Home
Gadgets

75 இன்ச் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்த Xiaomi.. டால்பி ஆடியோ.. 32ஜிபி மெமரி.. எந்த மாடல்? என்ன விலை?

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி டிவி எப்எக்ஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 (Xiaomi TV FX Mini LED Series 2026) மாடல்களை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 43-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் என நான்கு அளவுகளில் இந்த டிவி சீரிஸ் வாங்க கிடைக்கும். இப்போது இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி டிவி எப்எக்ஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 அம்சங்கள் ( Xiaomi TV FX Mini LED Series 2026 specifications): தற்போது அறிமுகம் செய்யப்பட்ட 43-இன்ச், 55-இன்ச், 65-இன்ச், 75 இன்ச் டிவி மாடல்கள் மினி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளன. மேலும் இந்த டிவிகளின் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 60Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

75 இன்ச் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்த Xiaomi.. எந்த மாடல்?

அதேபோல் இதன் 55-இன்ச், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் மாடல்களில் எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology), ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM), , ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) போன்ற அட்டகாசமான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த டிவிகள் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

குறிப்பாக சியோமி டிவி எப்எக்ஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 மாடல்களில் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad-core Cortex A55 processor) வசதி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் இந்த டிவிகளில் மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் உள்ளது.

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த புதிய சியோமி டிவி எப்எக்ஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஃபயர் டிவி (Fire TV) மூலம் இந்த டிவிகள் இயங்குகிறது. குறிப்பாக 12000-க்கும் மேற்பட்ட ஆப்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும். அதுவும் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல முன்னணி ஓடிடி ஆப்களை இந்த டிவிகளில் பயன்படுத்தலாம்.

இந்த புதிய சியோமி டிவிகள் உடன் அலெக்ஸா பட்டனுடன் கூடிய ரிமோட் ஒன்று கிடைக்கும். மேலும் அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், அமேசான் மியூசிக் ஆப்களின் ஷார்ட்கட் பட்டன்கள் இந்த ரிமோட்டில் உள்ளன. வைஃபை 802.11 ஏசி, ஏர்பிளே, மிராகாஸ்ட், ப்ளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சியோமி டிவிகளில் உள்ளன.

டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் எச்டி (DTS HD), டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual:X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் சியோமி டிவி எப்எக்ஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 மாடல்களில் உள்ளன. இதன் 43 இன்ச் டிவி 20W ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது. மேலும் இதன் 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச் டிவிகள் இரண்டு ஃபுல் ரேஞ்ச் ஸ்பீக்கர்கள் (two full-range speakers) கொண்டுள்ளன. ஆகவே இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

75 இன்ச் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்த Xiaomi.. எந்த மாடல்?

சியோமி டிவி எப்எக்ஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 விலை
சியோமி டிவி எப்எக்ஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 43 இன்ச் மாடலின் விலை ரூ.32,999-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக இந்த மாடலை ரூ.29,999 விலையில் வாங்க முடியும்.

சியோமி டிவி எப்எக்ஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 55 இன்ச் மாடலின் விலை ரூ.44,999-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக இந்த மாடலை ரூ.39,999 விலையில் வாங்க முடியும்.

சியோமி டிவி எப்எக்ஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 65 இன்ச் மாடலின் விலை ரூ.64,999-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக இந்த மாடலை ரூ.59,999 விலையில் வாங்க முடியும்.

சியோமி டிவி எப்எக்ஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 75 இன்ச் மாடலின் விலை ரூ.84,999-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக இந்த மாடலை ரூ.79,999 விலையில் வாங்க முடியும்.

வரும் ஜூன் 11 ஆம் தேதி முதல் இந்தியாவில் எம்.காம், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் இந்த டிவிகளை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Xiaomi TV FX Mini LED Series 2026 launched in India: Check Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X