Home
Gadgets

மினி தியேட்டர் அளவுக்கு இருக்கு.. 32ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி அட்மாஸ்.. அறிமுகமானது Xiaomi 75 இன்ச் டிவி..

சியோமி நிறுவனம் புதிய 75-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது சியோமி டிவி எஸ் மினி எல்இடி 75 2025 மாடல் (Xiaomi TV S Mini LED 75 2025 model) தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக டால்பி அட்மாஸ், 32ஜிபி ஸ்டோரேஜ், குவாட் கார்டெக்ஸ் பிராசஸர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய டிவி வெளிவந்துள்ளது. இப்போது இந்த சியோமி டிவியின் விவரங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சியோமி டிவி எஸ் மினி எல்இடி 75 2025 அம்சங்கள் (Xiaomi TV S Mini LED 75 2025 specifications): மெட்டாலிக் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்பிளே (metallic full-screen display) உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் QD-மினி-எல்இடி டெக்னாலஜி (QD-Mini LED technology) ஆதரவு இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மினி தியேட்டர் அளவுக்கு இருக்கு.. அறிமுகமானது சியோமி 75-இன்ச் டிவி..

குறிப்பாக இந்த டிவியின் ஸ்கிரீன் ஆனது 4கே ரெசல்யூஷன் (4K resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி டிவி எஸ் மினி எல்இடி 75 2025 மாடல் ஆனது திரைப்படங்கள் மற்றும் கேமிங் வசதிக்கு தகுந்தபடி பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் வேகமாக நகரும் காட்சிகளுக்கு ஏற்றதாக இந்த டிவியில் டால்பி விஷன் IQ (Dolby Vision IQ) மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக இதன் மூலம் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

இதுதவிர ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) மற்றும் IMAX உள்ளடக்கம் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி. மேலும் 94 சதவீதம் டிசிஐ-பி3 வைடு கலர் காமட் (DCI-P3 Wide Colour Gamut) ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது சியோமி டிவி எஸ் மினி எல்இடி 75 2025 மாடல். இதன் மூலம் துல்லியமான நிறங்களை பார்க்க முடியும்.

கேமிங்கிற்காக, டிவியில் கேம் பூஸ்ட் மோட் (Game Boost Mode) ஆதரவு உள்ளது. அதுவும் இந்த கேமிங் மோட் 240 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் AI PQ மற்றும் AI SR தொழில்நுட்பங்களுடன் குவாட் கார்டெக்ஸ் ஏ73 பிராசஸர் ( Quad Cortex A73 processor) உடன் இந்த சியோமி டிவி வெளிவந்துள்ளது. அதுவும் இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் சியோமி டிவி எஸ் மினி எல்இடி 75 2025 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் வைஃபை 6 ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டிவி. கேமிங் மற்றும் ஸ்ட்ரீமிங் என இரண்டிற்கும் வைஃபை 6 ஆனது பயனுள்ள வகையில் இருக்கும்.

மினி தியேட்டர் அளவுக்கு இருக்கு.. அறிமுகமானது சியோமி 75-இன்ச் டிவி..

கூகுள் டிவி ஓஎஸ் மூலம் இந்த சியோமி டிவி எஸ் மினி எல்இடி 75 2025 மாடல் இயங்குகிறது. பின்பு பிளே ஸ்டோரில் இருந்து ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து இதில் பயன்படுத்தலாம். மேலும் கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய சியோமி டிவி. அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. அதுவும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இதன் ரிமோட்.

குரோம்காஸ்ட் (Chromecast) ஆதரவு, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய சியோமி டிவி வெளிவந்துள்ளது. ஆனால் சியோமி டிவி எஸ் மினி எல்இடி 75 2025 மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை சியோமி நிறுவனம். கூடிய விரைவில் இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் தெரியவரும், அப்போது அப்டேட் செய்கிறோம்.

photo courtesy: mi.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi TV S Mini LED 75 2025 model launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X