Home
Gadgets

இனி உங்க ஸ்மார்ட் டிவியில் 4கே தரத்தில் படங்களைப் பார்க்கலாம்.! Xiaomi செய்த தரமான சம்பவம்.!

ஒன்பிளஸ், சாம்சங் நிறுவனங்களை விட சியோமி நிறுவத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக சியோமி நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் தரமான சாதனங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சியோமி நிறுவனம் இந்தியாவில் புதிய சியோமி டிவி ஸ்டிக் 4கே மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது சியோமி டிவி ஸ்டிக் 4கே மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இனி உங்க ஸ்மார்ட் டிவியில் 4கே தரத்தில் படங்களைப் பார்க்கலாம்.!

சியோமி டிவி ஸ்டிக் 4கே மாடலின் அம்சங்கள்
அதாவது இந்த புதிய சியோமி டிவி ஸ்டிக் 4கே மாடல் ஆனது தரமான டால்பி விஷன் ஆதரவு, டால்பி அட்மோஸ் மற்றும் பில்ட்-இன் குரோம்காம்ஸ் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த வசதிகள் பயனர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். பின்பு இந்த சாதனத்துடன் வந்த ரிமோட் மாடலும் மிகவும் அருமையாக உள்ளது என்றே கூறலாம்.

அதாவது சியோமி டிவி ஸ்டிக் 4கே மாடல் உடன் நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ ஷாட் கொண்ட எம்ஐ வாய்ஸ் ரிமோட் வழங்கப்படுகிறது. இதுதவிர இந்த சியோமி டிவி ஸ்டிக் 4கே மாடல் ஆனது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி உங்க ஸ்மார்ட் டிவியில் 4கே தரத்தில் படங்களைப் பார்க்கலாம்.!

இப்போது சியோமி டிவி ஸ்டிக் 4கே மாடலின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம். அதாவது குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ35 பிராசஸர் உடன் ARM மாலி G31 MP2 GPU ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சியோமி சாதனம். எனவே இதை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு டூயல் பேண்ட் வைஃபை, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த சியோமி டிவி ஸ்டிக் 4கே மாடல்.

பேட்ச்வால் ஓஎஸ்
அதேபோல் இந்த புதிய சியோமி டிவி ஸ்டிக் 4கே மாடல் ஆனது பேட்ச்வால் ஓஎஸ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த புதிய சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. குறிப்பாக எச்டிஎம்ஐ மற்றும் ப்ளூடூத் 5.0 வசதியுடன் இந்த புதிய சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இனி உங்க ஸ்மார்ட் டிவியில் 4கே தரத்தில் படங்களைப் பார்க்கலாம்.!

குறிப்பாக எச்டிஎம்ஐ மூலம் 4கே வீடியோ அவுட்புட் மற்றும் டால்பி விஷன் ஆதரவை கொண்டுள்ளதால் இந்த சாதனத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கும். பின்பு ஆடியோவில் டிடிஎஸ் எச்டி, டால்பி அட்மோஸ் வசதியை இந்த சாதனம்வழங்குகிறது. எனவே இதன் மூலம் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறமுடியும்.

நம்பி வாங்கலாம்
சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் உங்களின் ஸ்மார்ட் டிவியில் இந்த சாதனத்தை பயன்படுத்தி 4கே தரத்தில் திரைப்படங்களைப் பார்க்க முடியும். குறிப்பாக பிரைம் வீடியோ, நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளங்களில் படம் பார்க்கும் பயனர்களுக்கு இந்த சாதனம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதாவது உயர்தர வீடியோக்களை பார்க்க உதவுகிறது இந்த சியோமி டிவி ஸ்டிக் 4கே மாடல். எனவே இந்த சாதனத்தை நம்பி வாங்கலாம்.

இனி உங்க ஸ்மார்ட் டிவியில் 4கே தரத்தில் படங்களைப் பார்க்கலாம்.!

சியோமி டிவி ஸ்டிக் 4கே மாடலின் விலை
இந்தியாவில் சியோமி டிவி ஸ்டிக் 4கே மாடல் ஆனது ரூ.4,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் வரும் பிப்ரவரி 20-ம் தேதி மதியம் 12 மணிக்கு எம்ஐ வலைத்தளத்தில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த புதிய சாதனத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi TV Stick 4K Launched with Dolby Vision, Android TV 11: Specs, Price, Sale and More: Specs, Features and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X