மலிவு விலையில் கிடைக்கும் புதிய Zebronics ZEB-FIT2220CH ஸ்மார்ட் ஃபிட்னெஸ் பேண்ட்..

|

உலக கேட்ஜெட்ஸ் சந்தையில் இப்பொழுது ஸ்மார்ட்போனிற்கு அடுத்தபடியாக ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தின் விற்பனை தான் அதிகரித்துள்ளது. இன்னும் சரியாக சொல்ல போனால் ஸ்மார்ட் வாட்ச் மீதான மக்களின் மோகம் அதிகரித்துவிட்டது. ஸ்மார்ட் திறனுடன் இருக்கும் எதோ ஒரு ஸ்மார்ட்வாட்சையாவது குறைந்த விலையில் வாங்கி கையில் அணிந்துகொள்ள வேண்டும் என்றே பலரின் எண்ணம் இருக்கிறது. இதற்குச் சான்றாக அனைத்து முன்னணி டெக் நிறுவனங்களும் புதிய ஸ்மார்ட் பேண்ட் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

புதிய ZEB-FIT2220CH ஸ்மார்ட் வாட்ச்

புதிய ZEB-FIT2220CH ஸ்மார்ட் வாட்ச்

அந்த வரிசையில் இப்பொழுது முன்னணி நிறுவனங்களுடன் நேரடி போட்டியில் களமிறங்கியுள்ளது Zebronics நிறுவனம். இப்பொழுது Zebronics நிறுவனம் அதன் அடுத்த புதிய ZEB-FIT2220CH என்ற ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ZEB-FIT2220CH ஸ்மார்ட் ஃபிட்னெஸ் பேண்ட், Sp02 & இரத்த அழுத்த கண்காணிப்பு போன்ற கூடுதல் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் இது இளைஞர்களை இலக்காகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை என்ன தெரியுமா?

விலை என்ன தெரியுமா?

புதிய ZEB-FIT2220CH ஸ்மார்ட் வாட்ச் வெவ்வேறு வண்ண வகைகளில் கிடைக்கிறது. ரோஸ் கோல்டு ஸ்ட்ராப் உடன் கோல்டு கேஸ் டயல் உடன் வருகிறது. பிளாக் ஸ்ட்ராப் உடன் பிளாக் டயல் விருப்பத்தில் வருகிறது மற்றும் கேடட் க்ரெய் ஸ்ட்ராப் உடன் சில்வர் டயல் மாடலுடன் வருகிறது. இது அமேசானில் இப்போது வெறும் ரூ. 2,999 என்ற அறிமுக விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை வாங்க விரும்பும் பயனர்கள் அமேசான் இந்தியா தளத்திற்குச் செல்லலாம் அல்லது Zebronics நிறுவனத்தின் வலைத்தளத்தில் வாங்கலாம்.

இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த "மர்மம்" அவிழ்க்கப்பட்டது.!

ZEB-FIT2220CH ஸ்மார்ட் ஃபிட்னெஸ் பேண்ட்

ZEB-FIT2220CH ஸ்மார்ட் ஃபிட்னெஸ் பேண்ட்

ZEB-FIT2220CH ஸ்மார்ட் ஃபிட்னெஸ் பேண்ட் ZEB-FIT 20 சீரிஸ் ஆப்ஸ் உடன் வருகிறது, இது உங்கள் உடற்பயிற்சி இலக்கை நோக்கி உங்களை ஊக்குவிக்கிறது. இந்த ஸ்மார்ட் ஃபிட்னெஸ் பேண்ட் 3.3cm, TFT முழு-டச் அம்சம் கொண்ட வண்ண காட்சி டிஸ்பிளேவை ஒரு ஸ்டைலான விளிம்பு மற்றும் ரவுண்ட் டயல் கொண்டு அறிமுகம் செய்துள்ளது. பெடோமீட்டர், இதய துடிப்பு மானிட்டர், கலோரி கால்குலேட்டர், டிஸ்டன்ட்ஸ் டிராக்கர், ஸ்லீப் மானிட்டர் மற்றும் சேடெண்டரி நினைவூட்டல் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

ரிமோட் கேமரா ஷட்டர் அம்சம்

ரிமோட் கேமரா ஷட்டர் அம்சம்

உடற்பயிற்சி அம்சங்களைத் தவிர, தனிப்பயனாக்கப்பட்ட விருப்பங்களுடன் முன்பே உருவாக்கப்பட்ட வாட்ச் பேஸ் உடன் இந்த ஃபிட்னெஸ் பேண்ட் வருகிறது. இத்துடன் வாட்ச் பேஸை நீங்களே கஸ்டமைஸ் செய்யும் விருப்பமும் வழங்கப்பட்டுள்ளது. இரத்த அழுத்தம் மற்றும் பயணத்தின்போது Sp02 கண்காணிப்பு ஆகியவை அத்தியாவசிய அம்சங்களாகும். ஃபிட்னஸ் பேண்ட் காலர் ஐடி, கால் ரெஜெக்ஷன் விருப்பம், அலாரம், ரிமோட் கேமரா ஷட்டர் மற்றும் இசைக் கட்டுப்பாடு போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

என் பொண்டாட்டிக்கு 'இது' தெரிஞ்சா சோழி முடிஞ்சிரும்.. ப்ளீஸ் சொல்லாதீங்க என்று கெஞ்சிய கணவர்.. ஏன் தெரியுமா?என் பொண்டாட்டிக்கு 'இது' தெரிஞ்சா சோழி முடிஞ்சிரும்.. ப்ளீஸ் சொல்லாதீங்க என்று கெஞ்சிய கணவர்.. ஏன் தெரியுமா?

8 ஸ்போர்ட்ஸ் மோடு

8 ஸ்போர்ட்ஸ் மோடு

இப்படி ஒரு மலிவு விலையில் இதை தேவையான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ZEB-FIT2220CH ஃபிட்னெஸ் பேண்ட்டை நீங்கள், உங்கள் தொலைபேசியுடன் இணைந்தவுடன் செயல்பாடுகளை தொலைவிலிருந்து கட்டுப்படுத்தலாம். வால்கிங், ரன்னிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங், பேட்மிட்டன், பாஸ்கெட்பால், புட்பால், ஸ்விமிங் போன்ற 8 ஸ்போர்ட்ஸ் மோடுளையும் இந்த பேண்ட் ஆதரிக்கிறது. இது IP68 சான்றளிக்கப்பட்ட வாட்டர் ரெஸிஸ்டண்ட் அம்சத்துடன் வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Zebronics Launched New ZEB-FIT2220CH Smart Watch In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X