இந்த சான்ஸை விட்றாதீங்க.. 4K சப்போர்ட்.. 150 இன்ச்.. Zebronics ப்ரொஜெக்டர் விலை குறைப்பு.. எந்த மாடல்?
ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 (ZEBRONICS PIXAPLAY 67) 4கே ப்ரொஜெக்டர் ஆனது முன்பு ரூ.13,799 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த ப்ரொஜெக்டர் மாடலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய ப்ரொஜெக்டர் மாடலின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடல் முன்பு ரூ.13799 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த ப்ரொஜெக்டர் மாடலின் விலை குறைக்கப்பட்டு ரூ.11,999 விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனம் அமேசான் தளத்தில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 அம்சங்கள் (ZEBRONICS PIXAPLAY 67 Specifications): ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடலில் 1080p நேட்டிவ் ரெசொலூஷன் மற்றும் 4K சப்போர்ட் ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். மேலும் இந்த சாதனத்தில் 50000 மணி நேர லேம்ப் லைஃப் (50000 Hours Lamp Life) ஆதரவு உள்ளது
8000 லூமென்ஸ் பிரைட்னஸ் வசதி ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடலில் உள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடல் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். மேலும் 200 டிகிரி டில்ட் (200° tilt) ஆதரவும் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம்.
150 இன்ச் புரொஜெக்சன் சைஸ் கொடுக்கிறது ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 ப்ரொஜெக்டர் . ஆகவே பெரிய டிவி மாடலை வாங்க அவசியம் இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடல் பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜெப்ரானிக்ஸ் நிறுவனம்.
குறிப்பாக ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (auto keystone), ஆட்டோ போகஸ் (Auto Focus) ஆதரவுகளைக் கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடல். அதேபோல் இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் பல்வேறு ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமான குவாட்-கோர் பிராசஸர் (Quad-core processor) வசதியுடன் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக மிராகாஸ்ட் (Miracast) ஆதரவுடன் இந்த பிக்ஸாபிளே 67 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

அதேபோல் பில்ட்-இன் பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏவி இன், ஆடியோ ஜாக், ஆர்45 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் BT ரிமோட் ஆதரவு கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடல். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடல் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் விரைவில் பல அட்டகாசமான ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








