அறிமுகமானது புது Zebronics ப்ரொஜெக்டர்.. கம்மி விலை.. ஆட்டோமேட்டிக் கீஸ்டோன்.. 120 இன்ச்.. எந்த மாடல்?
ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (Zebronics PixaPlay 72 Plus projector) மாடலை தற்போது அறிமுகம் செய்துள்ளது. கம்மி பட்ஜெட்டில் தரமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய ப்ரொஜெக்டர் வெளியாகி உள்ளது. இப்போது ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Zebronics PixaPlay 72 Plus projector Specifications): நேட்டிவ் எச்டி ரெசல்யூஷன் மற்றும் ஃபுல் எச்டி 1080 பிக்சல் (Full HD 1080p) ரெசல்யூஷன் ஆதரவைக் கொண்டு இந்த புதிய ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

500:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் 4000 லூமென்ஸ் பிரைட்னஸ் (4000 lumens brightness) அம்சங்கள் ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 14 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடல் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
120 இன்ச் புரொஜெக்சன் சைஸ் கொடுக்கிறது ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் ப்ரொஜெக்டர் . ஆகவே 100 இன்ச் டிவி போன்ற பெரிய டிவி மாடலை வாங்க அவசியம் இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடல் பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
ஆட்டோமேட்டிக் வெர்டிகல் கீஸ்டோன் கரெக்சன் (automatic vertical keystone correction) ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் ப்ரொஜெக்டர் மாடல். அதேபோல் 200 டிகிரி டில்ட் ஆதரவும் இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.
சக்திவாய்ந்த குவாட்-கோர் பிராசஸர் (Quad-core processor) வசதியுடன் ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக மிராகாஸ்ட் (Miracast) ஆதரவுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆணட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மாடலில் அனைத்து ஸ்ட்ரீமிங் ஆப்களையும் பயன்படுத்த முடியும். திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கேமிங் போன்ற அனைத்திற்கும் இந்த சாதனம் மிகவும் அருமையாக பயன்படும்.

பிலட்-இன் ஸ்பீக்கர்கள் ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். டூயல்-பேண்ட் வைஃபை 6,புளூடூத் 5.4,எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏவி இன், AUX அவுட்புட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் ப்ரொஜெக்டர் மாடலி எடை 543 கிராம் ஆகும். இந்த சாதனத்துடன் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது. மேலும் இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் மாடலின் விலை ரூ.5499-ஆக உள்ளது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications