சிறியதாக இருந்தாலும், தலைசிறந்த அனுபவம் வழங்குகிறது - ஜெப்ரானிக்ஸ் பேஷன் ப்ளூடூத் ஸ்பீக்கர் விமர்சனம்

தற்போது தலைசிறந்த ஆடியோவினை அனுபவிக்க மிகப்பெரிய சாதனங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.

By Lekhaka
|

தொழில்நுட்ப வளர்ச்சி நம் கற்பனைகளை கடந்து நமக்கு சவுகரியத்தை வழங்க பல்வேறு மாற்றங்களுக்கு வழி செய்துள்ளது. வீட்டு பொழுதுபோக்கு சந்தை பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. முன்பு ஒரு காலத்தில் வீட்டையே ஆக்கிரமித்துக் கொள்ளும் ஹோம் தியேட்டர் சிஸ்டம்கள், சப் ஊஃபர்கள் மற்றும் டவர் ஸ்பீக்கர்களை பயன்படுத்தி வந்தோம்.

தற்போது தலைசிறந்த ஆடியோவினை அனுபவிக்க மிகப்பெரிய சாதனங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. பல்வேறு பொருட்கள் நம் கையடக்க அளவுகளில் நம்மால் எளிமையாக வாங்கக்கூடிய விலையில் கிடைக்கின்றன.

நன்மைகள்

நன்மைகள்

குறைந்த எடை | சிறிதளவு பேஸ் ரென்டர் | சிறப்பான ஆடியோ அவுட்புட் | பல்வேறு அம்சங்கள்

இதையும் செய்திருக்கலாம்

அதிக சத்தம் வைத்தால் சிறிதளவு இரைச்சல் ஏற்படுகிறது | வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கி இருக்கலாம்

இதேபோன்று, இந்தியாவைச் சேர்ந்த ஐடி உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருக்கும் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக ப்ளூடூத் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் விலை குறைந்த ஸ்பீக்கர்களில் ஒன்றாக ஜெப்ரானிக்ஸ் பேஷன் இருக்கிறது.

இந்தியாவில் ரூ.899 விலையில் கிடைக்கும் வயர்லெஸ் ஸ்பீக்கரில் யு.எஸ்.பி. கேபிள் மற்றும் ஆக்ஸ் கேபிள் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளன.

ஃபேப்ரிக் ஃபினிஷ் வடிவமைப்பு ப்ரீமியம் தோற்றத்தை வழங்குகிறது

ஃபேப்ரிக் ஃபினிஷ் வடிவமைப்பு ப்ரீமியம் தோற்றத்தை வழங்குகிறது

ஜெப்ரானிக்ஸ் பேஷன் எடை குறைவாகவும், கைகளில் அடக்கமாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த எடை 164 கிராம் ஆகும். ஃபேப்ரிக் ஃபினிஷ் மற்றும் மிளிரும் சில்வர் நிற ஓரங்கள் ப்ரீமியம் தோற்றத்தை வழங்குகிறது அதுவும் பட்ஜெட் விலையில். பேக்பேக் அல்லது விருப்பம் போல் எடுத்துச் செல்ல ஏதுவாக ரப்பரால்் ஆன டேக் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

முன்பக்கம் ஜெப்ரானிக்ஸ் லோகோ மெட்டாலிக் ஃபினிஷ் ஸ்பீக்கரின் முழு வடிவமைப்புடன் ஒன்றியிருக்கிறது. நம்மிடம் ஸ்பீக்கரின் ஆரஞ்சு நிற வேரியன்ட் ஜெப்ரானிக்ஸ் பேஷன் ஸ்பீக்கர் இருக்கிறது. எனினும் இந்த ஸ்பீக்கர் பெய்க், பேல் புளு மற்றும் பேல் கிரீன் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது.

 மிக எளிமையாக பேர் ஆகிறது

மிக எளிமையாக பேர் ஆகிறது

பின்புறத்தில் ஸ்பீக்கரை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் போர்ட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் ஆக்ஸ் கனெக்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. அழைப்புகளை மேற்கொள்ள ஏதுவாக மைக்ரோபோன் மற்றும் ரீசெட் பின் ஓட்டை வழங்கப்பட்டுள்ளது. மட்டமான இடங்களில் வைக்கும் போது உறுதியாக இருக்க ஏதுவாக ரப்பரால் ஆன ஆன்டி-ஸ்லிப் க்ரிப் ரிங் வழங்கப்பட்டுள்ளது. மேல்புறம் வால்யூம் கன்ட்ரோல்கள் மற்றும் பவர், பிளே, பாஸ் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது.


