Home
Gadgets

அதிரும் மார்க்கெட்.. 4ஜிபி ரேம்.. டால்பி ஆடியோ.. அக்.26-ல் வருகிறது புதிய சியோமி ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவி மாடலுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சியோமி நிறுவனம் தனது புதிய 85 ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது வரும் அக்டோபர் 26-ம் தேதி சீனாவில் சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த சியோமி 14 போன்கள் உடன் சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 85-இன்ச் (Xiaomi TV S Pro Mini LED 85-inch) ஸ்மார்ட் டிவி மாடலும் அக்டோபர் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.26-ல் வருகிறது புதிய சியோமி ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

குறிப்பாக இந்த சியோமி போன்கள் மற்றும் 85-இன்ச் ஸ்மாரட் டிவிகள் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு தான் மற்ற நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் வெளியான இந்த டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 85-இன்ச் மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 85-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 10-பிட் கலர், டால்பி விஷன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளே ஆனது ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

சக்திவாய்ந்த குவாட்-கோர் ஏ73 பிராசஸர் உடன் இந்த சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 85-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய 85-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமாகும். எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் பில்ட்-இன், உள்ளிட்ட பல சிற்ப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமாகும்.

PatchWall + (பேட்ச்வால் +) ஆதரவைக் கொண்டு சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 85-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகமாகும். பின்பு ஸ்மார்ட் ரிமோட் வசியும் இந்த டிவி உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.. அதேபோல் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் கொண்டு வெளிவந்துள்ளன இந்த புதிய ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

அக்.26-ல் வருகிறது புதிய சியோமி ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ள இந்த அட்டகாசமான சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 85-இன்ச் ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்களும் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் சேர்க்கப்பட்டுள்ளன.

புளூடூத் 5.0, வைஃபை 6, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், ஏவி, 3.5எம்எம் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 85-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகமாகும். குறிப்பாக இந்த டிவி சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த டிவியில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi TV S Pro Mini LED 85-inch model will be launched on October 26: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X