Home
Gadgets

வாங்குனா இந்த சியோமி QLED டிவி வாங்கனும்.. 32ஜிபி மெமரி.. 4கே டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன விலை?

சியோமி நிறுவனம் இந்தியாவில் சியோமி எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி சீரிஸ் (Xiaomi X Pro QLED Series) டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது டிவிகள் 43 இன்ச், 55 இன்ச் 65 இன்ச் என மூன்று அளவுகளில் வாங்க கிடைக்கும். அசத்தலான டிசைன், பிரமிக்க வைக்கும் நிறங்கள், மேம்பட்ட புதிய தொழில்நுட்பங்கள் எனப் பல சிறப்பான அம்சங்களுடன் சியோமி எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி சீரிஸ் டிவி மாடல்கள் வெளிவந்துள்ளன. இப்போது இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி சீரிஸ் அம்சங்கள் (Xiaomi X Pro QLED Series specifications): 43-இன்ச், 55-இன்ச், 65-இன்ச (3840 × 2160 பிக்சல்ஸ்) டிவி மாடல்கள் 4கே கியூஎல்இடி டிஸ்பிளே(4K QLED display) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள். எனவே இந்த புதிய டிவிகள் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

வாங்குனா இந்த சியோமி QLED டிவி வாங்கனும்.. 32ஜிபி மெமரி.. எந்த மாடல்?

94 சதவீதம் டிசிபிஐ-3 கலர் காமட் (94% DCPI-3 color gamut), ஏஎல்எல்எம் (ALLM), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology), விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), டால்பி விஷன் (Dolby Vision ), 6.5எம்எஸ் ரெஸ்பான்சஸ் டைம் (6.5ms Response Time) போன்ற பல டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளன இந்த புதிய சியோமி டிவிகள்.

சக்திவாய்ந்த குவாட் கோர் பிராசஸர் (ஏ55) உடன் சியோமி எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி சீரிஸ் டிவி மாடல்கள் வெளிவந்துள்ளன. எனவே இந்த டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் மாலி ஜி52 எம்சி1 ஜிபியு(Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளன இந்த புதிய சியோமி டிவிகள். எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவிகளை நம்பி வாங்கலாம். அதாவது இந்த டிவிகள் சிறந்த கேமிங் அம்சங்களை வழங்கும்.

பேட்ச்வால் (PatchWall) மற்றும் கூகுள் டிவி ஒஎஸ் (Google TV OS)மூலம் சியோமி எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி சீரிஸ் டிவி மாடல்கள் இயங்குகின்றன. எனவே கூகுளின் பல்வேறு புதிய வசதியை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் சியோமி எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி சீரிஸ் டிவி மாடல்கள் வெளிவந்துள்ளன.

சியோமி எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி சீரிஸ் டிவி மாடல்கள் MI வாய்ஸ் கண்ட்ரோல் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளன. மேலும்நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூடியூப், சோனி லிவ் உள்ளிட்ட பல்வேறு ஒடிடி ஆப்ஸ்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும். குறிப்பாக மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

வாங்குனா இந்த சியோமி QLED டிவி வாங்கனும்.. 32ஜிபி மெமரி.. எந்த மாடல்?

அதேபோல் டால்பி ஆடியோ (Dolby audio), டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களை கொண்ட 30W ஸ்பீகர்கள் உடன் இந்த சியோமி எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி சீரிஸ் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

சியோமி எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி சீரிஸ் 43-இன்ச் மாடலின் விலை ரூ.34,999-ஆக உள்ளது, 55-இன்ச மாடலின் விலை ரூ.49,999-ஆக உள்ளது, 65-இன்ச் மாடலின் விலை ரூ.69,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவிகளை வாங்கினால் ரூ.7000 வரையில் தள்ளுபடியும் உள்ளது. வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி எம்ஐ.காம், அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் இந்த டிவிகளை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi X Pro QLED series smart TV launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X