Home
Gadgets

வீட்டுக்கு 1 ஆர்டர்.. 200 இன்ச் டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. ஜேபிஎல் ஸ்பீக்கர்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

200 இன்ச் டிஸ்பிளே புரொஜெக்சன், 1600 ஏஎன்எஸ்ஐ லூமென்ஸ், ஆட்டோ போகஸ், ஆட்டோ கீஸ்டோன், 30W ஆடியோ அவுட், டால்பி ஆடியோ மற்றும் ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் யாபர் கே3 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (Yaber K3 Smart Projector) களமிறங்கி இருக்கிறது. இதுபோக ஆண்ட்ராய்டு டிவிக்கு துளியும் குறையில்லாத அவுட்புட் கொடுக்க கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது. இந்த மாடலின் முழு பீச்சர்கள், விலை, விற்பனை விவரங்கள் இதோ.

ஹோம் தியேட்டருக்கு நிகரான அவுட்புட் வேண்டுமானால், ரூ.80,000 பட்ஜெட்டுக்கு மேல் கிடைக்கும் ப்ரொஜெக்டர்களுக்கு மட்டுமே செல்ல வேண்டி இருக்கிறது. ஆனால், அந்த பட்ஜெட்டில் கிடைக்கும் பீச்சர்களை யாபர் நிறுவனம், அதற்கு பாதிக்குப்பாதி விலை கம்மியாக இருக்கும் மாடல்களிலேயே கொடுக்கிறது. இப்போது, யாபர் கே3 மாடலை அறிமுகம் செய்துள்ளது.

வீட்டுக்கு 1 ஆர்டர்.. 200 இன்ச் டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

யாபர் கே3 அம்சங்கள் (Yaber K3 Specifications): இந்த யாபர் மாடலில் 40 இன்ச் முதல் 200 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். 1080P ரெசொலூஷன் கொண்ட எல்இடி (LED) அவுட்புட் கிடைக்கிறது. மேலும், 1600 ஏஎன்எஸ்ஐ லூமென்ஸ் (ANSI Lumens) வருகிறது. பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் ஆட்டோ ஸ்கீஸ்டோன் (Auto Keystone) உள்ளது.

மேலும், ஸ்கிரீன் அலைன்மெண்ட்(Screen Alignment) செய்து கொள்ள கிடைக்கிறது. இதுபோக ஆப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance) கொடுக்கப்படுகிறது. இந்த பீச்சர்கள் மூலம் இன்டோர் மட்டுமல்லாமல், அவுட்டோரிலும் எளிதாக ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். இதற்கு ஏற்ப ஆடியோவிலும் யாபர் கே3 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் பட்டையை கிளப்பி இருக்கிறது.

ஏனென்றால், 30W ஆடியோ அவுட் மட்டுமல்லாமல், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் (JBL Speakers) கிடைக்கின்றன. ஆகவே, ஆடியோ அவுட் பிரீமியமாக இருக்கும். இதுபோக டால்பி ஆடியோ (Dolby Audio) குவாலிட்டியான ஆடியோவை பெற்று கொள்ளலாம். பில்ட்-இன் கூகுள் டிவி ஓஎஸ் (Built-in Google TV OS) கிடைக்கிறது. ஆகவே, கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) கிடைக்கிறது.

இதுபோக அமேசான் அலெக்சா (Amazon Alexa) வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேலும், கூகுள் ஆப் ஸ்டோர்களில் கிடைக்கும் யூடியூப், நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் கிடைக்கிறது. கிட்டத்தட்ட டிவிக்கு நிகரான அனைத்து ஸ்மார்ட் பீச்சர்களையும் யாபர் கே3 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலில் பெற்று கொள்ளலாம்.

மேலும், பில்ட்-இன் டான்கிள் (Built-in TV Dongle) பயன்படுத்தி கொள்ளலாம். கனெக்டிவிட்டி பீச்சர்களை பார்க்கையில், ப்ளூடூத் வி5.0 (Bluetooth v5.0), வை-பை 6 (Wi-Fi 6), என்எப்சி (NFC), ஸ்கிரீன்காஸ்ட் (Screencast) போன்றவை கிடைக்கின்றன. போர்ட்களை பார்க்கையில், வழக்கமான எச்டிஎம்ஐ மற்றும் யுஎஸ்பி போர்ட் கிடைக்கிறது. மேலும், இயர்போன் அவுட், எல்ஏஎன் கிடைக்கிறது.

டெக்னாலஜிகளை பொறுத்தவரையில், கூல்ஸ்விப்ட்டிஎம் கூலிங் டெக்னாலஜி (CoolSwiftTM Cooling Technology), நோவாகுளோவ்டிஎம் ஆப்டிகல் டெக்னாலஜி (NovaGlowTM Optical Technology) கிடைக்கிறது. இந்த யாபர் கே3 ஸ்மார்ட் ப்ரொஜெக்டரில் விலை ரூ.59,990ஆக இருக்கிறது. அறிமுக சலுகையில் ரூ.42,990 பட்ஜெட்டில் கிடைக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Yaber K3 Smart Projector With 30W Audio Launched Sale From Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X