100 இன்ச் 4K ப்ரொஜெக்டர் விலை தாறுமாறாக குறைப்பு.. ஆட்டோ கீஸ்டோன்.. OTT.. எந்த மாடல்?
ஜெப்ரானிக்ஸ் (Zebronics) நிறுவனத்தின் ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் விலை குறைப்பில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக ஆட்டோ கீஸ்டோன், ஓடிடி, பில்ட்-இன்-ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. இப்போது இந்த சாதனத்தின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் (Zebronics Android Smart LED Projector) ஆனது முன்பு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனல் தற்போது அமேசான் தளத்தில் இந்த ப்ரொஜெக்டர் மாடலின் விலை குறைக்கப்பட்டு ரூ.5,299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்துக்கு கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Zebronics Android Smart LED Projector Specifications): 4K அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடல். எனவே இந்த சாதனம் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். அதுவும் இது ஒரு கிளியர் அவுட்புட் கொடுக்கும் எல்இடி (LED) ப்ரொஜெக்டர் ஆகும்.
ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடலில் 4000 லுமன்ஸ் பிரைட்னஸ்(Lumens Brightness) வசதி உள்ளது. அதுவும் கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிக அருமையாகப் பயன்படும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மூலம் 100 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இந்த 85 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ப்ரொஜெக்டர் உடன் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கும்.
தரமான குவாட் கோர் பிராஸசர் (Quad core processor) உடன் ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு (Smart Android) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த ப்ரொஜெக்டர். எனவே இந்த சாதனத்தில் அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும்.
240 டிகிரி டில்ட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம். மேலும் மிராகாஸ்ட் (Miracast) சப்போர்ட் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (screen mirroring) சப்போர்ட் கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் 4கே ப்ரொஜெக்டர் மாடல். பின்பு இந்த புரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ்,மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம்.

ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) ஆதரவுடன் வெளிவந்துள்ளது ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடல். எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத் வி5.4, டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன.
பில்ட்-இன்-ஸ்பீக்கர்கள் இந்த சாதனத்தில் உள்ளன. மேலும் இதில் 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் அனைத்து சிறப்பான வசதிகளும் இந்த சாதனத்தில் உள்ளன.


Click it and Unblock the Notifications








