Home
Gadgets

100 இன்ச் TV கதை காலி.. ரூ.17,999 க்கு 200 இன்ச் 4K ப்ரொஜெக்டர்.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆட்டோ போகஸ்.. எந்த மாடல்?

ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஜெப் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (ZEB PixaPlay 77G Smart Projector) இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 100 இன்ச் டிவிக்கு நிகரான பீச்சர்களுடன் அதைவிட பல மடங்கு மலிவான விலைக்கு கிடைக்கிறது. இந்த ஜெப் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இன்டோர் ப்ரொஜெக்டர் மாடல்களுக்கு இந்திய மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மலிவான விலைக்கு ஹோம் தியேட்டர் அனுபவத்தை ப்ரொஜெக்டர்களை தவிர வேறு எதிலும் எதிர்பார்க்க முடியாது. இதில் ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஜெப் பிக்சாபிளே மாடல்கள் 200 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் கொடுத்து விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது.

100 இன்ச் TV கதை காலி.. ரூ.17,999 க்கு 200 இன்ச் 4K ப்ரொஜெக்டர்!

இப்போது, 7500 லுமென்ஸ் பிரைட்னஸ் கொண்ட மாடலாக ஜெப் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது. 1080p நேட்டிவ் ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 4K ரெசொலூஷன் சப்போர்ட் கொண்டுள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வழங்கப்பட்டு உள்ளதால், ஸ்மார்ட் டிவிகளுக்கு நிகரான பயனர் அனுபவத்தை எதிர்பார்க்க முடிகிறது.

ஆகவே, ஓடிடி பிரியர்களுக்கான நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாஸ்டார் (JioHotstar) போன்ற ஓடிடி ஆப்களை இன்-பில்ட்டாக பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் போன்ற டிவைஸ்களில் இருந்து எளிதாக ஜெப் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டரை கனெக்ட் செய்து கொள்ளலாம்.

டிவிகளில் கிடைக்கும் வயர்டு மற்றும் வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளையும் கொடுத்து உள்ளது. 200 இன்ச் ப்ரொஜெக்சன் கொடுக்கப்பட்டு இருப்பதால், ஆட்டோ கீஸ்டோன், ஆட்டோ போகஸ் போன்ற முக்கியமான ப்ரொஜெக்சன் பீச்சர்களையும் இந்த ஜெப் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கொண்டுள்ளது. முழு பீச்சர்களுக்கு பிறகு விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஜெப் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (ZEB PixaPlay 77G Smart Projector Specifications): ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷனில் 200 இன்ச் ப்ரொஜெக்சன் கிடைக்கிறது. ஆகவே, 1080p (1920 x1080 பிக்சல்கள்) நேட்டிவ் ரெசொலூஷன் மற்றும் 4K ரெசொலூஷன் சப்போர்ட் கொடுத்து உள்ளது. 7500 லுமென்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) கிடைத்து உள்ளது.

பேப்ரிக் ஃபினிஷிங் மற்றும் கையில் எடுத்து சென்று பயன்படுத்தும்படி ஹேண்டில் கொடுக்கப்பட்டு உள்ளது. 270 டிகிரி டில்ட் சப்போர்ட் கொண்டுள்ளது. லென்ஸ் ஷீல்டு கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ ஸ்கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) கொடுத்து உள்ளது. குவாட் கோர் ப்ரொசஸர் (Quad Core Processor) கொடுக்கப்பட்டு உள்ளது.

2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த ஜெப் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கொடுத்து இருக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 11 (Android 11) சப்போர்ட் கிடைக்கிறது. கூகுள் காஸ்ட் (Google Cast) மற்றும் டிஆர்எம் எல்1 (DRM L1) கிடைத்து உள்ளது. இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், ஹாட் கீகளுடன் ரிமோட் கொடுக்கப்பட்டு உள்ளது.

இன்-பில்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கனெக்டிவிட்டி உள்ளது. டூயல்-பேண்ட் வை-பை, எச்டிஎம்ஐ, யுஎஸ்பி மற்றும் ஆடியோ ஜாக் கிடைக்கிறது. 30000 மணி நேரங்களுக்கு லாம்ப் லைப் கிடைக்கிறது. அறிமுக விலையாக ரூ.17,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள கிடைக்கிறது. அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ZEB PixaPlay 77G Smart Projector 200 inch Projection Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X