Home
Gadgets

வாங்குனா இதை வாங்கனும்.. 200 இன்ச்.. 69 சதவீத ஆஃபரில் Zebronics ப்ரொஜெக்டர்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2026 (Amazon Great Indian Festival Sale 2026) என்னும் சிறப்பு சேலில் ப்ரொஜெக்டர் மாடல்களுக்கு நம்ப முடியாத தள்ளுபடி கிடைக்கிறது. இதில் 200 இன்ச் ப்ரொஜெக்சன் கொடுக்கும் ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 (Zebronics PixaPlay 18) மாடல் தள்ளுபடி விலையில் பட்டையை கிளப்பி வருகிறது.

இப்போது, ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 ப்ரொஜெக்டருக்கு அமேசான் தளத்தில் 69 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.13,499 விலைக்கு வாங்கலாம். அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் இருந்தால் ரூ.403 கேஷ் பேக் கிடைக்கும். மேலும், 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையிலும் இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 மாடலை வாங்கி கொள்ளலாம்.

வாங்குனா இதை வாங்கனும்.. 200 இன்ச்.. 69 சதவீத ஆஃபரில் Zebronics!

ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 அம்சங்கள் (Zebronics PixaPlay 18 Specifications): ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 ப்ரொஜெக்டர் மாடலில் எல்இடி (LED) டிஸ்பிளே டெக்னாலஜி வழங்கப்பட்டுள்ளது. இந்த ப்ரொஜெக்டர் 1080p நேட்டிவ் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இதன் மூலம் தெளிவாக வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும். மேலும், வீட்டிலேயே பெரிய ஸ்கிரீனில் மூவிக்கள் மற்றும் வீடியோக்களைப் பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த ப்ரொஜெக்டர் பயனுள்ளதாக இருக்கும்.

7200 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதியுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளது. இதன் மூலம் கேமிங் (Gaming), ஓடிடி (OTT) மற்றும் கால்பந்து மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளைப் பெரிய ஸ்கிரீனில் பார்த்தாலும், அதற்கு ஏற்ப அவுட்புட் கிடைக்கும். ஹோம் தியேட்டர் அனுபவத்தை பெற விரும்புபவர்களுக்கு இந்த மாடல் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

இந்த ப்ரொஜெக்டர் மூலம் அதிகபட்சமாக 200 இன்ச் வரையில் ஸ்கிரீன் புரொஜெக்சனை உருவாக்க முடியும். இதனால் பெரிய ஸ்கிரீன் அனுபவத்தை பெற தனியாக அதிக விலை கொடுத்து டிவிகளை வாங்க வேண்டிய அவசியம் குறையும். மேலும், இந்த ப்ரொஜெக்டருடன் ரிமோட் கண்ட்ரோலும் வழங்கப்படுகிறது. இந்த ரிமோட்டுடன் ப்ரொஜெக்டரின் கன்ட்ரோல்களை எளிதாக செய்து கொள்ள முடியும்.

குவாட் கோர் பிராசஸர் (Quad-Core Processor) வசதியுடன் ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 ப்ரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு (Smart Android) சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு ஓடிடி தளங்களை அணுகி மூவிக்கள் மற்றும் வெப் சீரிஸ்களைப் பார்க்க முடியும். எனவே, தனியாக டிவி அல்லது ஸ்மார்ட்போனை இணைக்காமல் நேரடியாக ஓடிடிக்களை பயன்படுத்தலாம்.

மிராகாஸ்ட் (Miracast) மற்றும் ஐஓஎஸ் ஸ்கிரீன் மிரரிங் (iOS Screen Mirroring) வசதிகளும் இந்த ப்ரொஜெக்டரில் உள்ளன. இதன் மூலம் ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவில் உள்ள கன்டென்ட்களை பெரிய ஸ்கிரீனில் பார்க்க முடியும். மேலும், ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ் மற்றும் செட்-டாப் பாக்ஸ் உள்ளிட்டவற்றை கனெக்ட் செய்து கொள்ளும்படியான பீச்சர்களையும் இது கொடுக்கிறது.

டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட ஸ்பீக்கர்கள் இந்த ப்ரொஜெக்டரில் இடம்பெற்றுள்ளன. இதனால் மூவிக்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும்போது போதுமான அளவுக்கு ஆடியோ அனுபவத்தை பெற முடியும். மேலும், இதில் 30,000 மணி நேரம் வரை பயன்படுத்தக்கூடிய எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) வழங்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட கால பயன்பாட்டிற்கு இந்த ப்ரொஜெக்டர் ஏற்றதாக இருக்கும்.

எலக்ட்ரானிக் ஃபோகஸ் (Electronic Focus) மற்றும் ஸ்மார்ட் வெர்டிகல் கரெக்சன் வசதிகளும் இந்த மாடலில் உள்ளன. இவை ஸ்கிரீனில் ஃபோகஸ் செய்யவும், வீடியோக்கள் சரியான வடிவத்தில் தெரியும்படி சரிசெய்யவும் உதவும். மேலும், எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத் 5.1 மற்றும் டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X