Xiaomi வேற மாதிரி.. AMOLED டிஸ்பிளே.. 930mAh பேட்டரி.. 5ATM ரேட்டிங்.. GPS ஸ்மார்ட்வாட்ச்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் மாடலான சியோமி வாட்ச் 5 (Xiaomi Watch 5) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அமோலெட் டிஸ்பிளே, 930mAh பேட்டரி, 5ATM ரேட்டிங் மற்றும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி மட்டுமல்லாமல், வாய்ஸ் அசிஸ்டன்ட், ஹெல்த் மானிட்டர் போன்ற பீச்சர்களிலும் மிரள விட்டுள்ளது. இந்த சியோமி வாட்ச் 5 மாடலின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் சியோமி 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) வெளியாகிவிட்டது. இந்த ஸ்மார்ட்போனுடன் சியோமி பட்ஸ் 6 (Xiaomi Buds 6) மற்றும் சியோமி வாட்ச் 5 ஆகிய மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் சியோமி வாட்ச் 5 ஒட்டுமொத்த கவனத்தையும் தட்டி சென்றுள்ளது. 3டி பிரிண்டெட் டைட்டானியம் ஸ்ட்ராப் ஆனது ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களை ஈர்த்துள்ளது.

சியோமி வாட்ச் 5 அம்சங்கள் (Xiaomi Watch 5 Specifications): 1.54 (480 x 480 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 312 பிபிஐ பிக்சன் டென்சிட்டி கிடைக்கிறது. மேலும், 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் கிடைப்பதால், பிரீமியம் குவாலிட்டி மற்றும் லுக் உள்ளது.
மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 930mAh பேட்டரி கிடைக்கிறது. 6 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். 18 நாட்களுக்கு பவர்-சேவிங் பேக்கப் கிடைக்கும். சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் டபள்யூ5 4என்எம் (Qualcomm Snapdragon W5 4nm) சிப்செட் கொடுத்துள்ளது. மேலும், பேட்டரி மற்றும் மானிட்டரிங்குக்கு தனி சிப் கிடைக்கிறது.
ஆகவே, ஹெங்குவான் 2800 (Hengxuan 2800) சிப்செட் கிடைக்கிறது. டைனாமிக் வாட்ச் பேஸ்கள் (Dynamic Watch Faces), சூப்பர் ஐலேண்ட் (Super Island), சூப்பர் சியோ ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (Super Xiao Ai Voice Assistant) பீச்சர்கள் இருக்கின்றன. ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஈசிஜி (ECG) மற்றும் ஈஎம்ஜி (EMG) கிடைக்கின்றன.
மேலும், ஆக்சிலரோமீட்டர் (Accelerometer), கைரோஸ்கோப் (Gyroscope), ஜியோமேக்னட்டிக் (Geomagnetic), ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor), பாரோமீட்டர் (Barometer), டெம்ப்ரேச்சர் சென்சார் (Temperature Sensor) மற்றும் டெப்த் சென்சார் (Depth Sensor) ஆகியவை கிடைக்கின்றன. ஆகவே, ஒட்டுமொத்த ஹெல்த் மானிட்டரிங் மற்றும் டிராக்கிங் கிடைக்கிறது.
150+ ஸ்போர்ட்ஸ் மோட்கள், 80+ ஜிம் பேஸ்டு கோர்ஸ் கிடைக்கிறது. டூயல் ப்ளூடூத் மோட் கிடைக்கிறது. ஆகவே, ப்ளூடூத் பிஎல்இ மற்றும் ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டி கிடைக்கிறது. கால் மற்றும் ஆம்பியன்ட் ஆகியவற்றுக்கு மைக்ரோபோன் கிடைக்கிறது. மேலும், ஸ்பீக்கர் கொடுக்கப்பட்டுள்லது. ஜிபிஎஸ் (GPS), பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS) கிடைக்கிறது.
மேலும், கலிலியோ (Galileo), கியூஇசட்எஸ்எஸ் (QZSS) கிடைத்துள்ளது. 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது. 3டி பிரிண்டெட் ஸ்ட்ராப் வெர்ஷனில் டைட்டானியம் சில்வர் (Titanium Silver) மற்றும் டைட்டானியம் பிளாக் (Titanium Black) கலர்கள் உள்ளன. ஃப்ளோரோஎலாஸ்டோமர் ஸ்ட்ராப் வெர்ஷனில் காக்கி கிரீன் (Khaki Green) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்கள் இருக்கின்றன.
லெதர் ஸ்ட்ராப் வெர்ஷனில் கோல்டன் பிரவுண் (Gold Brown) மற்றும் ஷாப்ட் மிஸ்ட் ப்ளூ (Soft Mist Blue) உள்ளன. ஆகவே, ஃப்ளோரோஎலாஸ்டோமர் ஸ்ட்ராப் மாடலின் விலை ரூ.25,526ஆகவும், 3டி பிரிண்டெட் ஸ்ட்ராப் வெர்ஷனின் விலை ரூ.10,202ஆகவும், லெதர் ஸ்ட்ராப் வெர்ஷனின் விலை ரூ.29,357ஆகவும் இருக்கிறது. சீனாவில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








