தூக்குங்கடா அந்த தங்கத்த.. 64 சதவீத ஆஃபரில் 200 இன்ச் புரொஜெக்டர்.. 8200 லுமென்ஸ் பிரைட்னஸ்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தின் வாவ் டீலில் 200 இன்ச் வரையில் புரொஜெக்சன் கொடுக்கும் புரொஜெக்டர்கள் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. இதில் ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 (Zebronics PIXAPLAY 18) புரொஜெக்டர் பாதிக்கும் மேல் டிஸ்கவுண்ட் விலையில் கிடைக்கிறது. இந்த பிக்சாபிளே 18 மாடலின் விலை, டிஸ்கவுண்ட் மற்றும் பீச்சர்களை பார்க்கலாம்.
இந்த வாவ் டீலில் ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் (Zebronics PIXAPLAY 18 Android Smart LED Projector) மாடலுக்கு 64 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,799 விலைக்கு வாங்கி கொள்ள முடியும்.

ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 அம்சங்கள் (Zebronics PIXAPLAY 18 Specifications): இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 18 புரொஜெக்டர் மாடலில் குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 ஓஎஸ் (Android 9.0 OS) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி ஆதரவை இந்த புரொஜெக்டர் கொண்டுள்ளது.
இதோடு கிளியர் வீடியோ அவுட்புட் கொடுக்க 1080p நேட்டிவ் ரெசொலுஷன் (Native Resolution) வருகிறது. இதில் எல்இடி டிஸ்பிளே (LED Display) டெக்னாலஜி கொடுக்கப்பட்டுள்ளதால், 1920 x 1080 பிக்சல்கள் மற்றும் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷனில் வீடியோக்களைத் தெளிவாகப் பார்க்கலாம். இந்த புரொஜெக்டரில் 30,000 மணி நேரங்களுக்கு லேம்ப் லைப் (Lamp Life) கிடைக்கும்.
கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, டூயல் பேண்ட் வை-பை (Dual Band Connectivity) மற்றும் ப்ளூடூத் வி5.1 (Bluetooth v5.1) கனெக்டிவிட்டி சப்போர்ட் கிடைக்கிறது. இந்த மாடலில் 200 இன்ச் வரையில் பிரம்மாண்டமாக புரொஜெக்சன் செய்து கொள்ள முடியும். இதற்காக 1.5 மீட்டர் முதல் 5.9 மீட்டர்கள் வரையில் புரொஜெக்சன் தூரம் கொடுக்கப்பட்டு உள்ளது.
8200 லுமென்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், யுஎஸ்பி (USB), எச்டிஎம்ஐ இன் (HDMI IN), ஏயூஎக்ஸ் அவுட் (AUX OUT) ஆகிய போர்ட்களுடன், எளிதாகக் கட்டுப்படுத்த ரிமோட் கன்ட்ரோல் (Remote Control) வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளது. வெர்டிகல் ப்ரொஜெக்டர் (Vertical Projector) மாடலாக இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 விற்பனைக்கு கிடைக்கிறது.
இதை ஸ்மார்ட்போன் (Smartphone), டேப்லெட் (Tablet) மற்றும் லேப்டாப் (Laptop) ஆகியவற்றின் ஸ்கிரீன்களில் எளிதாக கனெக்ட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இதில் பில்ட்-இன் ஸ்பீக்கர் கிடைப்பதால், அவுட்டோரிலும் இதைத் தாராளமாகப் பயன்படுத்தி கொள்ள முடியும். எங்கும் எளிதாக எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் கேரி ஸ்ட்ராப் (Carry Strap) கிடைக்கிறது.
மேலும், சீலிங் மவுண்டபிள் (Ceiling Mountable) மற்றும் பில்ட்-இன் ஸ்பீக்கர் (Built in Speaker) ஆகியவை இதில் கிடைக்கின்றன. கூடுதல் ஆடியோ தேவைப்பட்டால் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) பயன்படுத்தி கொள்ள முடியும். டிவி விலையை விட மலிவாகவும், 200 இன்ச் வரையில் பெரிய புரொஜெக்சனும் கொடுக்கும் நிலையில், இப்போது ஆஃபரில் மீண்டும் விலை குறைந்திருப்பதால் இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 மாடலுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
