அடேங்கப்பா என சொல்ல வைக்கும் விலை.. அறிமுகமானது Xiaomi 85 இன்ச் ஸ்மார்ட் டிவி.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2026 சீரிஸ் (Xiaomi TV S Pro Mini LED 2026 series) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 65 இன்ச், 75 இன்ச் மற்றும் 85 இன்ச் என மூன்று அளவுகளில் சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2026 சீரிஸ் வாங்க கிடைக்கும். இப்போது புதிய டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2026 அம்சங்கள் (Xiaomi TV S Pro Mini LED 2026 Specifications): அல்ட்ரா எச்டி 4கே ரெசல்யூஷன் (4K resolution) கொண்ட டிஸ்பிளேவுடன் இந்த புதிய சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2026 சீரிஸ் வாங்க கிடைக்கும். மேலும் இந்த டிவிகளின் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5200 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட் அம்சங்கள் உள்ளன.

இதுதவிர 95 சதவீதம் டிசிஐ பி3 கலர் காமட் (95% DCI-P3 Color Gamut), 10.7 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட அம்சங்களும் இந்த புதிய சியோமி டிவிகளில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகள் சிறந்த ஒரு தியேட்டர் அனுபவத்தை தரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய சியோமி டிவிகள் WHVA பேஸ் மற்றும் சிறப்பு ஆண்டி-க்ளேர் பூச்சுடன் வெளிவந்துள்ளன. பின்பு வைடு ஆங்கிள் பேனல் இந்த டிவிகளின் உள்ளன.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2026 சீரிஸ் மாடல்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம். பின்பு சியோமியின் ஹைப்பர்ஓஎஸ் 3 (HyperOS 3) மூலம் இந்த புதிய சியோமி டிவி மாடல்கள் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தரமான மீடியாடெக் 9655 சிப்செட் மற்றும் குவாட் கோர் கோர்டெக்ஸ்-ஏ73 சிபியு ஆதரவும் சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2026 சீரிஸ் மாடல்களில் உள்ளன. குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு கேமிங் ஆப்களை இந்த டிவியில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி உடன் இந்த புதிய சியோமி 65 இன்ச், 75 இன்ச் மற்றும் 85 இன்ச் மாடல்கள் வெளிவந்துள்ளன. பின்பு சியோமி நிறுவனத்தின் XM9000 இமேஜ் பிராசஸர், மாஸ்டர் இமேஜ் எஞ்சின் ஆகியவை சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2026 சீரிஸ் மாடல்களில் உள்ளன. இதன் மூலம் டிவிகளில் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும்.
Super XiaoAi வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவைக் கொண்டுள்ளன புதிய சியோமி டிவி மாடல்கள். பின்பு AI-அடிப்படையிலான அப்ஸ்கேலிங் மற்றும் நிகழ் நேரத்தில் நிறங்களைச் சரிசெய்யும் வசதியைக் கொண்டுள்ளன இந்த சியோமி டிவிகள். குறிப்பாக எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவும் இந்த டிவிகளில் உள்ளன.
இதுதவிர டால்பி விஷன், எச்டிஆர் 10 பிளஸ்,ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), ப்ரீசின்க் பிரீமியம் ப்ரோ (FreeSync Premium Pro), விஆர்ஆர் (VRR) உள்ளிட்ட அம்சங்களும் இந்த புதிய சியோமி டிவிகளில் உள்ளன. மேலும் இந்த டிவிகளுடன் ஒரு ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது.
டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 2.1.2-சேனல் ஸ்பீக்கர் சிஸ்டம் உடன் சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2026 சீரிஸ் வெளிவந்துள்ளன. குறிப்பாக இது 61W சவுண்ட் அவுட்புட் வழங்கும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இதன் மூலம் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏவி, லேன், ஆண்டெனா, அப்டிக்கல் அவுட், ப்ளூடூத் 5.2, வைஃபை 6 உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவிகளில் உள்ளன.
ஆனால் சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2026 சீரிஸ் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டிவிகள் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2026 சீரிஸ் 65-இன்ச் மாடலின் விலை 6,499 yuan (இந்திய மதிப்பில் ரூ.80,517)-ஆக உள்ளது. பின்பு இதன் 75 இன்ச் மாடலின் விலை 8,199 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,01,584)-ஆக உள்ளது. மேலும் இதன் 85-இன்ச் மாடலின் விலை 10,499 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,30,083)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications