Home
Gadgets

சீனாக்காரன் செதுக்கி வச்சிருக்கான்.. ஆண்ட்ராய்டு 11.. டால்பி அட்மாஸ்.. 100 இன்ச் Xiaomi டிவி அறிமுகம்..

இந்தியாவில் சியோமி (Xiaomi) டிவிகளுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. அதாவது சாம்சங், எல்ஜி போன்ற டிவிகளை விட சியோமி டிவிகளை வாங்க தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக பல அசத்தலான புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவிகள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய 100-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது சியோமி நிறுவனம் தற்போது சியோமி டிவி மேக்ஸ் 100 (Xiaomi TV Max 100) மாடலை தான் உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பெசல்-லெஸ் டிசைன், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் இப்போது இந்த டிவியின் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சீனாக்காரன் செதுக்கி வச்சிருக்கான்.. 100 இன்ச் Xiaomi டிவி அறிமுகம்..

சியோமி டிவி மேக்ஸ் 100 அம்சங்கள் (Xiaomi TV Max 100 Specifications): 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் 3,840 x 2,160 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 94% டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி டிவி மேக்ஸ் 100-இன்ச் மாடல்.

எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவுடன் இந்த புத்தம் புதிய சியோமி டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடியும் இந்த ஸ்மார்ட் டிவி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளத்தை (Android TV 11 OS) அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சியோமி 100-இன்ச் ஸ்மார்ட் டிவி. எனவே பல்வேறு புதிய அம்சங்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் யூடியூப் (YouTube), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) மற்றும் ஆப்பிள் டிவி (Apple TV) போன்ற தளங்களில் இருந்து ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

சியோமி டிவி மேக்ஸ் 100-இன்ச் மாடலில் கூகுள் குரோம்காஸ்ட் (Google Chromecast) மற்றும் மிராகாஸ்ட் (Miracast)ஆதரவுகள் உள்ளன. மேலும் இந்த டிவியில் கூகுள அசிஸ்டண்ட் ஆதரவும் உள்ளது. எனவே வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் இந்த டிவியை இயக்க முடியும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

குறிப்பாக பெசல-லெஸ் (bezel-less) டிசைன் கொண்டுள்ளது இந்த 100-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் டால்பி அட்மாஸ் ( Dolby Atmos) மற்றும் டிடிஎஸ் (DTS) உள்ளிட்ட ஆடியொ அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி டிவி. பின்பு இதில் 15 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

சீனாக்காரன் செதுக்கி வச்சிருக்கான்.. 100 இன்ச் Xiaomi டிவி அறிமுகம்..

புளூடூத் 5.0 (Bluetooth 5.0), வைஃபை 6 (Wi-Fi 6), எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஈதர்நெட் (Ethernet) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஸ்மார்ட் டிவியின் உள்ளன. மேலும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. அதேபோல் இந்த டிவி ஒரு மினி தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம்.

சியோமி டிவி மேக்ஸ் 100-இன்ச் மாடல் தற்போது அறிமுகம் மட்டும் தான் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை சியோமி நிறுவனம். கூடிய விரைவில் இந்த டிவி அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த டிவிக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi TV Max 100 with 4K resolution launched: Check Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X