Home
Gadgets

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. ரூ.13,686 பட்ஜெட்ல 120 இன்ச்.. எச்டிஆர் 10.. புதிய ப்ரொஜெக்டர் அறிமுகம்.. எந்த மாடல்?

யாபர் நிறுவனம் தனது புதிய அதிநவீன யாபர் டி1 ப்ரோ போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் (Yaber T1 Pro Projector) மாடலை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இந்த ப்ரொஜெக்டர் மாடல் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது புதிய யாபர் ப்ரொஜெக்டர் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

யாபர் டி1 ப்ரோ ப்ரொஜெக்டர் அம்சங்கள் ( Yaber T1 Pro Projector Specifications): 1080 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் (1080p resolution) கொண்டுள்ளது யாபர் டி1 ப்ரோ ப்ரொஜெக்டர் மாடல். குறிப்பாக இந்த யாபர் ப்ரொஜெக்டர் 120 இன்ச் ஸ்க்ரீன் சைஸ் (120 inch Screen Size) கொடுக்கும். அதுவும் இந்த யாபர் மாடலில் 40 இன்ச் முதல் 120 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம்.

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. புதிய ப்ரொஜெக்டர் அறிமுகம்.. எந்த மாடல்?

1.18:1 ஷார்ட் த்ரோ ரேசியோ (short-throw ratio) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான யாபர் டி1 ப்ரோ மாடல். பின்பு சிறந்த கான்ட்ராஸ்ட் மற்றும் டார்க் சீன் விசிபிலிட்டி-க்கு எச்டிஆர் 10 (HDR10) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மூலம் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும்.

அதேபோல் ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (auto keystone correction), அப்ஸ்டகில் அவாய்டன்ஸ் (obstacle avoidance) போன்ற பிரத்யேக டெக்னாலஜி உடன் இந்த யாபர் டி1 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. இதுபோன்ற புதிய டெக்னாலஜி துல்லியமாகப் படத்தின் அளவை மாற்ற அனுமதிக்கிறது.

லினக்ஸ் இயங்குதளத்தை (Linux-based operating system) அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய யாபர் டி1 ப்ரோ ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த ப்ரொஜெக்டர் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப், பிரைம் வீடியோ போன்ற பல ஓடிடி தளங்களை நேரடியாக ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது இந்த யாபர் டி1 ப்ரோ ப்ரொஜெக்டர் மாடல். மேலும் TurboSonic ஆடியோ அம்சம் கொண்ட 8W ஸ்பீக்கர்கள் இந்த புதிய ஸ்மார்ட் யாபர் ப்ரொஜெக்டரில் உள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. புதிய ப்ரொஜெக்டர் அறிமுகம்.. எந்த மாடல்?

180° சுழலும் கிம்பல் ஸ்டாண்ட் (180° rotating gimbal stand) உடன் இந்த யாபர் டி1 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த ப்ரொஜெக்டரின் எடை 1.25 கிலோ ஆகும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் மற்றும் விண்டோஸ் சாதனங்களிலிருந்து வயர்லெஸ் ஸ்கிரீன் காஸ்டிங்கை ஆதரிக்கிறது இந்த யாபர் ப்ரொஜெக்டர். மேலும் வைஃபை 6, புளூடூத் 5.4 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ப்ரொஜெக்டரில் மாடலில் உள்ளன.

ஆனால் தற்போது யாபர் டி1 ப்ரோ மாடல் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ப்ரொஜெக்டர் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த யாபர் டி1 ப்ரோ ப்ரொஜெக்டரின் விலை $159.99 (இந்திய மதிப்பில் 13,686) ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Yaber T1 Pro Projector launched: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X