தட்டித் தூக்குங்க! ரூ.23,000க்கு 50 இன்ச் Smart TV வாங்கலாம்: ஒன்னு ரெண்டு இல்ல பட்டியலை பாருங்க..

|

ஸ்மார்ட் டிவிகள் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் மனிதர்களை ஆட்கொண்டு வருவது போல் ஸ்மார்ட்டிவிகள் ஒவ்வொரு வீடுகளை ஆட்கொண்டு வருகிறது. ஸ்மார்ட்டிவிகளில் பிரபல அடிப்படை மாடலாக 32 இன்ச் இருக்கிறது. பலரது வீட்டிலும் 32 இன்ச் மாடல் தான் இருக்கிறது. நீங்கள் உங்கள் ஸ்மார்ட்டிவியை மேம்படுத்த திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும்.

50 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்

50 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்

உங்கள் டிவியை மேம்படுத்த திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும். பிளிப்கார்ட்டில் 50 இன்ச் ஸ்மார்ட்டிவிகள் ரூ.23,999 முதல் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிகளானது அல்ட்ரா எச்டி 4கே தர அம்சம் உள்ளிட்ட பல மேம்பட்ட ஆதரவுகள் இருக்கிறது. ஸ்மார்ட்டிவிகளின் பட்டியல் மற்றும் விலையை விரிவாக பார்க்கலாம்.

Vu GloLED 50 inch Ultra HD TV

Vu GloLED 50 inch Ultra HD TV

Vu GloLED 50 inch ஸ்மார்ட்டிவியானது பெயர் குறிப்பிடுவது போல் 50 இன்ச் அளவு டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஆதரவைக் கொண்டுள்ளது. 104 வாட்ஸ் ஆதரவு கொண்ட டிஜே சப்வூஃபர் ஸ்பீக்கர்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த டிவியின் டிஸ்ப்ளே.

இந்த ஸ்மார்ட்டிவியானது 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்டிவி இயக்கப்படுகிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் 2 யூஎஸ்பி போர்ட் இணைப்பு ஆதரவுகளாக இருக்கிறது.

Vu GloLED விலை

Vu GloLED விலை

Vu GloLED 50 inch Ultra HD TV ஆனது ரூ.55,000 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ரூ.33,999 என பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 38 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகிய பல ஓடிடி ஸ்ட்ரீமிங் ஆதரவுகள் இதில் வழங்கப்பட்டுள்ளது.

Mi X Series 50 inch Ultra HD TV

Mi X Series 50 inch Ultra HD TV

Mi X Series ஸ்மார்ட்டிவி ஆனது அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியில் 50 இன்ச் அளவிலான டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியானது 2022 மாடல் ஆகும். 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் டால்பி விஷன் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்டிவியின் டிஸ்ப்ளே. எம்ஐ எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் ஸ்மார்ட்டிவியானது 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்டிவி இயக்கப்படுகிறது.

எம்ஐ எக்ஸ் சீரிஸ் விலை

எம்ஐ எக்ஸ் சீரிஸ் விலை

இந்த ஸ்மார்ட்டிவியில் டூயல் 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரூ.44,999 என விற்கப்பட்ட ஸ்மார்ட்டிவியானது தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.34,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 22 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக வங்கி சலுகைகளும் உண்டு.

Compaq Ultra HD LED TV

Compaq Ultra HD LED TV

Compaq Ultra HD LED TV ஆனது 50 இன்ச் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியின் டிஸ்ப்ளே ஆனது அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியானது ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் என பல ஸ்ட்ரீமிங் தள ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்டிவி.

Compaq Ultra HD LED TV இன் டிஸ்ப்ளே ஆனது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு மற்றும் 300 நிட்ஸ் பிரகாசத்தைக் கொண்டுள்ளது. 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இதில் இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது இந்த ஸ்மார்ட்டிவி.

தள்ளுபடி விலையில் Compaq Ultra HD LED TV

தள்ளுபடி விலையில் Compaq Ultra HD LED TV

இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.43,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.23,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு பிளிப்கார்ட்டில் 45 சதவீத சலுகைகள் வழங்கப்படுகிறது. கூடுதலாக வங்கித் தள்ளுபடிகளும் கிடைக்கிறது.

Thomson OATHPRO Max Ultra HD TV

Thomson OATHPRO Max Ultra HD TV

Thomson OATHPRO Max ஸ்மார்ட்டிவியானது 50 இன்ச் டிஸ்ப்ளே அளவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஆதரவைக் கொண்டுள்ளது. டால்பி எம்எஸ்12 ஆதரவு கொண்ட 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் என பல ஓடிடி ஸ்ட்ரீமிங் தள ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்டிவி. எச்டிஆர் 10+ ஆதரவுடன் 500 நிட்ஸ் பிரகாச நிலை 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது இதன் டிஸ்ப்ளே.

Thomson OATHPRO Max ஸ்மார்ட்டிவிக்கு தள்ளுபடி

Thomson OATHPRO Max ஸ்மார்ட்டிவிக்கு தள்ளுபடி

இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.46,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.25,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு பிளிப்கார்ட்டில் 44 சதவீதம் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. கூடுதலாக வங்கி சலுகைகளும் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
You can buy 50 inch Smart TV at Rs 23,999: Big Display Smart TV available at great discount

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X