Home
Gadgets

சீனாக்காரன் எங்கயோ போய்ட்டான்.. இந்த பவர் பேங்கை பாருங்க.. உங்களுக்கே புரியும்!

சீனா இஸ் லிவ்விங் இன் 2040 (சீனா 2020 இல் வாழ்கிறது) என்கிற மீம்ஸ்களை பார்த்து இருப்பீர்கள். அதாவது தொழில்நுட்ப வளர்ச்சி அடிப்படையில் சீனா எங்கேயோ போய்விட்டது என்பதை குறிக்கும் சில மீம்ஸ்களை பார்த்து இருப்பீர்கள். அப்படி ஒரு சமாச்சாரத்தை தான் பார்க்க உள்ளோம்.

சீன நிறுவனமான (China Company) ஹூவாய், சீன சந்தையில் 100W பாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்ட புதிய பவர் பேங்க் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. வேகமாக சார்ஜிங் செய்யும் திறன் மற்றும் எங்கும் எளிமையாக எடுத்து செல்லக்கூடிய தன்மை ஆகிய இரண்டையும் ஒன்றிணைக்கும் இந்த பவர் பேங்க் மாடல் ஆனது - ஹூவாய் 100W 12000 ஆல்-இன்-ஒன் பவர் பேங்க் (Huawei 100W 12000 all-in-one power bank) என்று அழைக்கப்படுகிறது.

சீனாக்காரன் எங்கயோ போய்ட்டான்.. இந்த பவர் பேங்கை பாருங்க!

பில்ட்-இன் கேபிள் (Built-in Cable) உடன் வரும் இந்த பவர் பேங்க் ஆனது அதன் பெயர் குறிப்பிடுவது போலவே 12000 எம்ஏஎச் பேட்டரியை (12000 mAh Battery) கொண்டு உள்ளது. கூடவே இது ஒரு ஒருங்கிணைந்த யூஎஸ்பி-சி கேபிள் மற்றும் கூடுதலாக ஒரு யூஎஸ்பி-சி போர்ட்டையும் கொண்டுள்ளது. ஆக இதை கொண்டு ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களை சார்ஜ் செய்ய முடியும்

சுவாரசியமாக இந்த பவர் பேங்க்கின் எந்த போர்ட்டும் முழு 100W வேகத்தையும் வெளியேற்ற முடியும். ஹூவாய் நிறுவனத்தின் கூற்றுப்படி இது ஹூவாய் மேட் 70 (Mate 70) அல்லது ஹூவாய் மேட் எக்ஸ்6 (Mate X6) ஆகிய ஸ்மார்ட்போன்களின் பேட்டரியை சுமார் 30 நிமிடங்களில் 85% வரை சார்ஜ் செய்யும்

மேலும் ஒரே நேரத்ததில் இரண்டு டிவைஸ்கள் இணைக்கப்படும்போது, ​​தேவையை பொறுத்து இந்த பவர் பேங்க்கின் பவர் ஆனது 66W + 40W அல்லது 88W + 18W ஆக பிரிக்கப்படும். மேலும் இந்த பவர் பேங்க் ஆனது வெறும் சார்ஜிங் ஸ்பீடை பற்றியது மட்டுமல்ல. அதிக வெப்பம், அதிக மின்னழுத்தம் மற்றும் ஷார்ட் சர்க்யூட்களுக்கு எதிராக இந்த பவர் பேங்கில் - நிகழ்நேர வெப்பநிலை கண்காணிப்பு உட்பட உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

மேலும் ஹூவாய் 100W 12000 ஆல்-இன்-ஒன் பவர் பேங்க்கின் பக்கவாட்டில் உள்ள நான்கு எல்இடி லைட்டுகள் ஆனது மீதமுள்ள பேட்டரியை காட்டும். மேலும் ஹூவாய் ஸ்மார்ட்போன்களை கொண்ட பயனர்கள் கம்பானியன் ஆப் வழியாக கூட இந்த பவர் பேங்கின் ஸ்டேட்டஸை சரிபார்க்கலாம்.

அளவீடுகளில் ஹூவாய் 100W 12000 ஆல்-இன்-ஒன் பவர் பேங்க் ஆனது 130.6 x 68.4 x 15.7 மிமீ உள்ளது மற்றும் எடையில் 237 கிராம் உள்ளது. அதாவது இது இதே பிரிவில் உள்ள மற்ற பவர் பேங்க் மாடல்களை விட ஒப்பீட்டளவில் சிறியதாக உள்ளது. இது சீனாவின் 3சி, இயு-வின் சிஇ மற்றும் சிபி உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெற்றுள்ளது - அதாவது இது விமான பயணத்திற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்!

என்ன விலை? சீனாவில் இதன் விலை நிர்ணயம் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.4,950 ஆகும். இந்த பவர் பேங்க் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீன விற்பனை வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இருப்பினும் உலகளாவிய வெளியீட்டிற்கான திட்டங்களை ஹூவாய் நிறுவனம் இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை.

ஒப்பிடுகைகயில் இந்திய சந்தையில் இப்போதைக்கு (அதிகம் பிரபலம் இல்லாத) அங்கர் (Anker) நிறுவனத்தின் 87W மேக்ஸ் பாஸ்ட் சார்ஜிங் தான் மிகவும் வேகமான பாஸ்ட் சார்ஜிங் திறனாக உள்ளது. மேலும் (மிகவும் பிரபலமான) ஷாவ்மீ நிறுவனம் அதிக பட்சமாக 33W வேகத்தையே வழங்குகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. (பி.கு சீன சந்தையில் ஷாவ்மீ 100W க்கு அதிகமான பாஸ்ட் சார்ஜிங் கொண்ட பவர் பேங்க்களை கொண்டுள்ளது; ஆனால் அவைகள் இந்திய சந்தையில் வாங்க கிடைக்காது).

More from GizBot

Best Mobiles in India

English summary
Yes China Is Living in 2040 Huawei Launched 100W 12000mAh All in One Power Bank Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X