Home
Gadgets

35 மணிநேரம் பிளேபேக் வழங்கும் Zebronics Zeb-Sound Bomb Q Pro வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்..

ஜீப்ரானிக்ஸ் (Zebronics) நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் சதனத்தை Zeb-Sound Bomb Q மற்றும் Zeb-SoundBomb Q Pro என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. சார்ஜிங் கேஸ், குவால்காம் aptX, டைப் சி சார்ஜிங் மற்றும் 35 மணிநேர பிளேபேக் அம்சத்தை ஆதரிக்கும் 'ஜீப்-சவுண்ட் பாம்ப் கியூ' இயர்பட்ஸை ஜீப்ரானிக்ஸ் இப்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

ஜீப்-சவுண்ட் பாம்ப் கியூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

ஜீப்-சவுண்ட் பாம்ப் கியூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

ஜீப்-சவுண்ட் பாம்ப் கியூ (Zeb-SoundBomb Q) மற்றும் ஜீப்-சவுண்ட் பாம்ப் கியூ ப்ரோ (Zeb-SoundBomb Q Pro) வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம் பிளிப்கார்ட்டில் இப்பொழுது விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இ-காமர்ஸ் வெப் போர்ட்டல் மற்றும் பிளிப்கார்ட் தளம் வழியாக டிசம்பர் 18 முதல் இந்த இரண்டு புதிய இயர்பட்ஸ் சாதனங்களும் முறையே ரூ .2,799 மற்றும் 3,799 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

சவுண்ட் பாம்ப் கியூ புரோ இயர்பட்ஸ் பிளாக்

சவுண்ட் பாம்ப் கியூ புரோ இயர்பட்ஸ் பிளாக்

நேர்த்தியான மற்றும் இலகுவாக சவுண்ட் பாம்ப் கியூ புரோ இயர்பட்ஸ் பிளாக் மேட் வண்ண விருப்பத்தில் ஒரு தங்க நிற லோகோவுடன் ஜோடியாக ஸ்டீரியோ இயர்பட்ஸ் சாதனமாக வருகிறது. இது காதுடன் கச்சிதமாகப் பொருந்தும் வகையில் மிகவும் உறுதியான ஒரு ஸ்னக் பொருத்தத்துடன் வருகிறது. இது பயனர்களுக்குக் காதில் வலியில்லாமல் அதிகபட்ச வசதியை வழங்கும்படி வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

IPX7 சான்றிதழ்

IPX7 சான்றிதழ்

இந்த இயர்பட்ஸ் இரண்டும் IPX7 சான்றிதழ் பெற்றது, மேலும் இதன் இன்-இயர் வடிவமைப்பு பாஸிவ் நாய்ஸ் கான்சலேஷன் அனுபவத்தையும் வழங்குகிறது. ஜீப்-சவுண்ட் பாம்ப் கியூ மற்றும் ஜீப்-சவுண்ட் பாம்ப் கியூ ப்ரோ ஆகிய இரண்டு இயர்பட்ஸ்களும் ஆடியோ அனுபவத்தை 6 முதல் 8 மணிநேரம் வரை தடையில்லாமல் வழங்குகிறது. மேம்படுத்த ஆழ்ந்த பாஸுடன் இவை வருகின்றது.

35 மணிநேர பிளேபேக்

35 மணிநேர பிளேபேக்

சார்ஜ்ர் கேஸுடன் இதன் பிளேபேக் நேரத்தை பயனர்கள் 35 மணிநேரம் வரை நீடித்து பயன்படுத்தலாம் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் தரமான ஆடியோ ஸ்ட்ரீமிங்கிற்கான குவால்காம் aptX வழங்கப்பட்டுள்ளது. IPX7 சான்றிதழ் மற்றும் டச் கண்ட்ரோல் உடன், அண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களுடன் இணையும்படி உருவாக்கப்பட்டுள்ளது. வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவும் இதில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Zebronics launches ZEB-Sound Bomb Q and ZEB-Sound Bomb Q Pro wireless earbuds : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X