சியோமி 55 இன்ச் டிவியின் விலையை குறைச்சிட்டாங்க.. இனி வெயிட் பண்ண வேண்டாம்.. ஆர்டர் போட்ருங்க..
சியோமி நிறுவனத்தின் சியோமி எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி 55 இன்ச் ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் ஆனது இந்தியாவில் ரூ.44,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஸ்மார்ட் டிவியின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் சியோமி எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி 55 இன்ச் ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 (Xiaomi X Pro QLED 55 inch 4K Smart Google TV 2025) மாடல் முன்பு ரூ.44,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த டிவியின் விலை குறைக்கப்பட்டு ரூ.39,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிளிப்கார்ட் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.37,999 விலையில் வாங்கிவிட முடியும்.

சியோமி எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி 55 இன்ச் கூகுள் டிவி 2025 அம்சங்கள் (Xiaomi X Pro QLED 55 inch 4K Smart Google TV 2025 Specifications): 4K அல்ட்ரா எச்டி கியூஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய சியோமி டிவி வெளிவந்துள்ளது. இதன் டிஸபிளேவில் விவிட் பிக்சர் இன்ஜின் 2 (Vivid Picture Engine 2), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), டால்பி விஷன், ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), ஐ-கேர் மோட் (Eye-Care Mode), 1.07 பில்லியன் கலர் டெப்த் உள்ளிட்ட பல அம்ங்கள் உள்ளன.
தரமான குவாட்-கோர் ஏ55 (quad-core A55) பிராசஸர் உடன் இந்த சியோமி எக்ஸ் ப்ரோ 55 இன்ச் கூகுள் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த டிவியில் உள்ளன.
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த சியோமி டிவி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் Quick Mute, Quick wake உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் இந்த டிவி வருகிறது. இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் சியோமி எக்ஸ் ப்ரோ 55 இன்ச் கூகுள் டிவி 2025 மாடல் இயங்குகிறது. பின்பு பேட்ச்வால் (PatchWall) மற்றும் சியோமி டிவி பிளஸ் (Xiaomi TV+) ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேம்பட்ட பல புதிய அம்சங்களை வழங்கும் இந்த சியோமி டிவி.
கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), மிராகாஸ்ட் (Miracast), ஆப்பிள ஏர் பிளே 2 உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த சியோமி எக்ஸ் ப்ரோ 55 இன்ச் கூகுள் டிவி 2025 மாடலில் உள்ளது.

டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்:எக்ஸ்(DTS:X), டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual: X) உள்ளிட்ட பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த புதிய சியோமி டிவியில் உள்ளன. மேலும் 34W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த டிவி. எனவே சியோமி எக்ஸ் ப்ரோ 55 இன்ச் கூகுள் டிவி 2025 மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi), மூன்று எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் (3.5mm Headphone Jack), ஈதெர்நெட், ஏவி, ஆப்டிகல் (Optical) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி டிவியில் உள்ளது.


Click it and Unblock the Notifications








