மிரண்டு போவீங்க.. ரூ.5,949 க்கு 100 இன்ச் ப்ரொஜெக்டர்.. 4000 லூமென்ஸ்.. 4K UHD, ஆட்டோ கீஸ்டோன்.. எந்த மாடல்?
32 இன்ச் டிவி நிர்ணயிக்கப்படும் விலையை விட பாதிக்குப்பாதி விலைக்கு 100 இன்ச் ப்ரொஜெக்டர் கிடைத்தால், விற்பனையில் பட்டையை கிளப்பாமல் இருக்குமா? அப்படியான தள்ளுபடி விலைக்கு ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 35 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் (Zebronics Pixaplay 35 Smart LED Projector) வாங்கி கொள்ள கிடைக்கிறது.
இந்திய மார்கெட்டில் ப்ரொஜெக்டர் மாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் ப்ரொஜெக்டர் மாடல்கள் மட்டுமே விற்பனையில் பட்டையை கிளப்புகின்றன. ஏனென்றால், இது டைம் பாஸ் செய்ய வீடியோக்களை பார்க்கும் கஸ்டமர்களுக்கு ஏற்றபடி இருக்கிறது. பீச்சர்கள் குறைவாக இருந்தாலும் 100 இன்ச் ப்ரொஜெக்சன் கிடைக்கும்.

இப்படியான விலைக்கு ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 35 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. 60 சதவீத தள்ளுபடி போக ரூ.5,999 விலைக்கு அமேசான் தளத்தில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி போக ரூ.178 கேஷ்பேக் மற்றும் யுபிஐ பேமெண்ட்களுக்கு ரூ.50 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு இந்த பிக்சாபிளே 35 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது.
ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 35 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Zebronics Pixaplay 35 Smart LED Projector Specifications): குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) கொண்ட மாடலாக இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 35 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை கொடுத்து இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (Android 11 OS) கிடைக்கிறது.
ஆகவே, டிவிக்கு நிகரான அவுட்புட்டை இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 35 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டரில் எதிர்பார்க்கலாம். ஆப் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) உள்ளிட்ட ஓடிடி ஆப்களின் சப்போர்ட் எதிர்பார்பார்க்கலாம். மிராகாஸ்டு (Miracast), ஐஓஎஸ் ஸ்கிரீன் மிரரிங் (iOS Screen Mirroring) கிடைக்கிறது.
100 இன்ச் வரையில் இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 35 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடல் வழியாக ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். 30,000 மணி நேரங்களுக்கு லேம்ப் லைவ் கொடுக்கிறது. 4000 லூமென்ஸ் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி (4K UHD) சப்போர்ட் கொடுத்து இருக்கிறது. 1280 x 720 பிக்சல்கள் நேட்டிவ் ரெசொலூஷன் (Native Resolution) கிடைக்கிறது.
240 டிகிரியில் டில்ட் செய்து கொள்ள முடியும். ஆட்டோ கீஸ்டோன் அடாப்ஷன் (Auto Keystone Adaptation) கொண்ட மாடலாக இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 35 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. பில்ட்-இன் ஸ்பீக்கர் (Built-In Speaker) கிடைக்கிறது. மேலும், வை-பை 6 (Wi-Fi 6) கிடைக்கிறது. இதில் டூயல் பேண்ட் கனெக்டிவிட்டி (Dual Band Connectivity) கிடைக்கும்.
ப்ளூடூத் வெர்ஷன் வி5.4 (Bluetooth Version v5.4) கொடுக்கப்பட்டு உள்ளது. இதுபோக எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), யூஎஸ்பி போர்ட் (USB Port) ஆகிய கனெக்டிவிட்டிகளையும் இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 35 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் கொடுத்து இருக்கிறது. மலிவான விலைக்கு தேவையான பீச்சர்களுடன் 100 இன்ச் ப்ரொஜெக்டன் வேண்டுமானால், இந்த மாடலை தேர்வு செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications