சியோமியின் புதிய அறிமுகமான பவர்பேங்க் விலை குறைப்பு.!
நீங்கள் ஒரு தரமான பவர்பேங்க் வாங்க முடிவு செய்து விட்டீர்கள் என்றால் உங்களுக்காக இதோ ஒரு நல்ல செய்தி.
நீங்கள் ஒரு தரமான பவர்பேங்க் வாங்க முடிவு செய்து விட்டீர்கள் என்றால் உங்களுக்காக இதோ ஒரு நல்ல செய்தி. ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சீனாவின் சியோமி தற்போது மூன்றுவிதமான பவர்பேங்க் விலையை குறைத்துள்ளது. 10000mAh மற்றூம் 20000mAh ஆகிய பவரில் உள்ள மி பவர்பேங்க் 2ஐ விலையை ரூ.100ம், 10000mAh மி பவர்பேங்க் புரோ விலையை ரூ.200ம் இந்நிறுவனம் குறைத்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சியோமி நிறுவனம் 10000mAh மற்றூம் 20000mAh பவர்பேங்க் 2ஐ உபகரணத்தை ரூ.799 மற்றும் ரூ.1499 என்ற விலையில் அறிமுகம் செய்தது. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் இந்நிறுவனம், இந்த பவர்பேங்க் விலையை திடீரென உயர்த்தி 10000mAh பவர்பேங்கை ரூ.899க்கும், 20000mAh பவர்பேங்க்கை ரூ.1599க்கும் விற்பனை செய்தது. ஆனால் தற்போது விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதன் மூலம் மீண்டும் 10000mAh பவர்பேங்க் 2ஐ உபகரணத்தை ரூ.799க்கும், 20000mAh பவர்பேங்க் 2ஐ உபகரணத்தை ரூ.1499க்கும் விற்பனை செய்து வருகிறது.
அதுமட்டுமின்றி இந்த சியோமி நிறுவனம் 10000mAh மி பவர்பேங்க் புரோ சாதனத்தை ரூ.1499 என்ற விலையில் விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது இதன் விலை குறைக்கப்பட்டு ரூ.1299ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேற்கண்ட அனைத்து பவர்பேங்க் சாதனங்களும் ஒன்பது லெவலில் சோதனை செய்யப்பட்டு மூன்று முறைகளில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இந்நிறுவனம் ஒரு நிமிடத்திற்கு ஏழு பவர்பேங்க் என்ற முறையில் உற்பத்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி நிறுவனத்தின் 10000mAh மற்றும் 20000 mAh மி பவர்பேங்க் 2ஐ குறித்த விபரங்களை பார்த்தோமென்றால் இவை இரண்டுமே யூஎஸ்பி அவுட்புட்டை கொண்டது. அதாவது இந்த சாதனங்கள் இரண்டு முறை சார்ஜரை கொண்டது. ஒரே நேரத்தில் பவர்பேங்க்கையும் ஸ்மார்ட்போனையும் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
10000mAh பவர்பேங்க் 2ஐ சாதனத்தின் உண்மையான கெப்பாசிட்டி 6500mAh என்பதும், அதன் கன்வர்ஷன் ரேட்டிங் 90%க்கும் மேல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் 5V/2A, 9V/2A and 12V/1.5A ஆகியவற்றுக்கு சப்போர்ட் செய்து சார்ஜ் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவேதான் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்புகள் மற்றும் டேப்ளட்டுக்களுக்கு இந்த பவர்பேங்க் சார்ஜ் செய்ய உதவுகிறது
மேலும் சியோமி நிறுவனத்தின் 20000 mAh மி பவர்பேங்க் 2ஐ என்ற சாதனம், குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 சப்போர்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இதில் டூயல் யூஎஸ்பி அவுட்புட் உள்ளது என்பதும் இன்னொரு சிறப்பு. மேலும் இந்த சாதனம் ஸ்க்ராட்ச் ஆகாத வண்ணம் மேல்பக்கம் பாதுகாப்பான அமைப்பினையும் கொண்டது.


Click it and Unblock the Notifications