வாங்குனா இந்த TV தான்.. 75 இன்ச் QD-மினி LED டிவி.. டால்வி விஷன்.. 32GB மெமரி.. ஹர்மன் ஆடியோ.. எந்த மாடல்?
சியோமி நிறுவனத்தின் பிரீமியம் மாடல்களான சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி சீரிஸ் 2026 (Xiaomi TV S Pro Mini LED Series 2026) களமிறங்கி இருக்கிறது. 75 இன்ச் டிஸ்பிளே மட்டுமல்லாமல், டால்பி விஷன், டால்பி அட்மோஸ், ஹர்மன் ஆடியோ, 32 ஜிபி மெமரி, 3 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த சியோமி டிவி மினி எல்இடி சீரிஸ் மாடல்களின் விவரம் இதோ
இது குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. ஆகவே, இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் ஓரிரு மாதங்களில் எதிர்பார்க்கலாம். டிஸ்பிளே மற்றும் ஆடியோ பீச்சர்களில் முந்தைய மாடல்களைவிட என்ஹான்ஸ் செய்யப்பட்ட பீச்சர்களை பார்க்க முடிகிறது. இதுபோக கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் பீச்சர்களும் இதில் கிடைக்கின்றன.

சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி சீரிஸ் 2026 அம்சங்கள்: இந்த சியோமி டிவியில் 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூடி மினி எல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. எம்இஎம்சி (MEMC) மூலம் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
அதேபோல இதில் எச்எல்ஜி (HLG) கிடைக்கிறது. மேலும், 1700 நிட்ஸ் பீக் பிரைடன்ஸ், டிசிஐ பி3 கலர் காமட் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கப்படுகிறது. பிரீமியம் டிவிகளில் கிடைக்கும் ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) கிடைக்கிறது. இதுபோக சியோமியின் பிரத்யேக பீச்சர்கள் உள்ளன.
ஆகவே, சியோமி விசுவல் என்ஜின் ப்ரோ (Xiaomi Visual Engine Pro) கிடைக்கிறது. இதில் விவிட் கலர் என்ஹான்ஸ்மெண்ட் கிடைக்கிறது. பிரீமியம் பிக்சர் குவாலிட்டி எதிர்பார்க்கலாம். மேலும், லைட் ரேஞ்ச் கன்ட்ரோல், பிரைட்னஸ் கன்ட்ரோல்களுக்கு குளோபல் டிம்மிங் என்ஜின் (Global Dimming Engine) கிடைக்கிறது.
கிளியர் மற்றும் டெப்த் பிக்சல் அவுட்புட் கொடுக்க டீப் கான்ட்ராஸ்ட் என்ஜின் (Deep Contrast Engine) கிடைக்கிறது. கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் கொடுக்க டைனாமிக் கிளாரிட்டி என்ஜின் (Dynamic Clarity Engine) கிடைக்கிறது. இப்படி ஒட்டுமொத்தமாக டிஸ்பிளே பீச்சர்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த வீடியோவுக்கு ஏற்ப ஆடியோ பீச்சர்கள் கிடைக்கின்றன.
இந்த சியோமி டிவி கியூடி-மினி எல்இடி டிவியில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது. அதேபோல ஹை-குவாலிட்டி டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X) சப்போர்ட் கிடைக்கிறது. 15W சவுண்ட் அவுட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதில் ஹர்மன் ஆடியோஈஎப்எக்ஸ் (Harman AudioEFX) டியூனிங் கிடைக்கிறது. ஆகவே, சினிமாடிக் லெவல் ஆடியோ அவுட்புட் எதிர்பார்க்கலாம்.
இந்த ஆடியே மற்றும் வீடியோ பீச்சர்களுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்க குவாட் கோர்டெக்ஸ் ஏ73 (Quad Cortex A73) சிப்செட் மற்றும் மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. மேலும், கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் 32 ஜிபி மெமரி கிடைக்கிறது. 3 ஜிபிக்கான ரேம் கொடுக்கப்படுகிறது. கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் காஸ்ட் கிடைக்கிறது.
கேமிங் பிரியர்களுக்கு கேம் பூஸ்ட் மோட் (Game Boost Mode) மற்றும் விஆர்ஆர் (VRR) உள்ளது. 360 டிகிரி ப்ளூடூத் ரிமோட் கிடைக்கிறது. 55 இன்ச் மாடலின் விலை ரூ.72,698ஆகவும், 65 இன்ச் மாடலின் விலை ரூ,93,533ஆகவும் இருக்கிறது. 75 இன்ச் மாடலின் விலை ரூ.1,14,366ஆகவும் இருக்கிறது. சியோமி குளோபல் மூலம் விற்பனைக்கு கிடைக்கிறது. விரைவில் இங்கு எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








