4K ரெசொலூஷன்.. JBL ஸ்பீக்கர்கள்.. Dolby ஆடியோ.. வாங்க தூண்டும் குவாலிட்டி.. பட்ஜெட் விலை வேற!
ஒரு லட்சத்துக்கும் மேல் விலை கொண்ட ஆண்ட்ராய்ட் டிவிகளில் இருக்கும் அம்சங்கள் மட்டுமல்லாமல், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் (JBL Speaker), டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் உடன் யபெர் (Yaber) நிறுவனத்தின் யபெர் கே2 எஸ் அவுட்டோர் ப்ரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நம்மில் பெரும்பாலானோருக்கு ப்ரொஜெக்டர் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும். மலிவான விலையில் கிடைக்கும் ப்ரொஜெக்டர்களை வாங்கி, அதில், வீடியோ மற்றும் ஆடியோ குவாலிட்டி கிடைக்காமல் நிறைப்பேர் "ஏண்டா வாங்குனோம்" என்று அதிருப்தி கூட அடைந்திருப்பார்கள். இதனால், கொஞ்சம் அதிகமான பணம் கொடுத்துகூட நல்ல ப்ரொஜெக்டர் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பார்கள்.
இவர்களுக்காகவே, அறிமுக சலுகையாக பட்ஜெட் விலையில், பிரம்மாண்ட அம்சங்களுடன் வந்திருக்கிறது, யபெர் கே2 எஸ் 4கே அவுட்டோர் ப்ரொஜெக்டர். இதன் அம்சங்கள், ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்கும் ஆண்ட்ராய்டு டிவிகளையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருக்கிறது. இதன் முழு அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.

யபெர் கே2 எஸ் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Yaber K2s Projector Specifications): இந்த ப்ரொஜெக்டர், 4K ரெசொலூஷன் (4096×2160 பிக்சல்கள்) கொண்டுள்ளது. அதில் 800 ANSI லுமன்ஸ் (Lumens) பிரைட்னஸ் வருகிறது. இரண்டு 10W ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ சப்போர்ட்டுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ப்ரொஜெக்டரை ஆண்ட்ராய்டு டிவி (Android TV) போல பயன்படுத்திக்கொள்ள முடியும். நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) உள்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்களை பயன்படுத்தலாம். ஆட்டோ ஸ்கிரீன் அடாப்ஷன் (Auto Screen Adaptation) மற்றும் என்எஃப்சி ஸ்கிரீன்காஸ்ட் (NFC Screencast) சப்போர்ட் உள்ளது.
அலெக்சா வாய்ஸ் கன்ட்ரோல் (Alexa Voice Control) கொடுக்கப்பட்டுள்ளது. எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB) போர்ட் மற்றும் ஆடியோ ஜேக் (Audio Jack) கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் மற்றும் வைபை 6 சப்போர்ட் உள்ளது. இந்த ப்ரொஜெக்டரின் எடை 4.38 கிலோவாக இருக்கிறது.
இதுவொரு அவுட்டோர் ப்ரொஜெக்டர் (Outdoor Projector) என்பதால், தரமான ஜேபிஎல் (JBL) ஸ்பீக்கப்கள் கொடுக்கப்படுள்ளன. இவ்வளவு அம்சங்களை கொண்ட யபெர் கே2 எஸ் அவுட்டோர் ப்ரொஜெக்டரின் விலை ரூ. 54,900ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அறிமுக சலுகையாக மொத்த விலையில் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், அமேசானில் ரூ. 41,890க்கு கிடைக்கிறது. அதேபோல ஓர்ஜின்ஷாப் என்னும் தளத்தில் ரூ.37,990க்கு கிடைக்கிறது. இந்த விலை விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








