Just In
- 2 hrs ago
பச்சையாக டீஸ் செய்து காட்டிய OnePlus.! ஆஹா..ஓஹோனு ஒன்னுமில்லை.. ஆனா ஹைப் எகுறுது.!
- 3 hrs ago
குருநாதா இங்கயும் வந்துட்டீங்களா! 2 வார பேட்டரி ஆயுள் உடன் Redmi பேண்ட்! விலை என்ன?
- 15 hrs ago
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- 16 hrs ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
Don't Miss
- Movies
நானும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்திச்சிருக்கேன்.. ஓபனாக சொன்ன நயன்தாரா.. ஷாக்கான ஃபேன்ஸ்!
- Finance
அதானி அதிரடி முடிவு.. FPO ரத்து.. பணத்தை திரும்ப முதலீட்டாளர்களுக்கு ஒப்படைக்க முடிவு.. ஏன்?
- News
வாவ்! சென்னை ஏர்போர்ட்டில் காத்திருக்க இனி போர் அடிக்காது.. இந்தியாவிலேயே முதல் முறையாக தியேட்டர்!
- Automobiles
"மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு..." என ஓலாவை ஓரங்கட்டப் போகும் ஏத்தர்... ஒரே ஆண்டில் 330 சதவீத வளர்ச்சியா!
- Sports
ஓ இதுதான் ட்ரிப்பிளா திருப்பி குடுக்குறதா? சோதித்து பார்த்த நியூசி,.. சூர்யகுமார் தரமான பதிலடி!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க பணத்தை கையாளுவதில் கில்லாடிகளாம்... இவங்களுக்கு எப்பவும் பணக்கஷ்டம் வராதாம்...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Apple Watch-க்கு பதிலா இனி எல்லோரும் இந்த Xiaomi Watch S2 தான் வாங்கப்போறாங்க.! ஏன் தெரியுமா?
சியோமி (Xiaomi) நிறுவனம் வேற்று (டிசம்பர் 11) அதன் சொந்த நாட்டில் புதிய Xiaomi 13 சீரிஸ் ஸ்மார்ட்போன் (Xiaomi 13 series Smartphone) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் Xiaomi நிறுவனம் சீனாவில் Xiaomi Watch S2 என்ற புதிய ஸ்மார்ட்வாட்ச் (smartwatch) டிவைஸையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த சியோமி வாட்ச் நிறுவனத்தின் முந்தைய S1 மாடலின் வாரிசாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்சின் விலை என்ன? இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளதென்று பார்க்கலாம்.

புதிய Xiaomi Watch S2 ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்.!
இந்த புதிய Xiaomi Watch S2 இரண்டு வெவ்வேறு அளவுகளில் மொத்தம் 4 மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் 42mm மற்றும் 46mm ஆகிய அளவுகளில் வருகிறது.
Xiaomi வாட்ச் S2 வாட்சுக்கான MIUI OS உடன் வருகிறது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுள் உடன் வருகிறது.
Xiaomi Watch S2 ஆனது ஸ்லீப் மானிட்டர், ஸ்டேப் சவுண்ட், போன்ற வழக்கமான கண்காணிப்பு அம்சங்களுடன் வருகிறது.

ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோஃபோன் உடன் வெளிவந்துள்ளதா புதிய சியோமி வாட்ச் S2.!
இது கூடுதலாக 100+ ஸ்போர்ட்ஸ் மோட்களை கண்காணிக்கும் திறன் கொண்டது.
இது ஒரு ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோஃபோனையும் பேக் செய்கிறது. இந்த புதிய Xiaomi Watch S2 சாதனம் ப்ளூடூத் கால்லிங் அம்சத்துடன் வருகிறது.
இதனால், பயனர்கள் மிகவும் எளிதாக அழைப்புகளை வாட்ச் மூலம் அணுகி அழைப்புகளை ஏற்கலாம் மற்றும் நிராகரிக்கலாம்.
சியோமி வாட்ச் S2 விலை, மற்றும் விவரக்குறிப்புகள் பற்றிப் பார்க்கலாம்.

