Home
Gadgets

வீட்டுக்கு 1 ஆர்டர்.. 500 இன்ச்.. Hi-Fi ஸ்பீக்கர்கள்.. கம்மி விலையில் 4K புரொஜெக்டர் அறிமுகம்.. எந்த மாடல்?

இந்தியாவில் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் தான் பட்ஜெட் விலையில் 4கே புரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்து வந்தது. இந்நிலையில் போர்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் போட்டி கொடுக்கும் வகையில் யாபர் (Yaber) நிறுவனம் கம்மி விலையில் 4கே புரொஜெக்டர் மாடலை அறிமுகம் செய்து அசத்தி உள்ளது.

அதாவது Yaber நிறுவனம் இந்தியாவில் யாபர் ப்ரோ யு6 மினி ஆண்ட்ராய்டு புரொஜெக்டர் (Yaber Pro U6 Mini Android Projector) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய புரொஜெக்டர் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இதன் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வீட்டுக்கு 1 ஆர்டர்.. கம்மி விலையில் 4K புரொஜெக்டர் அறிமுகம்..

Yaber ப்ரோ யு6 மினி ஆண்ட்ராய்டு புரொஜெக்டர் அம்சங்கள் (Yaber Pro U6 Mini Projector Specification): 4K டிஸ்ப்ளே ரெசல்யூஷன் மற்றும் 1920x1080 பிக்சல்ஸ் ஃபுல் எச்டி நேட்டிவ் ரெசல்யூனை ஆதரிக்கிறது இந்த Yaber ப்ரோ யு6 மினி ஆண்ட்ராய்டு புரொஜெக்டர் மாடல். அதேபோல் இதில் 20000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ (contrast ratio)மற்றும் 99 சதவீதம் என்டிஎஸ்சி (NTSC) டெக்னாலஜி ஆதரவு உள்ளது.

குறிப்பாக இந்த புரொஜெக்டரில் 50 இன்ச் முதல் 500 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் (Customizable Projection Size) கிடைக்கிறது. எனவே இது ஒரு தியோட்டர் அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 15000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான Yaber ப்ரோ யு6 மினி ஆண்ட்ராய்டு புரொஜெக்டர்.

Yaber ப்ரோ யு6 மினி ஆண்ட்ராய்டு புரொஜெக்டரின் SmarEco டெக்னாலஜி மற்றும் எல்இடி லேம்ப் 200,000 மணி நேரங்களுக்கு பேக்கப் லைஃப் கொடுக்கக்கூடியது. அதேபோல் ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த புரொஜெக்டர். பின்பு இந்த புரொஜெக்டருக்கு ரிமோட் கன்ட்ரோல் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ரிமோட் உதவியுடன் தேவையான அளவு ஜூம் செய்து கொள்ள முடியும்.

குறிப்பாக இந்த புரொஜெக்டர் மூலம் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த புரொஜெக்டர் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது Yaber நிறுவனம்.

5ஜி வைஃபை, புளூடூத் வி5.1, எச்டிஎம்ஐ போர்ட், ஏவி, யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடீயோ அவுட்புட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது Yaber ப்ரோ யு6 மினி ஆண்ட்ராய்டு புரொஜெக்டர். எனவே ஸ்மார்ட்போன், லேப்டாப், ஐபேட், பிளேஸ்டேஷன் போன்ற பல்வேறு டிவைஸ்களில் கனெக்ட் செய்து கொள்ளலாம். அதேபோல ஆடியோ டிவைஸ்களையும், இந்த புரொஜெக்டரில் கனெக்ட் செய்துகொள்ள முடியும்.

வீட்டுக்கு 1 ஆர்டர்.. கம்மி விலையில் 4K புரொஜெக்டர் அறிமுகம்..

10W ஹை-ஃபை ஸ்பீக்கர்கள்(Hi-Fi speakers) கொண்டு இந்த Yaber ப்ரோ யு6 மினி ஆண்ட்ராய்டு புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப், டிஸ்னி+, எச்பிஓ மேக்ஸ் போன்ற பல ஸ்ட்ரீமிங் தளங்கள் இதில் ப்ரீலோட் செய்யப்பட்டுள்ளன.

Yaber ப்ரோ யு6 மினி ஆண்ட்ராய்டு புரொஜெக்டரின் விலை ரூ.19,990-ஆக உள்ளது. இந்த புரொஜெக்டரை அமேசான் மற்றும் originshop.co.in தளங்களில் வாங்க முடியும். அதேபோல் சில நாட்களுக்கு முன்பு போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் எல்இடி 4கே புரொஜெக்டர் ஆனது ரூ29,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதை விட இந்த Yaber ப்ரோ யு6 மினி ஆண்ட்ராய்டு புரொஜெக்டர் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Yaber Pro U6 Mini Android Projector Launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X