Home
Gadgets

சீனாக்காரன் செஞ்சிட்டான்.. 98 கிராம், 6மிமீ டிசைன் பவர் பேங்க்.. மொத்த இந்தியாவும் வாங்குமே.. என்ன விலை?

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் வருகிற பிப்ரவரி 28 ஆம் அன்று சில தரமான சிறப்பான சம்பவங்களை செய்ய உள்ளது போல் தெரிகிறது. முன்னதாக இந்நிறுவனம் குறிப்பிட்ட தேதியில் வெறும் 10 கிராம் எடை கொண்ட அதன் ப்ளூடூத் டிராக்கர் ஆன ஷாவ்மீ டேக்கை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்து இருந்தது.

அதை தொடர்ந்து தற்போது அதே நாளில் - ஷாவ்மீ நிறுவனம் தனது அல்ட்ரா தின் மேக்னட்டிக் பவர் எபின்க் 5000 15W (Xiaomi UltraThin Magnetic Power Bank 5000 15W) பவர் பேங்க் மாடலை உலகளவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பித்தக்க வகையில் பிப்ரவரி 28 ஆம் தேதி மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2026 நிகழ்வு நடக்கிறது. அந்நிகழ்வில் தான் இது அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Xiaomi பவர் பேங்க்.. 98 கிராம், 6மிமீ டிசைன்.. என்ன விலை?

நினைவூட்டும் வண்ணம், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜப்பான், ஆஸ்திரேலியா, யுகே மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் இந்த பவர் பேங்க் ஏற்கனவே வெளியிடப்பட்டது. ஷாவ்மீ நிறுவனம் ஆஸ்திரேலியாவில் இதன் விலையை $69.50 (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.6350) ஆகவும், யுகே-வில் £49.99 (தோராயமாக ரூ.6150) ஆகவும் நிர்ணயித்துள்ளது.

பிப்.28 நடக்கும் வெளியீட்டு நிகழ்வை தொடர்ந்து, இந்த பவர் பேங்க் ஆனது உலகளாவிய அளவில் ஒரு பரந்த வெளியீட்டை காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே இந்த பவர் பேங்க், மெலிதான 6 மிமீ வடிவமைப்பை கொண்டுள்ளது மற்றும் 98 கிராம் அளவிலான எடையை கொண்டுள்ளது

அதாவது - இது அதன் பிரிவில் உள்ள மிகவும் இலகுவான மற்றும் மெலிதான பவர் பேங்க்களில் ஒன்றாகும். இது பிளாக், சில்வர் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இந்த பவர் பேங்க் 15W வரை வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் ஐபோன்களுக்கான மேக்னட்டிக் சார்ஜிங்கையும் (7.5W வரை) கொண்டுள்ளது.

இது ஷாவ்மீ டிவைஸ்களுக்கு மட்டுமின்றி சாம்சங் (Samsung) மற்றும் கூகுள் பிக்சல் (Google Pixel) மாடல்களுக்கும் இணக்கத்தன்மையை வழங்கும். இதில் 22.5W வரை வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான USB-C போர்ட்டும் உள்ளது. ஷாவ்மீ நிறுவனத்தின் கூற்றுப்படி இது டூயல் டிவைஸ் சார்ஜிங்கையும் உள்ளடக்கியுள்ளது. அத்தவாயு பயனர்கள் ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களை சார்ஜ் செய்ய அனுமதிக்கும்.

இந்த பவர் பேங்க் 5,000mAh திறன் கொண்ட ஸ்மார்ட்போன்-கிரேட் லித்தியம்-அயன் பேட்டரியை பயன்படுத்துகிறது. ஷாவ்மீ இந்த பவர் பேங்கில் - அதிக வெப்பம், அதிக சார்ஜ் மற்றும் ஷார்ட் சர்க்யூட்டுகளுக்கு எதிரான பாதுகாப்புகள் உட்பட பத்து அடுக்கு பாதுகாப்பை சேர்த்துள்ளது. அலுமினிய அலாய் பாடி மற்றும் தீ-எதிர்ப்பு கண்ணாடியிழை பூச்சு - ஆகியவைகள் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பிரீமியம் தோற்றத்தை உறுதி செய்கிறது.

முன்னரே குறிப்பிட்டபடி பிப்ரவரி 28 நிகழ்வில் அறிமுகத்தை காணவுள்ள ஒரே தயாரிப்பு இதுவல்ல. அதே நாளில் ஷாவ்மீ நிறுவனம் அதன் ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஸ்மார்ட்போன், ரெட்மி பட்ஸ் 8 ப்ரோ (Redmi Buds 8 Pro) இயர்பட்ஸ் மற்றும் ஷாவ்மீ டேக் (Xiaomi Tag) ஆகிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது. இதோடு ஷாவ்மீ நிறுவனம் அதன் புதிய AIoT தயாரிப்புகளையும் காட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாவ்மீ டேக் விலை மற்றும் அம்சங்கள்: வெறும் 10 கிராம் எடையும் மற்றும் அளவீட்டில் 7.2 மிமீ தடிமனும் கொண்ட ஷாவ்மீ டேக் ஆனது CR2032 காயின் பேட்டரியை பயன்படுத்துகிறது - இது ஒரு வருட பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. சாவிகள், பர்ஸ்கள் மற்றும் பைகள் உள்ளிட்ட தொலைந்து போன பொருட்களை பயனர்கள் விரைவாக கண்டறிய உதவும் வகையில் ஷாவ்மீ நிறுவனம் இந்த டிராக்கரை வடிவமைத்துள்ளது.

இந்த டிராக்கர் ஆப்பிளின் ஃபைண்ட் மை நெட்வொர்க் (Apple's Find My network) மற்றும் கூகுளின் ஃபைண்ட் ஹப் ஈகோசிஸ்டமை (Google's Find Hub ecosystem) ஆதரிக்கிறது, அதாவது இது ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) டிவைஸ்களுடன் இணக்கமானதாக இருக்கும்.

இது லோக்கேஷன் கண்காணிப்புக்காயாக ப்ளூடூத் 5.4 மற்றும் என்எப்சி-ஐ (NFC) பயன்படுத்துகிறது, ஆனால் அல்ட்ரா-வைட்பேண்ட் (UWB) தொழில்நுட்பத்தை உள்ளடக்கவில்லை. இருப்பினும், யுடபுள்யூபி எனேபிள்டு வெர்ஷன் உருவாக்கத்தில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Ultra Thin Magnetic Power Bank 5000 15W Launching at MWC 2026 Feb 28
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X