Xiaomi 50 இன்ச் டிவியை குறைந்த விலையில் வாங்க சரியான நேரம்.. டால்பி ஆடியோ.. 8ஜிபி மெமரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் சியோமி நிறுவனத்தின் சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவிக்கு (Xiaomi X Series 50 inch 4K Smart Google TV) தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி டால்பி விஷன், பெசல் லெஸ் டிசைன், 30W ஸ்பீக்கர்கள் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவிக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.28,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.26,999 விலையில் வாங்கிவிட முடியும்.

சியோமி X Series 50 inch 4K ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள்:
இந்த சியோமி டிவி அல்ட்ரா எச்டி 4K டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 3840 × 2160 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), எச்டிஆர் 10 உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களும் இந்த சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவியில்
உள்ளன.
அதேபோல் 94 சதவீதம் டிசிபிஐ-3 கலர் காமட் (94% DCPI-3 color gamut), ஏஎல்எல்எம் (ALLM), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology), உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் இந்த சியோமி டிவி வெளிவந்துள்ளது.
குறிப்பாக விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), டால்பி விஷன் டைம் (Dolby Vision Time), 6.5எம்எஸ் ரெஸ்பான்சஸ் டைம் (6.5ms Response Time) உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தைத் தரும்.
தரமான குவாட் கோர் பிராசஸர் (ஏ55) உடன் சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதாவது இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சியோமி டிவி.
2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். பின்பு பேட்ச்வால் (PatchWall) மற்றும் கூகுள் டிவி ஒஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே கூகுளின் அனைத்து சிறப்பான வசதிகளையும் இந்த டிவியில் பயன்படுத்தலாம்.
டால்பி ஆடியோ (Dolby audio), டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களை கொண்ட 30W ஸ்பீகர்கள் உடன் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.எனவே இந்த டிவியில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

MI வாய்ஸ் கண்ட்ரோல் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சியோமி டிவி.மேலும் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூடியூப், சோனி லிவ் உள்ளிட்ட பல்வேறு ஒடிடி ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த டிவியின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0,எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், இயர்போன், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டிவி. அதேபோல் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட சிறப்பான அம்சங்களும் இந்த டிவயில் உள்ளன.


Click it and Unblock the Notifications








