Home
Gadgets

98-இன்ச் டிவியை இந்தியாவில் களமிறக்கும் Xiaomi.. டால்பி அட்மாஸ்.. HDR 10 பிளஸ்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

சியோமி நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சியோமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது வரும் ஏப்ரல் 15-ம் தேதி இந்தியாவில் சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 (Xiaomi TV S Mini LED Series 2026) மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது சியோமி நிறுவனம். அதுவும் இந்த சீரிஸ் 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச், 85 இன்ச் மற்றும் 98 இன்ச் என ஐந்து மாடல்களில் அறிமுகமாகும். இப்போது இந்த டிவிகளின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

98-இன்ச் டிவியை இந்தியாவில் களமிறக்கும் Xiaomi.. எந்த மாடல்?

சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 அம்சங்கள் (Xiaomi TV S Mini LED Series 2026 specifications): இந்த புதிய சியோமி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 மாடல்கள் 4கே டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 3840 × 2160 பிக்சல்ஸ், 1200 நிட்ஸ் பிரைடன்ஸ், எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+), எச்எல்ஜி (HLG), 94 சதவீதம் டிசிஐ பி3 கலர் உள்ளிட்ட பல சிறப்பான டிஸ்பிளே அம்சங்கள் இந்த புதிய சியோமி டிவி மாடல்களில் இருக்கும்.

சியோமி அறிமுகம் செய்ய உள்ள 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச், 85 இன்ச் மற்றும் 98 இன்ச் மாடல்கள் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) ஆதரவைக் கொண்டுள்ளன. குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 85-இன்ச் மற்றும் 98-இன்ச் மாடல்கள் டால்பி விஷன் (Dolby Vision) ஆதரவைக் கொண்டுள்ளன. எனவே இந்த டிவிகள் மேம்பட்ட திரை அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த புதிய டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 மாடல்கள் வெளிவரும். ஆகவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கும்.

அதுவும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவிகளில் உள்ளன. ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) போன்ற அம்சங்களும் இந்த புதிய சியோமி மாடல்களில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

98-இன்ச் டிவியை இந்தியாவில் களமிறக்கும் Xiaomi.. எந்த மாடல்?

மேலும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்பீக்கர்கள் உடன் சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த டிவிகளில் பல்வேறு ஆடியோ அம்சங்களும் உள்ளன.

இந்த சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருப்பதால், இதன் ஆரம்ப விலை ரூ. 70,000-க்கு மேல் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photos credits: mi.com, Xiaomi

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi TV S Mini LED Series 2026 price and key specifications leaked ahead of India launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X