150 இன்ச் டிஸ்பிளே.. வெறும் ரூ.22,990 போதும்.. JBL ஸ்பீக்கர்கள்.. ஆட்டோ போகஸ்.. ஆட்டோ கீஸ்டோன்.. எந்த மாடல்?
150 இன்ச் டிஸ்பிளே ப்ரொஜெக்சன் மட்டுமல்லாமல், ஸ்மார்ட் ஓஎஸ், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், ஆட்டோ கீஸ்டோன், ஆட்டோ போகஸ், வை-பை 6 கனெக்டிவிட்டி போன்ற பீச்சர்களுடன் யாபர் எல்2 பிளஸ் (Yaber L2 Plus) ப்ரொஜெக்டர் இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. அவுட்டோர் அவுட்புட் கிடைப்பதால், ரோட்டேட்டபிள் ஸ்டாண்ட் கிடைக்கிறது. 50 சதவீத டிஜிட்டல் ஜூமிங், அப்ஸ்டகில் அவாய்டன்ஸ் கொடுக்கும் இந்த யாபர் எல்2 பிளஸ் ப்ரொஜெக்டரின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பட்ஜெட்டில் அவுட்டோர் ப்ரொஜெக்டர் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு ஏற்ப யாபர் எல்2 பிளஸ் போர்டபிள் அவுட்டோர் ப்ரொஜெக்டர் களமிறங்கி இருக்கிறது. 1080p நேட்டிவ் ரெசொலூஷன் மற்றும் 4K என்ஹான்ஸ்டு ரெசொலூஷன் கொண்ட மாடலாக விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் இப்போது ஆர்டருக்கு வருகிறது.

யாபர் எல்2 பிளஸ் அம்சங்கள் (Yaber L2 Plus Specifications): இதுவொரு போர்டபிள் அவுட்டோர் ப்ரொஜெக்டர் மாடலாக இருப்பதால், ரேட்டேட்டபிள் ஸ்டாண்ட் (Rotatable Stand) கிடைக்கிறது. டேபிள் மவுண்ட் அல்லது வால் மவுண்ட் செய்து கொள்ளலாம். அதற்கான அடாப்டபிள் செப்டப் கிடைக்கிறது. டிஸ்பிளேவில் 40 முதல் 150 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம்.
ஆகவே, ஹோம் தியேட்டருக்கு நிகரான டிஸ்பிளே அனுபவம் கிடைக்கும். ஏனென்றால், 1080p நேட்டிவ் ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 4K என்ஹான்ஸ்டு ரொசொலூஷன் கிடைக்கிறது. இதுபோக 700 ஏஎன்எஸ்ஐ லூமென்ஸ் (ANSI Lumens) மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. பெரிய ஸ்கிரீன் கிடைப்பதால், ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது.
அதேபோல ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) சப்போர்ட் கொடுக்கிறது. இதுபோக இன்டலிஜென்ட் ஸ்கிரீன் அலைன்மெண்ட் (Intelligent Screen Alignment) மற்றும் இன்டலிஜென்ட் அப்ஸ்டகில் அவாய்டன்ஸ் (Intelligent Obstacle Avoidance) கிடைக்கிறது. இந்த ஸ்கிரீனில் 50 சதவீத டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. இந்த யாபர் எல்2 பிளஸ் மாடலில் ஸ்மார்ட் ஓஎஸ் (Smart OS) கிடைக்கிறது.

இந்த ஓஎஸ் மூலம் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) போன்ற ஓடிடி ஆப்கள் இன்-பில்ட்டாக கிடைக்கின்றன. இந்த போர்டபிள் அவுட்டோர் ப்ரொஜெக்டர் மாடலில் வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. அதேபோல எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB), ஆடியோ ஜாக் (Audio Jack) போர்ட்களும் வருகின்றன.
8W ஆடியோ அவுட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இந்த ஸ்பீக்கர்கள் ஜேபிஎல் (JBL) பிராண்ட்டாகும். ஆகவே, அவுட்புட் பிரீமியமாக இருக்கும். இந்த யாபர் எல்2 பிளஸ் போர்டபிள் அவுட்டோர் ப்ரொஜெக்டர் மாடலில் 35db லோவ் லெவல் நாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கிறது. ஆகவே, நாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கிறது. இப்போது, விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த யாபர் எல்2 பிளஸ் போர்டபிள் ப்ரொஜெக்டரின் மார்கெட் விலை ரூ.23,990ஆக இருக்கிறது. அறிமுக சலுகையில் ரூ.22,990 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இந்த விலையில் அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதேபோல Originshop.co.in தளத்தில் ஆர்டர் செய்தால், லிமிடெட் சலுகையில் ரூ.21,550 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற பீச்சர்களை இது மாடல் கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications