Home
Gadgets

100 இன்ச் டிவியை அறிமுகம் செய்த Xiaomi.. டால்பி ஆடியோ.. 64ஜிபி மெமரி.. விலையை சொன்னா நம்புவீங்களா?

சியோமி நிறுவனம் தனது சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2025 (Xiaomi TV S Pro Mini LED 2025) மாடல்களை இன்று அறிமுகம் செய்துள்ளது. அதாவது 65-இன்ச், 75-இன்ச், 85-இன்ச், 100-இன்ச் அளவுகளில் இந்த டிவி வாங்க கிடைக்கும். குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த புதிய சியோமி டிவிகள் வெளிவந்துள்ளன. இப்போது இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2025 அம்சங்கள் (Xiaomi TV S Pro Mini LED 2025 Specifications): அதாவது இந்த 65-இன்ச், 75-இன்ச், 85-இன்ச் மற்றும் 100-இன்ச் மாடல்கள் 4கே மினி எல்இடி டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளன. மேலும் இந்த டிவிகளின் டிஸ்பிளேவில் 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

100 இன்ச் டிவியை அறிமுகம் செய்த Xiaomi..

இதுதவிர 95 சதவீதம் டிசிஐ பி3 கலர் காமட் (95% DCI-P3 Color Gamut), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி, டால்பி விஷன் (Dolby Vision), 1.07 பில்லியன் கலர்ஸ், 240 ஹெர்ட்ஸ் கேமிங் மோட் போன்ற பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த சியோமி ஸ்மார்ட் டிவிகள்.

அதேபோல் 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (3200 nits peak brightness) வசதியைக் கொண்டுள்ளன சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2025 மாடல்கள். எனவே இந்த டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம். குறிப்பாக இந்த டிவிகளின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

அதன்படி குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ74 மீடியாடெக் பிராசஸர் (Quad-Core Cortex A73 MediaTek processor) உடன் இந்த சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2025 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு கேமிங் பயனர்களுக்குத் தகுந்தபடி மாலி ஜி57 எம்சி1 ஜிபியு (Mali-G57 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள். எனவே சிறந்த கேமிங் அனுபவத்தை இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்கள் வழங்கும்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த 65-இன்ச், 75-இன்ச், 85-இன்ச் மற்றும் 100-இன்ச் மாடல்கள் வெளிவந்துள்ளன. எனவே இந்த டிவிகளில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் இந்த டிவிகளில் அனைத்து ஓடிடி ஆப்பைகளையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X) போன்ற ஆடியோ அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2025 மாடல். மேலும் 2x15W ஸ்பீக்கர்கள் இந்த புதிய டிவிகளில் உள்ளன. எனவே இந்த புதிய சியோமி டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும். பின்பு சியோமி ஹைபர்ஓஸ் 2 (Xiaomi HyperOS 2) மூலம் இந்த டிவிகள் இயங்குகின்றன.

வைஃபை 6 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11 ax), புளூடூத் 5.2 ( Bluetooth 5.2), எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், NFC ரிமோட் கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2025 மாடல்கள்.

100 இன்ச் டிவியை அறிமுகம் செய்த Xiaomi..

ஆனால் இந்த சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2025 மாடல்கள் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இந்த டிவிகள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த டிவிகளின் விலைகளைப் பார்க்கலாம்.

சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2025 சீரிஸ் 65-இன்ச் மாடலின் விலை 4,599 yuan (இந்திய மதிப்பில் ரூ.54,190)
சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2025 சீரிஸ் 75-இன்ச் மாடலின் விலை 6,499 yuan (இந்திய மதிப்பில் ரூ.76,580)
சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2025 சீரிஸ் 85-இன்ச் மாடலின் விலை 8,499 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,00,150)
சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 2025 சீரிஸ் 100-இன்ச் மாடலின் விலை 12,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,53,175)

photo credit: xiaomitime, xataka, Xiaomi

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi TV S Pro Mini LED 2025 series launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X