Xiaomi Watch S2 சிறப்பம்சம்
சியோமி வாட்ச் S2 ஆனது 466 × 466 பிக்சல் உடன் வட்டவடிவ AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
இது 42mm மாடல் 353ppi பிக்சல் அடர்த்தியுடன் 1.32' இன்ச் டிஸ்ப்ளேவை வழங்குகிறது. அதேசமயம், 46mm மாடல் 326ppi பிக்சல் அடர்த்தியுடன் 1.43' இன்ச் டிஸ்ப்ளே வழங்குகிறது. Xiaomi வாட்ச் S2 இன் லெதர் மாடல் சஃபையர் கிளாஸ் உடன் வருகிறது.
உங்கள் தினசரி அன்றாடம் மற்றும் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க இதில் பல சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.

பயோ எலக்ட்ரிக்கல் இம்பெடன்ஸ் சென்சார் என்ன செய்யும்?
இந்த சென்சார்கள் மூலம், Xiaomi வாட்ச் S2 பயனர்கள் தங்கள் உடல் கொழுப்பு விகிதம், எலும்பு உப்பு உள்ளடக்கம், அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் மற்றும் பலவற்றைக் கண்காணிக்க உதவும் ஒரு பயோ எலக்ட்ரிக்கல் இம்பெடன்ஸ் சென்சார் உடன் இது வருகிறது.
Xiaomi Watch S2 42mm மாறுபாடு 305mAh பேட்டரி உடன் வருகிறது. இது மிதமான பயன்பாட்டில் 7 நாட்கள் வரை நீடிக்கும்.

12 நாட்கள் நீடிக்கும் பேட்டரி ஆயுளா? அடேங்கப்பா.!
அதேசமயம், 46mm மாடல் பெரிய 500எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது மற்றும் நிறுவனத்தின் படி ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 12 நாட்கள் நீடிக்கும்.
இது 50 மீட்டர் வரை நீர் தாங்கும் திறன் கொண்டது. Xiaomi Watch S2 42mm இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது - பிளாக் மற்றும் கோல்டு. அதேசமயம், 46mm மாறுபாடு பிளாக் மற்றும் சில்வர் வண்ணங்களில் வழங்கப்படுகிறது.
Xiaomi இதற்கான சிலிக்கான் மற்றும் லெதர் ஸ்ட்ராப்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

Xiaomi Watch S2 ஸ்மார்ட் வாட்சின் விலை என்ன?
இணைப்பு அம்சங்களைப் பற்றிப் பேசுகையில், Xiaomi Watch S2 ஆனது NFC, GPS, Glonass, Beidou மற்றும் Galileo ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இது புளூடூத் 5.2 ஐ நம்பியுள்ளது மற்றும் iOS 12.0 (மற்றும் அதற்கு மேல்) மற்றும் Android 6.0 (மற்றும் அதற்கு மேல்) உள்ள சாதனங்களுடன் இயங்கும்.
Xiaomi வாட்ச் S2 42mm (சிலிக்கான் ஸ்ட்ராப்பு) இந்திய பதிப்பில் தோராயமாக ரூ. 11,800 விலையில் வருகிறது. Xiaomi வாட்ச் S2 46mm (சிலிக்கான் ஸ்ட்ராப்பு) தோராயமாக ரூ. 13,000 விலையில் வருகிறது.

ஏன் ஆப்பிள் வச்சிற்கு பதிலாக சியோமி வாட்ச் வாங்கலாம்?
Xiaomi வாட்ச் S2 42mm லெதர் வேரியன்ட் மாடல் இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ. 14,200 விலையில் வருகிறது.
அதேபோல், Xiaomi வாட்ச் S2 46mm லெதர் மாடல் தோராயமாக ரூ. 15,400 விலையில் வருகிறது. இது இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படுகிறது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இது iOS உடன் இணங்குவதாலும், விலை குறைவாக இருக்கும் காரணத்தினாலும் மக்கள் ஆப்பிள் வாட்சிகளைத் தவிர்த்து இந்த குறைந்த விலை ஸ்மார்ட் வாட்சை வாங்க வாய்ப்புள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470