Home
Gadgets

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. 32ஜிபி மெமரி.. கூகுள் டிவி OS.. டால்பி ஆடியோ.. Xiaomi 4கே டிவிகள் அறிமுகம்..

சியோமி (Xiaomi) நிறுவனம் இந்தியாவில் சியோமி கியூஎல்இடி டிவி எக்ஸ் ப்ரோ சீரிஸ் 2025 எடிஷன் (Xiaomi X Pro QLED Series 2025 Edition) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 43 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் அளவுகளில் இந்த டிவிகள் வாங்க கிடைக்கும். இப்போது இந்த புதிய டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி கியூஎல்இடி டிவி எக்ஸ் ப்ரோ சீரிஸ் அம்சங்கள் ( Xiaomi X Pro QLED Series 2025 Specifications): 4K அல்ட்ரா எச்டி கியூஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய சியோமி டிவிகள் வெளிவந்துள்ளன. மேலும் இதன் டிஸபிளேவில் விவிட் பிக்சர் இன்ஜின் 2 (Vivid Picture Engine 2), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), டால்பி விஷன், ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), ஐ-கேர் மோட் (Eye-Care Mode), 1.07 பில்லியன் கலர் டெப்த் உள்ளிட்ட பல அம்ங்கள் உள்ளன.

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. Xiaomi 4கே டிவிகள் அறிமுகம்..

தரமான குவாட்-கோர் ஏ55 (quad-core A55) பிராசஸர் உடன் இந்த சியோமி கியூஎல்இடி டிவி எக்ஸ் ப்ரோ சீரிஸ் மாடல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த டிவிகளில் உள்ளன. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவிகளை நம்பி வாங்கலாம்.

அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த புதிய சியோமி டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் Quick Mute, Quick wake உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் இந்த டிவிகளுடன் வருகிறது. இந்த டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த சியோமி கியூஎல்இடி டிவி எக்ஸ் ப்ரோ சீரிஸ் இயங்குகிறது. பின்பு பேட்ச்வால் (PatchWall) மற்றும் சியோமி டிவி பிளஸ் (Xiaomi TV+) ஆதரவுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக மேம்பட்ட பல புதிய அம்சங்களை வழங்கும் இந்த சியோமி டிவிகள்.

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. Xiaomi 4கே டிவிகள் அறிமுகம்..

கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), மிராகாஸ்ட் (Miracast), ஆப்பிள ஏர் பிளே 2 உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த புதிய சியோமி கியூஎல்இடி டிவி எக்ஸ் ப்ரோ சீரிஸ் மாடல்களில் உள்ளன.

டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்:எக்ஸ்(DTS:X), டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual: X) உள்ளிட்ட பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த புதிய சியோமி டிவிகளில் உள்ளன. மேலும் சியோமி கியூஎல்இடி டிவி எக்ஸ் ப்ரோ சீரிஸ் 43 மாடல் ஆனது 30W ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இதன் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் டிவி மாடல்கள் 34W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன.

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. Xiaomi 4கே டிவிகள் அறிமுகம்..

டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi), மூன்று எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் (3.5mm Headphone Jack), ஈதெர்நெட், ஏவி, ஆப்டிகல் (Optical) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி கியூஎல்இடி டிவி எக்ஸ் ப்ரோ சீரிஸ் மாடல்களில் உள்ளன.

சியோமி கியூஎல்இடி டிவி எக்ஸ் ப்ரோ சீரிஸ் 43 இன்ச் மாடலின் விலை ரூ.31,999-ஆக உள்ளது. மேலும் இதன் 55 இன்ச் டிவி மாடலை ரூ.44,999 விலையிலும், 65 இன்ச் டிவி மாடலை ரூ.64,999 விலையிலும் வாங்க முடியும். வரும் ஏப்ரல் 16-ம் தேதி எம்ஐ.காம் தளத்தில் இந்த புதிய சியோமி டிவிகள் விற்பனைக்கு வருகின்றன.

Best Mobiles in India

English summary
Xiaomi X Pro QLED Series 2025 launched in India: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X