விஸ்வரூப விற்பனை.. ரூ.11479 விலை குறைப்பு.. பட்ஜெட்ல 120 இன்ச் டிஸ்பிளே.. ஜேபிஎல் ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?
ஹோம் தியேட்டர் லெவலுக்கு அவுட்புட் வேண்டும், அதே நேரத்தில் பட்ஜெட்டிலும் கிடைக்கனும், அப்படி ஏதாவது புரொஜெக்டர் இருந்தா சொல்லுங்க என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு முழுதாக ரூ.11479 விலை குறைப்புடன் யாபர் டி2 பிளஸ் (Yaber T2 Plus) போர்டபிள் புரொஜெக்டர் வந்துள்ளது. 1080P ரெசொலூஷன், டால்பி ஆடியோ, ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், கூகுள் டிவி மற்றும் யாபர் ஓஎஸ் போன்ற பீச்சர்களில் மிரளவிடுகிறது. இந்த யாபர் டி2 பிளஸ் போர்டபிள் புரொஜெக்டரின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.
எல்இடி டிவிக்கு நிகரான டிஸ்பிளே பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஆடியோவிலும் இந்த யாபர் டி2 பிளஸ் போர்டபிள் புரொஜெக்டர் பட்டையை கிளப்பி இருக்கிறது. ஏனென்றால், ஜேபிஎல் நிறுவனத்தின் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், டால்பி ஆடியோ சப்போர்ட் வருவதால், ஆடியோ குவாலிட்டி கிரிஸ்டல் கிளியராக எதிர்பார்க்கலாம்.

யாபர் டி2 பிளஸ் அம்சங்கள் (Yaber T2 Plus Specifications): இந்த புரொஜெக்டர் எளிதாக ஹேண்டில் செய்யக்கூடிய வகையில் போர்டபிள் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவொரு எல்இடி (LED) மாடலாகும். 1080P ரெசொலூஷன், 450 ஏஎன்எஸ்ஐ லூமென்ஸ் (ANSI Lumens) வருகிறது. இதன் மூலம் 40 இன்ச் முதல் 120 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம்.
அதேபோல 3.63 அடி முதல் 10.89 அடி வரையில் புரொஜெக்சன் கிடைக்கும். இந்த புரொஜெக்சனுக்கான பீச்சர்களை பார்க்கையில், ஆட்டோபோகஸ் (Auto-focus), கீஸ்டோன் (Keystone), ஸ்கிரீன் அலைன்மெண்ட் (Screen Alignment) மற்றும் அப்ஸ்டகிள்ஸ் அவாய்டன்ஸ் (Obstacles Avoidance) சப்போர்ட் வருகிறது. 1.25:1 த்ரோவ் ரேசியோ (Throw Ratio) வருகிறது.
ஆகவே, வீடியோவில் பட்டையை கிளப்பும் அவுட்புட் கிடைக்கும். இந்த யாபர் டி2 பிளஸ் போர்டபிள் புரொஜெக்டரின் ஆடியோவை பார்க்கையில், 8W அவுட்புட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகிறது. இதுவொரு ஜேபிஎல் (JBL) நிறுவனத்தின் தயாரிப்பாகும். மேலும், டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
இதுபோக 16W அவுட்புட் கொண்ட ஹை-பை ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Hi-Fi Stereo Speaker) மற்றும் ப்ளூடூத் ஸ்பீக்கர் (Bluetooth Speakers) கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது. யாபர் ஓஎஸ் (Yaber OS) மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) சப்போர்ட் உள்ளது. இந்த மாடலை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், 2.5 மணி நேரத்துக்கு வீடியோ பிளேபேக் பெறலாம்.
அதேபோல 18 மணி நேரங்களுக்கு மியூசிக் பிளேபேக் கிடைக்கும். ஸ்டான்ட்பை மோடில் 3.5 மணி நேரமும், பவர் ஆன் மோடில் 5.5 மணி நேரமும் சார்ஜிங்குக்கு தேவைப்படும். இந்த யாபர் டி2 பிளஸ் மாடலில் ப்ளூடூத் வி5.0 (Bluetooth v5.0), வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் என்எப்சி ஸ்கிரீன்காஸ்ட் (NFC Screencast) கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது.
மேலும், யுஎஸ்பி போர்ட் (USB Port), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), ஆடியோ அவுட் (Audio Out) கனெக்டிவிட்டிகளும் வருகின்றன. 2.5 கிலோ எடை கொண்டுள்ளது. மேலும், யாபர் ஆப் (Yaber App) சப்போர்ட் உள்ளது. இந்த புரொஜெக்டரின் விலை ரூ. 39,990ஆக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அறிமுக சலுகையாக ரூ.11479 விலை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.
ஆகவே, இந்த யாபர் டி2 பிளஸ் போர்டபிள் புரொஜெக்டரை வெறும் ரூ.28,511 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருகிறது. மிட்-ரேஞ்ச் பீச்சர்களுடன் பட்ஜெட் விலை கொண்ட புரொஜெக்டர் வேண்டுமானால், கூகுள் ஓஎஸ், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் கொண்ட இந்த மாடலை ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








