Home
Gadgets

32 இன்ச் டிவி காலி.. ரூ.11000 பட்ஜெட்ல 120 இன்ச்.. 1080P வீடியோ.. ஸ்டீரியோ ஆடியோ.. எந்த மாடல்?

32 இன்ச் டிவி வாங்கும் பட்ஜெட்டில் 120 இன்ச் புரொஜெக்சன், 1080P ரெசொலூஷன், எச்டிஆர்10 பிளஸ், 32எம்பி மெமரி, 65W ஆடியோ சப்போர்ட் மட்டுமல்லாமல், 360 டிகிரி ரோட்டேஷன் உடன் எக்ஸ்மிங் கியூ5 புரொஜெக்டர் (Xming Q5 Projector) விற்பனைக்கு கிடைக்கிறது.

4K டிகோடிங், ட்ரூலைப் இமேஜ் என்ஜின், ஆட்டோ போகஸ் போன்ற மற்ற அம்சங்களிலும் பின்னிப்பெடல் எடுக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ஓஎஸ் மற்றும் சிப்செட் கொண்டிருக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் மிரளவிடும்படி இருக்கும். இந்த எக்ஸ்மிங் கியூ5 புரொஜெக்டரின் முழு அம்சங்களை பார்த்துவிட்டு, விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

32 இன்ச் டிவி காலி.. ரூ.11000 பட்ஜெட்ல 120 இன்ச்.. 1080P வீடியோ மாடல்!

எக்ஸ்மிங் கியூ5 புரொஜெக்டர் அம்சங்கள் (Xming Q5 Projector Specifications): இந்த புரொஜெக்டர் மற்ற மாடல்களை போலல்லாமல், ஃபோட்டான்எக்ஸ் ஆப்டிகல் எஞ்சின் (PhotonX Optical Engine) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் மூலம் ஒளி கசிவு, தூசி நுழைவு, நாய்ஸ் ஆகியவை கன்ட்ரோல் செய்யப்படும்.

ஆகவே, கிரிஸ்டல் கிளியர் புரொஜெக்சன் கிடைக்கும். அதேபோல பட்டையை கிளப்பும் வீடியோ அவுட்புட் எதிர்பார்க்கலாம். 1080P ரெசொலூஷன், 280 லூமென்ஸ் (Lumens) மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) பீச்சர்கள் வருவதால், கிளாரிட்டி மற்றும் கலர் டெப்த் (Clarity & Color Depth) மிரளவிடும்படி எதிர்பார்க்கலாம்.

ஆகவே, வீடியோ அனுபவம் அடுத்த லெவலில் இருக்கும். இந்த மாடல் காம்பாக்ட் மற்றும் போர்டபிள் டிசைனில் 17.5 செ.மீ உயரம் மற்றும் 1.4 கிலோ எடை கொண்டிருக்கிறது. ஆகவே, ஹேண்டில் செய்வது எளிதாக இருக்கும். அதேபோல 360 டிகிரியில் ரோட்டேட் செய்து பயன்படுத்த மல்டிபிள் ஆங்கிள் மற்றும் போசிஷன் சப்போர்ட் வருகிறது.

32 இன்ச் டிவி காலி.. ரூ.11000 பட்ஜெட்ல 120 இன்ச்.. 1080P வீடியோ மாடல்!

ஆகவே, எந்த இடத்திலும் எந்த கோணத்திலும் இந்த எக்ஸ்மிங் கியூ5 புரொஜெக்டர் மூலம் வீடியோ அவுட்புட் பெற்று கொள்ளலாம். 11ஆவது ஜெனரேஷன் ட்ரூலைஃப் இமேஜ் எஞ்சின் ( 11th Generation TruLife Image Engine) சப்போர்ட் உள்ளது. ஆகவே, டெம்பரேச்சர் அட்ஜஸ்ட்மென்ட், ஷார்ப்னஸ், கிளாரிட்டி அவுட்புட் மேம்படுத்தப்படுகிறது.

இந்த எக்ஸ்மிங் கியூ5 புரொஜெக்டரின் ஆடியோவை பொறுத்தவரையில், ஸ்டீரியோ சரவுண்ட் சவுண்ட் எஃபெக்ட்கள் (Stereo Surround Sound Effects) சப்போர்ட் கொண்ட 3W ஸ்பீக்கர்கள் வருகின்றன. மொத்தமாக 2 ஸ்பீக்கர்கள் கொண்டிருக்கிறது. சியோமி ஸ்மார்ட் டிவைஸ்களில் (Xiaomi Smart Devices) வருவதை போல வாய்ஸ் கன்ட்ரோல் சப்போர்ட் உள்ளது.

இந்த மாடலில் ஆடிடோமேடிக் கிஸ்டோன் கரெக்சன் (Automatic Keystone Correction), ஆட்டோபோகஸ் (Autofocus) மற்றும் ஆடிடோமேடிக் ஸ்கிரீன் அலைன்மென்ட் (Automatic Screen Alignment) ஆகியவற்றுக்காக அடாப்டிவ் சிஸ்டம் 3.0 (Adaptive System 3.0) வருகிறது. 32 ஜிபி மெமரி சப்போர்ட் கொண்டிக்கிறது.

குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ53 (Quad Core Cortex A53) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) சப்போர்ட் வருகிறது. ஓடிடி ஆப்கள் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த எக்ஸ்மிங் கியூ5 புரொஜெக்டரில் மின்ட் கிரீன் (Mint Green) மற்றும் கிரீம் ஒயிட் (Cream White) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.

இந்த மாடலின் கனெக்டிவிட்டையை பார்க்கையில், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஹெட்போன் ஜாக் மற்றும் வை-பை 6 ஆகியவறை வருகின்றன. இந்த மாடலின் விலை ரூ.11,756ஆக மட்டுமே இருக்கிறது. சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xming Q5 Projector With 32GB Storage, 1080P Resolution Available For Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X