வெளுத்துக் கட்டும் அமேசான்.. 250 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு 13 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (Zebronics Android 13 Projector) மாடல் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் 4கே அல்ட்ரா எச்டி ஆதரவு, 250 இன்ச் ஸ்கிரீன், ஆட்டோ போகஸ், உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த சாதனத்துக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது அமேசான் தளத்தில் ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு 13 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலுக்கு 71 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த மாடலை ரூ.11499 விலையில் இந்த சாதனத்தை வாங்கிவிட முடியும்.

ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு 13 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Zebronics Android 13 Projector Specifications): 1920x1080 பிக்சல்ஸ் மற்றும் 4K அல்ட்ரா எச்டி ஆதரவுடன் இந்த புதிய ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு 13 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் 250 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே ஒரு மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த ஜெப்ரானிக்ஸ் புரொஜெக்டர்.
ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு 13 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் ஆனது 12000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதியை வழங்குகிறது. பின்பு இதில் உள்ள உள்ள எல்இடி லாம்ப் மூலம் 30,000 ஹவர்ஸ் லைப்-லாங் அவுட்புட் பெற்று கொள்ளலாம். கிரிஸ்டல் கிளியர் விஷூவல், விவிட் (vivid) சப்போர்ட் வழங்குகிறது இந்த ப்ரொஜெக்டர். எனவே இதன் மூலம் துல்லியமான வீடியோக்களை பார்க்கலாம்.
90° டில்ட் ஆதரவை வழங்குகிறது இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு 13 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல். மேலும் குவாட் கோர் பிராசஸர் உடன் இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செய்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) ஆதரவுகளும் இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு 13 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), போன்ற பல ஓடிடி (OTT) ஆப்ஸ்களை இந்த ப்ரொஜெக்டரில் பயன்படுத்த முடியும்.
வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring) ஆதரவும் இதில் உள்ளது. இதுதவிர ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு 13 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம்.

புளூடூத் வி5.4, டூயல் பேண்ட் வைஃபை, I/O போர்ட்கள், ஏயூஎக்ஸ்(AUX), எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு 13 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. பின்பு இந்த சாதனத்துடன் ஒரு ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது.
குறிப்பாக கேமிங் பயனர்களை கவரும் வகையில் பல மேம்பட்ட அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு 13 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








