ஸ்மார்ட் TV-க்கு கும்பிடு.. 130 இன்ச்.. ரூ.4,988 பட்ஜெட்ல 4K ப்ரொஜெக்டர்.. ஆட்டோ கீஸ்டோன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் தொடங்கியுள்ள அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Amazon Great Republic Day Sale 2026) ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்கள் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே (Zebronics PixaPlay) ப்ரொஜெக்டர்கள் மாடல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இதில் 130 இன்ச் 4K ப்ரொஜெக்டர் 67 சதவீத தள்ளுபடியில் கிடைத்துள்ளது.
இப்போது, அமேசான் தளத்தில் ஜெப்ரானிக்ஸ் பிக்சாப்ளே 73 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (Zebronics PixaPlay 73 Android Smart Projector) மாடலுக்கு 67 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.4,988 விலைக்கு கிடைக்கிறது. மேலும், அமேசான் பிரைம் கஸ்மடர்களுக்கு ரூ.623 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு ஜெப்ரானிக்ஸ் பிக்சாப்ளே 73 மாடலை வாங்கலாம்.

ஜெப்ரானிக்ஸ் பிக்சாப்ளே 73 அம்சங்கள் (Zebronics PixaPlay 73 Specifications): 130 இன்ச் (1280 x 720 பிக்சல்கள்) ப்ரொஜெக்சனை இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாப்ளே 73 மாடல் கொடுத்துள்ளது. இது ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் (Smart LED Projector) மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு ஓஎஸ் (Android OS) கொண்டுள்ளது. 200 டிகிரியில் ரோட்டேட் செய்து கொள்ளலாம்.
720p நேட்டிவ் ரெசொலூஷன் (Native Resolution) மற்றும் 4கே சப்போர்ட் (4K Support) கொண்டுள்ளது. 3300 லூமென்ஸ் (Lumens) மற்றும் ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாப்ளே 73 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலில் கிடைக்கிறது. ஓடிடி ஆப்களில் (OTT Apps) நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் ஹாட்ஸ்டார் (Hotstar) கிடைத்துள்ளது.
குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) கொண்ட மாடலாக இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாப்ளே 73 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் இருப்பதால் அல்ட்ரா விவிட் கிளாரிட்டி (Ultra Vivid Clarity) கொடுத்துள்ளது. 200 டிகிரியில் டில்ட் வியூ கிடைப்பதால், எளிதாக அட்ஜட்ஸ்மெண்ட் செய்து கொள்ளலாம். கிளார் ரெடியூசிங் மற்றும் ஆப்டிமல் வியூவிங் (Optimal Viewing) பக்காவாக இருக்கும்.
இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாப்ளே 73 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டரில் கிடைக்கும் எல்இடி லேம்ப்பில் 30,000 மணி நேரங்களுக்கு அவுட்புட் பெற்று கொள்ளலாம். ஆட்டோ கீஸ்டோன் டெக்னாலஜி (Auto Keystone Technology) கிடைத்துள்ளது. ஆனால், இதில் வெர்டிகல் அட்ஜெட்ஸ்மெண்ட்களை மட்டுமே செய்து கொள்ள முடியும். அரிசோன்டல் கிடைக்காது.
ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) கொண்டுள்ளது. ஆகவே, ஸ்மார்ட்போனில் இருந்து வீடியோ மட்டுமல்லாமல், மிரர் மொபைல் கேமிங் (Mirror Mobile Gaming) செய்து கொள்ளலாம். மிராகாஸ்ட் (Miracast) வழியாக இதை செய்து கொள்ளலாம். இந்த கனெக்டிவிட்டி போக ப்ளூடூத் வி5.4 (BT v5.4) மற்றும் வை-பை (Wi-Fi) கனெக்டிவிட்டியை பயன்படுத்தி கொள்ளலாம்.
3W ஆடியோ அவுட் கொண்ட இன்-பில்ட் ஸ்பீக்கரை (In-built Speaker) இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாப்ளே 73 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் கொடுத்துள்ளது. மேலும், யுஎஸ்பி (USB), ஏயூஎக்ஸ் அவுட் (AUX OUT), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port) போன்ற கனெக்டிவிட்டிகளும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. ரிமோட் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம்.
ஓடிடி ஆப்களின் ஹாட்-கீகளுடன் ரிமோட் கொடுக்கப்பட்டுள்ளது. மிராகாஸ்ட் மட்டுமல்லாமல் ஐபோன் மாடல்களுக்கும் ஐஓஎஸ் ஸ்கிரீன் காஸ்டிங் (iOS Screen Casting) கொடுக்கப்பட்டு உள்ளது. வை-பை கனெக்டிவிட்டியில் டூயல் பேண்ட் கனெக்சன் (Dual Band Connection) கொடுக்கப்படும். 465 கிராம் எடை உள்ளது. டேபிள் டாப் மாடலாக இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாப்ளே 73 இருக்கிறது.


Click it and Unblock the Notifications








