இது போன் இல்லை அதுக்கும் மேல.. Xreal அறிமுகம் செய்த லேட்டஸ்ட் டிவைஸ்.. கண்கட்டி வித்தை காட்டுறதுனா இதானா?
ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) என்ற ஏஐ (AI) தொழில்நுட்பத்திற்கு அடுத்தபடியாக, உலகளவில் வளர்ந்து வரும் மற்றொரு தொழில்நுட்பமாக ஆகுமென்டட் ரியாலிட்டி (Augmented reality) என்று அழைக்கப்படும் ஏஆர் (AR) தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது. பேஸ்புக் (Facebook), சோனி (SONY), அமேசான் (Amazon) போன்ற முன்னணி நிறுவனங்கள் தற்போது AR துறையில் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. இருப்பினும், புதிய அணுகுமுறையுடன் இவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளியுள்ளது எக்ஸ்ரியல் (Xreal) நிறுவனம். யாருமே எதிர்பார்த்திடாத புதிய சாதனத்தை அறிமுகம் செய்து Xreal கவனத்தை ஈர்த்துள்ளது.
எக்ஸ்ரியல் (Xreal) நிறுவனம் இதுவரை யாரும் செய்திடாத புதிய அணுகுமுறையை ஏஆர் துறையில் செய்துள்ளது. முதல் முறையாக அதன் ஏஆர் கிளாஸ் (AR Glass) உடன் பெரிய திரையை கட்டுப்படுத்த உதவும் கையடக்க ஆண்ட்ராய்டு சாதனத்தை (Android device) அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஆப்ஸ் (Apps) மற்றும் அதன் உள்ளடக்கங்களை இனி ஏஆர் கிளாஸ் பயனர்கள் எளிமையாக கட்டுப்படுத்த முடியும் என்று எக்ஸ்ரியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எக்ஸ்ரியல் பீம் ப்ரோ (Xreal Beam Pro):
இதற்காகவே, நிறுவனம் தற்போது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட எக்ஸ்ரியல் பீம் ப்ரோ (Xreal Beam Pro) என்ற சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இது இப்போது உலக சந்தைக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் பார்ப்பதற்கு ஒரு ஸ்மார்ட்போன் (Smartphone) போல காட்சியளித்தாலும், இது ஒரு போன் இல்லை என்பதை முதலில் தெரியப்படுத்திக்கொள்கிறோம். இது ஸ்மார்ட்போனை விட புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் கருவியாக வெளிவந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் வடிவ எக்ஸ்ரியல் பீம் ப்ரோ (Xreal Beam Pro) சாதனத்தை நிறுவனம் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்துடன் ஏஆர் அம்சங்களை (AR features) இயக்கும் வகையில் உருவாக்கியுள்ளது. இந்த சாதனம் பெயரிடப்படாத ஸ்னாப்டிராகன் (Snapdragon) சிப்செட் உடன் 6GB / 8GB ரேம் (RAM) உடன் 128GB / 256GB ஸ்டோரேஜ் (Storage) உடன் கொண்டுவந்துள்ளது. இதில் கூடுதல் ஸ்டோரேஜ்ஜிற்காக மைக்ரோஎஸ்டி (microSD) அம்சமும் இடம்பெற்றுள்ளது.
புதிய எக்ஸ்ரியல் பீம் ப்ரோ (Xreal Beam Pro) சாதனம் வைஃபை 6 (Wi-Fi 6) மற்றும் 5ஜி (5G) விருப்பங்களில் வருகிறது. இருப்பினும் இதில் வாய்ஸ் கால் அம்சங்களை உங்களால் பயன்படுத்த முடியாது. இது போனின் உதவி இல்லாமல் ஸ்ட்ரீமிங் செய்ய ஏஆர் கிளாஸ் பயனர்களை அனுமதிக்கிறது. சிலருக்கு ஏன் இதை நம்முடைய சாதாரண ஸ்மார்ட்போன்களை வைத்தே செய்ய முடியாதா என்ற கேள்வி எழுந்திருக்கலாம்.
பார்க்க ஸ்மார்ட்போன் மாதிரி இருந்தாலும், இது போன் இல்லை.. அதுக்கும் மேலே..
நம்மிடம் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் எக்ஸ்ரியல் ஏர் கிளாஸ் (Xreal Air glass) போன்ற ஏஆர் சாதனங்களை கட்டுப்படுத்தக்கூடிய அம்சங்கள் இருப்பதில்லை என்பது முதல் காரணம். அதேபோல், வீடியோ அவுட் சப்போர்ட் (video out support) தற்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் கிடைப்பதில்லை என்பதும் ஒரு முக்கிய காரணம். அதேபோல், பெரிய டிஸ்பிளேக்களை கட்டுப்படுத்த உதவும் சக்திவாய்ந்த ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் நம்முடைய ஸ்மார்ட்போன்கள் இயங்குவதில்லை என்பது மற்றொரு முக்கியமான காரணமாகும்.
இதனால் தான், எக்ஸ்ரியல் நிறுவனம் இந்த பிரத்தியேகமான சாதனத்தை உருவாக்கியுள்ளது. அதேபோல், 2D மற்றும் ஸ்பேஷியல் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் (spatial photos and videos) ரெக்கார்ட் செய்ய இதில் 50MP கொண்ட டூயல் கேமராவையும் இதில் நீங்கள் பெறுகிறீர்கள். அதேபோல், இந்த சாதனம் உங்களை AR கிளாஸ் மூலம் 130" இன்ச் வரையிலான பெரிய டிஸ்பிளேவில் Netflix, Disney+, Prime Video போன்ற உள்ளீடுகளை காட்சிப்படுத்திக்கிறது.
அதேபோல், இந்த சாதனம் கேமிங் விளையாட கண்ட்ரோலர் போலவும் பயன்படுத்த அனுமதிக்கிறது. இன்னும் ஏரளமான அம்சங்களை இந்த சாதனம் Xreal Air, Air 2 and Air 2 Pro போன்ற சாதனங்களுடன் பயன்படுத்த அனுமதிக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 16,000 வரை செல்கிறது. ஜூலை மாதம் முதல் உலகம் முழுக்க இந்த சாதனம் ஷிப்பிங் செய்ய தயார்நிலையில் உள்ளது.


Click it and Unblock the Notifications