (JioHotstar) போன்ற அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும். இதுதவிர கூகுள் காஸ்ட் (Google Cast) மற்றும் டிஆர்எம் எல்1 (DRM L1) போன்ற ஆதரவுகளும் இதில் உள்ளது.

அதுவும் லென்ஸ் ஷீல்டு, ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) உள்ளிட்ட ஆதரவு கொண்டுள்ளது இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல். எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன.
இன்-பில்ட் ஸ்பீக்கர்கள் இந்த சாதனத்தில் உள்ளன. மேலும் இதில் 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். இதுதவிர 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி ஆதரவுடன் ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications
