Home
Gadgets

98 இன்ச் டிவியை அறிமுகம் செய்த Xiaomi.. டால்பி அட்மாஸ்.. 64GB மெமரி.. விலையை சொன்னா நம்புவீங்களா?

சியோமி நிறுவனம் சியோமி டிவி எஸ் மினி எல்இடி 2025 (Xiaomi TV S Mini LED 2025) மாடல்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது. 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச், 85 இன்ச் மற்றும் 98 இன்ச் என ஐந்து அளவுகளில் இந்த டிவி வாங்க கிடைக்கும். குறிப்பாக அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன. இப்போது இந்த புதிய டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி டிவி எஸ் மினி எல்இடி 2025 அம்சங்கள் (Xiaomi TV S Mini LED 2025 Specifications): தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச், 85 இன்ச் மற்றும் 98 இன்ச் சியோமி டிவி மாடல்கள் 4கே மினி எல்இடி டிஸ்பிளே (4K mini LED display) வசதியுடன் வெளிவந்துள்ளன. எனவே இந்த டிவிகள் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

98 இன்ச் டிவியை அறிமுகம் செய்த Xiaomi.. விலையை சொன்னா நம்புவீங்களா?

அதேபோல் 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144 refresh rate), 1.07 பில்லியன் கலர்ஸ், 94 சதவீதம் டிசிஐ-பி3 கலர் காமட் (94% DCI-P3 Color Gamut), டால்பி விஷன், எச்டிஆர் 10 பிளஸ் 1700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளன சியோமி டிவி எஸ் மினி எல்இடி 2025 மாடல்கள்.

120 ஹெர்ட்ஸ் ஆதரவு கொண்ட எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவும் இந்த புதிய சியோமி டிவிகளில் உள்ளது. அதேபோல் AMD FreeSync பிரீமியம் ப்ரோ, 288Hz கேமிங் மோட் ஆதரவும் கொண்டுள்ளன சியோமி டிவி எஸ் மினி எல்இடி 2025 மாடல்கள்.

குவாட்-கோர் கோர்டெக்ஸ் ஏ73 மீடியாடெக் பிராசஸர் (Quad-Core Cortex A73 MediaTek processor) உடன் புதிய சியோமி டிவி எஸ் மினி எல்இடி 2025 மாடல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த டிவிகளுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் புதிய சியோமி டிவிகளில் உள்ளன. எனவே கேமிங் பயனர்கள் இந்த புதிய டிவிகளை நம்பி வாங்கலாம். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் சியோமி டிவி எஸ் மினி எல்இடி 2025 மாடல்கள் வெளிவந்துள்ளன. பின்பு சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 மூலம் இந்த டிவிகள் இயங்குகின்றன.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் டிடிஎஸ் எக்ஸ் (DTS X)ஆதரவு கொண்ட இரண்டு 15W ஸ்பீக்கள் இந்த புதிய சியோமி டிவிகளில் உள்ளன. ஹர்மன் மாஸ்டர் சவுண்ட்(HARMAN Master Sound) ஆதவும் இந்த டிவிகளில் உள்ளன. எனவே இந்த புதிய சியோமி டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், போர்ட், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் சியோமி டிவி எஸ் மினி எல்இடி 2025 மாடல்களில் உள்ளன. மேலும் NFC ரிமோட் கண்ட்ரோல் ஆதரவுகளும் இந்த புதிய டிவிகளில் உள்ளன.

ஆனால் இந்த புதிய சியோமி டிவிகள் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் இந்த டிவிகள் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது டிவிகளின் விலையைப் பார்க்கலாம்.

சியோமி டிவி எஸ் மினி எல்இடி 2025 விலை

சியோமி டிவி எஸ் மினி எல்இடி 2025 55 இன்ச் மாடலின் விலை 2,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.35,805)
சியோமி டிவி எஸ் மினி எல்இடி 2025 65 இன்ச் மாடலின் விலை 3,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.47,745)
சியோமி டிவி எஸ் மினி எல்இடி 2025 75 இன்ச் மாடலின் விலை 4,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.59,705)
சியோமி டிவி எஸ் மினி எல்இடி 2025 85 இன்ச் மாடலின் விலை 6,799 yuan (இந்திய மதிப்பில் ரூ.81,200)
சியோமி டிவி எஸ் மினி எல்இடி 2025 92 இன்ச் மாடலின் விலை 9,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,19,420)

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi TV S Mini LED 2025 series launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X