Home
Gadgets

சியோமி அறிமுகம் செய்த புதிய 4கே டிவிகள்.. 65 இன்ச் முதல் 98 இன்ச் வரை.. எந்த மாடல்? என்ன விலை?

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி டிவி எஸ் ப்ரோ ஆர்ஜிபி-மினி எல்இடி 2027 (Xiaomi TV S Pro RGB Mini LED 2027) சீரிஸ் மாடல்களை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதுவும் 65-இன்ச், 75-இன்ச், 85-இன்ச், 85-இன்ச் மற்றும் 98-இன்ச் என நான்கு அளவுகளில் இந்த புதிய டிவி சீரிஸ் வெளியாகி உள்ளது. இப்போது இந்த புதிய டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சியோமி டிவி எஸ் ப்ரோ ஆர்ஜிபி-மினி எல்இடி 2027 அம்சங்கள் (Xiaomi TV S Pro RGB Mini LED 2027 Specifications): 4கே ரெசல்யூஷன் கொண்ட டிஸ்பிளேவுடன் இந்த புதிய சியோமி டிவிகள் வெளியாகி உள்ளன. 5000 நிட்ஸ் வரை பிரைட்ன்ஸ், ஆர்ஜிபி லைட்டிங், 180 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (180Hz Refresh Rate) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவிகளின் டிஸ்பிளேவில் உள்ளன.

சியோமி அறிமுகம் செய்த புதிய 4கே டிவிகள்.. 65 இன்ச் முதல் 98 இன்ச் வரை!

சியோமி டிவி எஸ் ப்ரோ ஆர்ஜிபி-மினி எல்இடி 2027 சீரிஸ் மாடல்கள் வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable refresh rate), (MEMC) என்று அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஏம்டி ஃப்ரீசின்க் பிரீமியம் ப்ரோ (AMD FreeSync Premium Pro) போன்ற பல கேமிங் அம்சங்களைக் கொண்டுள்ளன.

குறிப்பாக கேமிங் பயனர்களுக்குத் தகுந்தபடி இந்த சியோமி ஸ்மார்ட் டிவிகளில் பல சிறப்பான வசதிகள் உள்ளன. மேலும் சக்திவாய்ந்த குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ73 பிராசஸர் (quad-core Cortex-A73 processor) உடன் இந்த சியோமி டிவிகள் வெளியாகி உள்ளன. இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

HyperOS 4 மூலம் சியோமி டிவி எஸ் ப்ரோ ஆர்ஜிபி-மினி எல்இடி 2027 சீரிஸ் மாடல்கள் இயங்குகின்றன. குறிப்பாக இதில் மேம்பட்ட பல புதிய அம்சங்கள் இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி உடன் இந்த சியோமி ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதுவும் இந்த ஸ்மார்ட் டிவிகளின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

இந்த டிவிகளில் ஆடியோவுக்காக 130W திறன் கொண்ட 2.1.2-சேனல் ஸ்பீக்கர் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் மேல்புறம் ஒலியை வெளியிடும் ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-பில்ட் சப்-வூஃபர் உள்ளது. மேலும், சிறந்த ஒலி தரத்திற்காக Harman டியூனிங் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் வரும் Bluetooth ரிமோட்டில் NFC வசதி உள்ளது. இதன் மூலம் எளிதாக காஸ்டிங் செய்யலாம். ரிமோட்டை USB-C மூலம் சார்ஜ் செய்யவும் முடியும்.

இந்த புதிய சியோமி டிவிகளில் Millimeter-Wave Radar சென்சார் உள்ளது. இந்த சென்சார் பார்வையாளர்கள் எந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப திரையின் படத்தைத் தானாகச் சரிசெய்யும்.

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் சியோமி டிவி எஸ் ப்ரோ ஆர்ஜிபி-மினி எல்இடி 2027 சீரிஸ் மாடல்களில் உள்ளன. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் அனைத்து சிறப்பான அம்சங்களும் இந்த புதிய டிவிகளில் உள்ளன.

சியோமி அறிமுகம் செய்த புதிய 4கே டிவிகள்.. 65 இன்ச் முதல் 98 இன்ச் வரை!

சியோமி டிவி எஸ் ப்ரோ ஆர்ஜிபி-மினி எல்இடி 2027 சீரிஸ் விலை

  • சியோமி டிவி எஸ் ப்ரோ ஆர்ஜிபி-மினி எல்இடி சீரிஸ் 65-இன்ச் மாடலின் விலை 5,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.85,738)-ஆக உள்ளது.
  • சியோமி டிவி எஸ் ப்ரோ ஆர்ஜிபி-மினி எல்இடி சீரிஸ் 75-இன்ச் மாடலின் விலை 6,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,00,033)-ஆக உள்ளது.
  • சியோமி டிவி எஸ் ப்ரோ ஆர்ஜிபி-மினி எல்இடி சீரிஸ் 75-இன்ச் மாடலின் விலை 8,799 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,25,760)-ஆக உள்ளது.
  • சியோமி டிவி எஸ் ப்ரோ ஆர்ஜிபி-மினி எல்இடி சீரிஸ் 98-இன்ச் மாடலின் விலை 12,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,85,788)-ஆக உள்ளது.

சியோமி டிவி எஸ் ப்ரோ ஆர்ஜிபி-மினி எல்இடி சீரிஸ் மாடல்கள் தற்போது சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் இந்த டிவிகள் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi TV S Pro RGB-Mini LED 2027 launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X