செம ஆஃபரில் புது Xiaomi 4கே டிவி.. டால்பி அடியோ.. 32ஜிபி மெமரி.. எச்டிஆர் 10.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ஷாவ்மீ நிறுவனத்தின் 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த டிவி அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் ஷாவ்மீ டிவி எப்எக்ஸ் மினி எல்இடி 43-இன்ச் (xiaomi tv fx mini led 43 inch) மாடலுக்கு 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.32,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.30,999 விலையில் வாங்கிவிட முடியும்.

ஷாவ்மீ டிவி எப்எக்ஸ் மினி எல்இடி 43 இன்ச் அம்சங்கள் (xiaomi tv fx mini led 43 inch Specifications): இந்த ஷாவ்மீ டிவி குவாண்டம் டாட் மினி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர் 10, 3840 x 2160 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle),550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology), 1.07 மில்லியன்ஸ் கலர்ஸ், ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) போன்ற அட்டகாசமான அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
ஷாவ்மீ டிவி எப்எக்ஸ் மினி எல்இடி 43 இன்ச் மாடல் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad-core Cortex A55 processor) வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் இந்த டிவியில் மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் உள்ளது.
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த ஷாவ்மீ டிவி எப்எக்ஸ் மினி எல்இடி 43 இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஃபயர் டிவி (Fire TV) மூலம் இந்த டிவி இயங்குகிறது. குறிப்பாக 12000-க்கும் மேற்பட்ட ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். அதுவும் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல முன்னணி ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

இந்த புதிய ஷாவ்மீ டிவி உடன் அலெக்ஸா பட்டனுடன் கூடிய ரிமோட் ஒன்று கிடைக்கும். மேலும் அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், அமேசான் மியூசிக் ஆப்களின் ஷார்ட்கட் பட்டன்கள் இந்த ரிமோட்டில் உள்ளன. வைஃபை 802.11 ஏசி, ஏர்பிளே, மிராகாஸ்ட், ப்ளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஷாவ்மீ டிவியில் உள்ளன.
டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் எச்டி (DTS HD), டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual:X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் ஷாவ்மீ டிவி எப்எக்ஸ் மினி எல்இடி 43 இன்ச் மாடலில் உள்ளன. மேலும் இந்த டிவி 20W ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது. எனவே இந்த மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.


Click it and Unblock the Notifications