Home
Gadgets

இந்த ப்ரொஜெக்டர் மாடலை ஊரே வாங்க போகுது.. 4K சப்போர்ட்.. 120 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. எந்த மாடல்?

4கே சப்போர்ட் மற்றும் 120 இன்ச் ஸ்க்ரீன் சைஸ் ஆதரவு கொண்ட ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 (ZEBRONICS PIXAPLAY 53) மாடல் ஆனது தற்போது அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மாடல் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த சாதனத்துக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது அமேசான் (amazon) தளத்தில் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 மாடலுக்கு 68 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.8,299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 மாடலை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

இந்த ப்ரொஜெக்டர் மாடலை ஊரே வாங்க போகுது.. 4K சப்போர்ட்.. எந்த மாடல்?

ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 அம்சங்கள் (ZEBRONICS PIXAPLAY 53 Specifications): இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 மாடலானது 120 இன்ச் புரொஜெக்சன் கொடுக்கிறது. ஆகவே 100 இன்ச், 75 இன்ச் டிவிகளை வாங்க அவசியம் இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடல் பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

அதேபோல் 3000 லூமென்ஸ் மற்றும் 1080P நேட்டிவ் ரெசொலூஷன் கிடைக்கிறது. இதுபோக 4K சப்போர்ட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 ப்ரொஜெக்டர் மாடல். பின்பு இந்த சாதனத்தில் 50000 மணி நேர லேம்ப் லைஃப் (50000 Hours Lamp Life) ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ கீஸ்டோன் கரெக்ஷன் (auto keystone), ஆட்டோ போகஸ் (Auto Focus) ஆதரவுகளைக் கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடல். அதேபோல் இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் பல ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த குவாட்-கோர் பிராசஸர் (Quad-core processor) வசதியுடன் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக மிராகாஸ்ட் (Miracast) ஆதரவுடன் இந்த பிக்ஸாபிளே 53 மாடல் வெளிவந்துள்ளது.

பில்ட்-இன் பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் வெளியானது.

அதேபோல் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 மாடல் உடன் ரிமோட் ஒன்று கிடைக்கிறது. பெரிய திரை மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த சாதனம் கம்மி விலையில் விற்பனை செய்யப்படுவதால் நம்பி வாங்கலாம்.

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரொஜெக்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய வசதிகளுடன் ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இந்நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Zebronics Pixaplay 53 with 120 Inch Screen Size available 68 percent discount: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X