Home
Gadgets

முரட்டு Smart Watch-ஆ இருக்கே.. 18 நாள் பேட்டரி, ECG ஆதரவு, 5ATM வாட்டர் ப்ரூப்.. என்ன மாடல்? என்ன விலை?

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் தனது ஷாவ்மீ வாட்ச் 5 (Xiaomi Watch 5) மாடலை சீனாவிற்கு வெளியே உள்ள சந்தைகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்வாட்ச், இப்போது மற்ற நாடுகளிலும் அறிமுகமாக தயாராகி வருகிறது.

உலகளாவிய அறிமுகம் ஒருபக்கம் இருக்க ஷாவ்மீ வாட்ச் 5 மாடலின் உலகளாவிய விரிவாக்கம் அதிக விலைக்குறியுடன் வரக்கூடும் என்கிற தகவலும் கிடைத்துள்ளது. அதாவது ஷாவ்மீ வாட்ச் 5 மாடல் ஆனது ஐரோப்பாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.35,400 க்கு அறிமுகப்படுத்தப்படலாம் என்று செக் நாட்டு வெளியீட்டு நிறுவனமான Svetandroida-வின் அறிக்கை தெரிவித்துள்ளது.

முரட்டு Smart Watch-ஆ இருக்கே.. 18 நாள் பேட்டரி, ECG ஆதரவு, 5ATM!

நினைவூட்டும் வண்ணம் சீனாவில், ஷாவ்மீ வாட்ச் 5 மாடல் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.15,000 க்கு வாங்க கிடைக்கிறது மற்றும் இதே மாடலின் இசிம் (eSIM) வேரியண்ட்டின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.29,000 க்கு வாங்க கிடைக்கிறது.

ஷாவ்மீ வாட்ச் 5 ஸ்மார்ட் வாட்ச் மாடல் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் பிளாக் மற்றும் ஜூனிபர் க்ரீன் ஆகிய கலர் ஆப்ஷன்களில் 47மிமீ அளவில் வாங்க கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது . இது ஷாவ்மீ நிறுவனத்தின் தனியுரிம அமைப்புக்கு பதிலாக கூகுளின் வியர் ஓஎஸ் உடன் வரும். இதனால் பயனர்களுக்கு பிளே ஸ்டோர் (Play Store) மற்றும் பரந்த எண்ணிக்கையிலான ஆப்களுக்கான அணுகல்கள் கிடைக்கும்.

ஷாவ்மீ வாட்ச் 5 மாடலின் க்ளோபல் வேரியண்ட் ஆனது அம்சங்களின் அடிப்படையில் சைனீஸ் வேரியண்ட்டை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஷாவ்மீ நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ விலை நிர்ணயம் அல்லது வெளியீட்டு காலத்தை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் லீக்ஸ்கள், இது ஷாவ்மீ 17 சீரீஸ் (Xiaomi 17 Series) மற்றும் ஷாவ்மீ பேட் 8 சீரிஸ் (Xiaomi Pad 8 Series) உடன் வெளியிடப்படலாம் என்று கூறுகிறது.

ஷாவ்மீ வாட்ச் 5 மாடலின் முக்கிய அம்சங்கள்:
- 480x480 ரெசல்யூசன் உடனான 1.54-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 1,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- சபையர் கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- 316L ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ்
- 5ATM வாட்டர் ப்ரூப்

- ஸ்மார்ட் மோட் இல் 6 நாட்கள் வரை அல்லது பவர் சேவிங் மோட் இல் 18 நாட்கள் வரை பேட்டரி லைஃப்பை வழங்கும் 930mAh பேட்டரி
- Snapdragon W5 சிப் பவர் சேவிங் கோப்ராசசர்
- இதய துடிப்பு கண்காணிப்பு, SpO2 கண்காணிப்பு, ECG ஆதரவு மற்றும் சைகை அடிப்படையிலான கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் EMG சென்சார்
- eSIM உடன் கூடிய LTE ஆதரவு

75 இன்ச் ஷாவ்மீ ஸ்மார்ட் டிவி அறிமுகம்: எக்ஸ் (X) தளம் வழியாக - ஷாவ்மீ நிறுவனம் அதன் புதிய ஷாவ்மீ எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி 2026 ஸ்மார்ட் டிவி (Xiaomi X Pro QLED 2026 Smart TV) மாடல் ஆனது வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து வரவிருக்கும் ஸ்மார்ட் டிவிக்கான பிரத்யேக மைக்ரோசைட் இப்போது ஷாவ்மீ இந்தியா (Xiaomi India) ஆன்லைன் ஸ்டோரில் நேரலையில் உள்ளது. இதன் மூலம் பிப்ரவரி 16 அறிமுகத்திற்கு பின்னர் குறிப்பிட்ட 75 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது ஷாவ்மீ நிறுவனத்தின் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும் என்பது உறுதியாகிறது.

இந்த புதிய மாடலின் பெரும்பாலான முக்கிய அம்சங்கள் இன்னும் மறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த டிவி சினி மேஜிக்யூ (CineMagiQ) மற்றும் மேக்ஸ் மேஜிக்யூ (MaxMagiQ) அம்சங்களுடன் (இது 2025 மாடல்களிலும்உள்ளது) வரும் என்றும், ஒப்பீட்டளவில் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என்றும் ஷாவ்மீ நிறுவனம் கூறுகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி ஷாவ்மீ எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி 2026 மாடல் ஆனது கடந்த ஏப்ரல் 2025 இல் அறிமுகமான ஷாவ்மீ எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி 2025 மாடல்களின் அறிமுகத்திற்கு பிறகு வருகிறது. ஆக நிச்சயம் இது 2025 சீரிஸின் 65 இன்ச் மாடலின் விலையை விட அதிகமாகவே இருக்கும்

நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி 2025 சீரீஸின் 43 இன்ச் மாடல் ரூ.31,999 க்கும், 55 இன்ச் மாடல் ரூ.44,999 க்கும் மற்றும் 65 இன்ச் மாடல் ரூ.64,999 க்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக புதிய 2026 சீரிஸின் கீழ் வரும் 65 இன்ச் மாடலின் விலை நிச்சயமாக ரூ.70000 க்கு மேலான பட்ஜெட்டில் தான் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Watch 5 With 18 Days Battery Life Global Launch Soon With Higher Price Tag
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X