மிக எளிமையாக பேர் ஆகிறது
ஸ்மாார்ட்போனுடன் ஸ்பீக்கரை இணைப்பது பற்றி பார்க்கும் போது, இதனை இணைப்பது எளிமையாகவே இருக்கிறது. பவர் பட்டனை அழுத்தி சிறிது நேரம் தொடர்ச்சியாக பிடிக்க வேண்டும். பின் ஸ்பீக்கர் ப்ளூடூத் மோடில் இருப்பதை உணர்த்தும் சத்தம் கேட்கும். மேலும் நீல நிற எல்இடி இன்டிகேட்டர் முன்பக்கம் மிளிரும். இனி ஸ்மார்ட்போனில் உள்ள ப்ளூடூத் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். அங்கு ZEB-PASSION என்ற பெயரை காண முடியும், அதனை க்ளிக் செய்தால் ஸ்பீக்கர் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டு விடும்.

செயல்திறன் மற்றும் சவுன்ட் தரம்

செயல்திறன் மற்றும் சவுன்ட் தரம்

எனது பயன்பாட்டின் போது, ஜெப்ரானிக்ஸ் பேஷன் சிறப்பாகவே இயங்கியது. காம்பேக்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர் சிறப்பான ஆடியோ அவுட்புட் வழங்குகிறது. வழக்கமாக இந்த விலையில் கிடைக்கும் ஸ்பீக்கர்கள் பேஸ் இல்லாமல் ஆடியோவை வெளிப்படுத்தும். இந்த ஸ்பீக்கர் அதிசிறப்பான பேஸ் அவுட்புட் வழங்கவில்லை என்பாலும், இது சிறப்பாகவே வேலை செய்கிறது.

இதன் சவுன்ட் தரம் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் உடன் இணைத்து பாடல்களை கேட்கும் போது சிறப்பான அனுபவம் பெற முடியும். எனினும் உச்சக்கட்ட சத்தம் வைக்கும் போது, சிறிதளவு இரைச்சல் ஏற்படுகிறது. வாய்ஸ் காலிங்கின் போது ஸ்பீக்கரை பயன்படுத்தினேன், அப்போதும் ஆடியோ தரம் சிறப்பாக இருந்தது.

ஜெப்ரானிக்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கரின் சுவாரஸ்ய அம்சங்களில் ஒன்றாக இது வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோவுடன் வருகிறது. இதில் எஃப்.எம். சேனல்களை பிளே மற்றும் பாஸ் பட்டன்களை ஒருமுறை க்ளிக் செய்து ஸ்கேன் செய்யலாம்.

 பேட்டரி செயல்பாடு

பேட்டரி செயல்பாடு

பேட்டரி அளவை பொருத்தவரை இந்த சாதனம் தொடர்ச்சியான பயன்பாடுகளில் இரண்டு மணி நேரம் வரை பேக்கப் வழங்கியது. இத்தகைய விலையில் இதுபோன்ற பேக்கப் நேரம் சிறப்பான ஒன்று தான். ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் ஐகான் அருகே பேட்டரி ஐகான் புதிதாக தோன்றுகிறது. இது ஜெப்ரானிக்ஸ் ஸ்பீக்கரின் பேட்டரி அளவை காண்பிக்கிறது. இதனால் ஸ்பீக்கரில் மீதம் இருக்கும் பேட்டரி அளவை தெரிந்து கொள்ள முடியும்.

தீர்ப்பு

தீர்ப்பு

ஒட்டுமொத்தமாக குறைந்த எடையில் பட்ஜெட் விலை போர்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் வேண்டும் எனில், இது உங்களுக்கான ஸ்பீக்கர் தான். இதன் மெல்லிய மற்றும் அழகிய வடிவமைப்பு, முன்பக்கம் ஃபேப்ரிக் ஃபினிஷ் சிறப்பான தோற்றம் கொண்டுள்ளது. மேலும் இதன் சவுன்ட் தரம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் போன்ற அம்சங்கள் இந்த விலையில் கிடைப்பது சிறப்பான ஒன்றாக இருக்கிறது.

எனினும் ஜெப்ரானிக்ஸ் பேஷன் ஸ்பீக்கர் போர்டபிலிட்டியை விரும்புவோருக்கான ஒன்று. இது சிறப்பான தனிப்பட்ட ஸ்பீக்கராக இருக்கும், அந்த வகையில் மிகவும் தலைச்சிறந்த ஆடியோ அனுபவம் பெற விரும்புவோருக்கு இது ஏற்றதாக இருக்காது.

குறிப்பாக, இந்த ஸ்பீக்கர் சந்தையில் கிடைக்கும் மற்ற பிரான்டு பட்ஜெட் விலை ஸ்பீக்கர்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஆனால், இது மற்ற ஸ்பீக்கர்களை விட சிறிதளவு பேஸ் அவுட்புட் வழங்குவதால் தனித்து நிற்கிறது.

Best Mobiles in India

English summary
Zebronics Passion Bluetooth speaker review Compact yet good in performance: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X