Home
Gadgets

அவசரப்பட்றாதீங்க.. 43-இன்ச், 55-இன்ச், 65-இன்ச்னு... ஆக.27 வரை எந்த Smart TV-யும் வாங்கிடாதீங்க.. ஏன்னா?

43-இன்ச் அல்லது 55-இன்ச் அல்லது 65-இன்ச் ஆகிய ஸ்க்ரீன் சைஸ்களில் புதிய ஸ்மார்ட் டிவி வாங்கும் ஐடியா உங்களிடம் இருந்தால்.. ஆகஸ்ட் 27 ஆம் தேதி அமைதியாக இருக்கவும். ஏனென்றால் இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் "கால் மேல் கால் போட்டு" உட்காந்து இருக்கும் சீன நிறுவனமான ஷாவ்மீ, வருகிற 27 ஆம் தேதியன்று மேற்கண்ட 3 அளவுகளில் அதன் ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதென்ன மாடல்கள்? என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்கள்? ஷாவ்மீ நிறுவனம் அடுத்த வாரம் (ஆக.27) அதன் ஷாவ்மீ எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவி சீரீஸை (Xiaomi X Pro QLED Smart TV Series) இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சீரீஸின் கீழ் 43-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஆகிய மூன்று டிஸ்பிளே அளவுகளில் 3 மாடல்கள் அறிமுகமாகும்.

ஆக.27 வரை எந்த Smart TV-யும் வாங்கிடாதீங்க.. ஏன்னா?

ஸ்க்ரீன் சைஸ்களுடன் சேர்த்து இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மற்றும் சில முக்கிய அம்சங்களும் கூட வெளிபடுத்தப்பட்டுள்ளன. சீரீஸின் பெயர் குறிப்பிடுவது போலவே இந்த டிவிகளில் க்யூஎல்இடி பேனல்கள் (QLED Panels) பொருத்தப்பட்டிருக்கும். மேலும் ஸ்மார்ட் டிவி சீரீஸ் ஆனது மிகவும் மெலிதான பெஸல்களுடன் ஆல்-ஸ்க்ரீன் டிஸைன் (All-screen design with very slim bezels) உடன் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? ஷாவ்மீ இந்தியா வலைத்தளத்தில் (Xiaomi India Website) லைவ் ஆகி உள்ள மைக்ரோசைட் வழியாக புதிய ஷாவ்மீ எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவி சீரீஸ் ஆனது 4கே ரெசல்யூஷனுடன் (4K Resolution) வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடவே இந்த ஸ்மார்ட் டிவிகள் மேஜிக்யூ (MagiQ) அம்சத்துடனும் வரும், இது பார்வையாளர்களுக்கு துடிப்பான கலர் எக்ஸ்பீரியன்ஸை (Vibrant colour experience) வழங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஷாவ்மீ இந்தியா மைக்ரோசைட்டின் படி, இந்த டிவிகள் மிகவும் மெலிதான பெஸல்களுடன் "ஆல்-ஸ்கிரீன் டிசைனுடன்" வரும் மற்றும் மெட்டல் ஃபினிஷை (Metal Finish) கொண்டிருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷாவ்மீயின் இந்த புதிய ஸ்மார்ட் டிவி சீரீஸ் ஆனது பயனர்களுக்கு சினிமா ஆடியோ அனுபவத்தை (Cinema Audio Experience) வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

2024 ஷாவ்மீ எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி சீரிஸின் அனைத்து 3 மாடல்களுமே கூகுள் டிவிக்கான (Google TV) பேட்ச்வால் இன்டர்பேஸ் (PatchWall Interface) உடன் இயங்கும். மேலும் இந்த டிவிகள் அனைத்தும் 32ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் (32GB Internal Storage) உடன் வரும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆண்டு ஏப்ரலில் தான் ஷாவ்மீ எக்ஸ் ப்ரோ (Xiaomi X Pro) ஸ்மார்ட் டிவிகளின் 2023 சீரீஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த சீரீஸின் கீழ், 4கே எச்டிஆர் (4K HDR) ஸ்க்ரீன்களுடன் 40-இன்ச், 50-இன்ச் மற்றும் 55-இன்ச் என மொத்தம் 3 மாடல்கள் உள்ளன.

இந்த சீரிஸின் ஆரம்ப விலை ரூ.32,999 இல் தொடங்குகிறது. மேலும் மூன்றுமே ஷாவ்மீயின் பேட்ச்வால் இன்டர்பேஸ் மற்றும் டால்பி விஷன் ஐக்யூ (Dolby Vision IQ) மற்றும் விவிட் பிக்சர் எஞ்சின் 2 (Vivid Picture Engine 2) தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் வருகின்றன.

என்ன விலைக்கு வரும்? ஷாவ்மீயின் புதிய எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவி சீரீஸின் ஆரம்ப விலை (அதாவது 43-இன்ச் மாடலின் விலை) ரூ.33,000-ஐ சுற்றிய விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த சைஸ்களின் (55-இன்ச் மற்றும் 65-இன்ச்) விலைகள் இன்னும் அதிகமாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi X Pro QLED Smart TV Series 43 inch 55 inch 65 inch 4K models Launching in India on August 27
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X