Home
Gadgets

பிளிப்கார்ட் ஆஃபர்.. கூகுள் டிவி OS.. டால்பி ஆடியோ.. Xiaomi 50 இன்ச் டிவி வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் Flipkart GOAT Sale 2025 எனும் சிறப்பு விற்பனையில் சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி(XIAOMI X Series 50 inch Ultra HD 4K Smart Google TV) ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் L50M8-A2IN என்ற மாடல் நம்பர் கொண்ட சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.26,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் ஆஃபர்.. Xiaomi 50 இன்ச் டிவி வாங்க சரியான நேரம்..

சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Xiaomi X Series 50 inch 4K Smart Google TV Specifications): அல்ட்ரா எச்டி 4K டிஸ்பிளே இந்த சியோமி டிவி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 3840 × 2160 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), எச்டிஆர் 10 உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களும் இந்த சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவியில் உள்ளன.

94 சதவீதம் டிசிபிஐ-3 கலர் காமட் (94% DCPI-3 color gamut), ஏஎல்எல்எம் (ALLM), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology), உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் இந்த சியோமி டிவிவெளிவந்துள்ளது.

குவாட் கோர் பிராசஸர் (ஏ55) உடன் சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த டிவி. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்.

தனித்துவமான விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), டால்பி விஷன் டைம் (Dolby Vision Time), 6.5எம்எஸ் ரெஸ்பான்சஸ் டைம் (6.5ms Response Time) உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது சியோ ஸ்மார்ட் டிவி மாடல். பின்பு வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், இயர்போன், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டிவி.

2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. பேட்ச்வால் (PatchWall) மற்றும் கூகுள் டிவி ஒஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே கூகுளின் அனைத்து சிறப்பான வசதிகளையும் இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூடியூப், சோனி லிவ் உள்ளிட்ட பல்வேறு ஒடிடி ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். MI வாய்ஸ் கண்ட்ரோல் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சியோமி டிவி.

தரமான டால்பி ஆடியோ (Dolby audio), டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்ட 30W ஸ்பீகர்கள் உடன் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.எனவே இந்த டிவியில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi X Series 50 inch 4K Smart Google TV is available discounted price at Flipkart GOAT Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X