Home
Gadgets

அதிரவிடும் விலை.. 32ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. அறிமுகமானது Xiaomi 100 இன்ச் 4K டிவி.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் தனது சியோமி டிவி மேக்ஸ் சீரிஸ் 2025 (Xiaomi TV Max Series) மாடல்களை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய டிவிகள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய சியோமி டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி டிவி மேக்ஸ் சீரிஸ் 2025 அம்சங்கள் (Xiaomi TV Max Series 2025 Specifications): அதாவது சியோமி டிவி மேக்ஸ் சீரிஸ் 2025 ஆனது 85 இன்ச் மற்றும் 100 இன்ச் என இரண்டு அளவுகளில் வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த புதிய டிவிகள் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதிரவிடும் விலை.. அறிமுகமானது Xiaomi 100 இன்ச் 4K டிவி.. எந்த மாடல்?

அதேபோல் சியோமி டிவி மேக்ஸ் சீரிஸ் 2025 ஆனது 85 இன்ச் மற்றும் 100 இன்ச் மாடல்கள் 4கே 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கியூஎல்இடி டிஸ்பிளே (4K 144Hz QLED display) உடன் வெளிவந்துள்ளன. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 × 2160 பிக்சல்ஸ், டிசிஐ-பி3 94 சதவீதம் (DCI-P3 94%),1.09 பில்லியன் கலர்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள், குவாண்டம் டாட் டிஸ்பிளே, 4எம்எஸ் அல்ட்ரா-லோ லேடன்சி, ஏடிஎம் ஃப்ரீசிங்க் (AMD FreeSync) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+), எச்எல்ஜி (HLG), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த சியோமி டிவிகளில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இந்த சியோமி டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். மேலும் கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த டிவியில் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அதிரவிடும் விலை.. அறிமுகமானது Xiaomi 100 இன்ச் 4K டிவி.. எந்த மாடல்?

குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ73 (Quad-core Cortex A73) பிராசஸர் உடன் இந்த சியோமி 85 மற்றும் 100 இன்ச் டிவிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த டிவிகளுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் இந்த டிவிகளில் மாலி-ஜி52 (2இஇ) எம்சி1 (Mali-G52 (2EE) MC1) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV operating system) மூலம் இந்த சியோமி டிவி மேக்ஸ் சீரிஸ் 2025 மாடல்கள் இயங்குகின்றன. மேலும் சியோமி டிவி பிளஸ் ஆதரவுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன. அதேபோல் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளன இந்த புத்தம் புதிய சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்கள். மேலும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் 15W ஸ்பீக்கர்கள் கொண்டு வெளிவந்துள்ளன புதிய சியோமி டிவிகள்.

கூகுள் அசிஸ்டண்ட் பில்ட்-இன் (Google Assistant built-in), குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast built-in), மிராகாஸ்ட் (Miracast), ஆப்பிள் ஏர்பிளே (Apple AirPlay) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளன இந்த 85 இன்ச் மற்றும் 100 இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவிகள்.

அதிரவிடும் விலை.. அறிமுகமானது Xiaomi 100 இன்ச் 4K டிவி.. எந்த மாடல்?

புளூடூத் வி5.2, வைஃபை 6 டூயல் பேண்ட், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் (லேன்), ஆப்டிகல் டிஜிட்டல் ஆடியோ அவுட், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் சியோமி டிவி மேக்ஸ் சீரிஸ் 2025 மாடல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

சியோமி டிவி மேக்ஸ் சீரிஸ் 100 இன்ச் 2025 (Xiaomi TV Max 100 2025) மாடலின் விலை ரூ.1,86,970-ஆக உள்ளது. பின்பு இதன் 85 இன்ச் (Xiaomi TV Max 85 2025) மாடலின் விலை ரூ.1,21,530-ஆக உள்ளது. குறிப்பாக இந்த புதிய சியோமி டிவிகள் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.

photo credit: fonearena, xiaomi

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi TV Max Series 2025 launched: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X